********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தமிழ்நாட்டுலேயே தக்லீத் செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜமாத்துதான்; அண்ணன் அசத்தல் காமெடி!

Monday, March 5, 2012

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''நிர்வாக விசயத்திலும், மார்க்க விசயத்திலும் யாரையும் தக்லீது  செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜமாத்துதான் என்று அண்ணன் கடந்த 13  ஆம் தேதி அடுத்தவன் காசில் தன் பெயரில் நடத்தக்கூடிய ஆன்லைன் பீஜேயில் கூறியுள்ளார். அதோடு இப்படிப்பட்ட ஜமாத்தை பார்த்து தக்லீது செய்யக்கூடியவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவ்வாறு கூறினால் தான் மக்கள் இந்த ஜமாத்தைப் புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்த குற்றத்தை நம்மீது சுமத்தப் பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அண்ணன் ஜமாத்தில் தக்லீதுகளே இல்லாத நிலையில் எதிரிகள் இப்படி அநியாயமாக குற்றம் சுமத்தப் பார்க்கிறார்கள் என்று புலம்பும் அண்ணன், கொஞ்ச நாளைக்கு முன்னால்,  ''என் ஜமாஅத்து ஆள்களில் 90  சதவிகிதம் பேர் ஆய்வு செய்யாமல் நாங்கள் சொல்வதை பின்பற்றும் தலையாட்டிகள் தான் என்று தனது அமுதவாயால் சொல்வதை இந்த வீடியோவில் பாருங்கள்;
பொதுவாக வயது ஏற ஏற நினைவாற்றல் இறங்கும் என்பது நடைமுறையில் உள்ளதுதான். அண்ணன் என்னதான் தன்னை '20 ' ஆக காட்டிக் கொண்டாலும், அவரது நினைவாற்றல் என்னவோ அவரது உண்மையான வயதைக் காட்டி விடுகிறது. ஹதீஸ்களில் கூட வயதான பின் நினைவாற்றல் தடுமாறியவர்களின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் அண்ணனின் தம்பிகள், நேற்று சொன்னதை இன்று மறந்து முரண்பட்டு பேசும் அண்ணனை பின்பற்றுவதிலும் கவனம் செலுத்தட்டும். ஆனாலும் தக்லீது செய்வது கூடாது என அண்ணன் சொல்லும் அறிவுரைக்காக அண்ணனை பாராட்டுகிறோம். 

இனிமேலாவது அண்ணன் என்ன செஞ்சாலும் தலையாட்டாமல் அண்ணனின் அறிவுரைக்கு மதிப்பளித்து, அவரை பின்பற்றும் தம்பிகள் குர்ஆன்-ஹதீஸை பின்பற்ற முன்வரட்டும். தக்லீதிலிருந்து விடுபட, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்.
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''நிர்வாக விசயத்திலும், மார்க்க விசயத்திலும் யாரையும் தக்லீது  செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜமாத்துதான் என்று
அண்ணன் கடந்த 13  ஆம் தேதி அடுத்தவன் காசில் தன் பெயரில் நடத்தக்கூடிய ஆன்லைன் பீஜேயில் கூறியுள்ளார். அதோடு இப்படிப்பட்ட ஜமாத்தை பார்த்து தக்லீது செய்யக்கூடியவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவ்வாறு கூறினால் தான் மக்கள் இந்த ஜமாத்தைப் புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்த குற்றத்தை நம்மீது சுமத்தப் பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அண்ணன் ஜமாத்தில் தக்லீதுகளே இல்லாத நிலையில் எதிரிகள் இப்படி அநியாயமாக குற்றம் சுமத்தப் பார்க்கிறார்கள் என்று புலம்பும் அண்ணன், கொஞ்ச நாளைக்கு முன்னால்,  ''என் ஜமாஅத்து ஆள்களில் 90  சதவிகிதம் பேர் ஆய்வு செய்யாமல் நாங்கள் சொல்வதை பின்பற்றும் தலையாட்டிகள் தான் என்று தனது அமுதவாயால் சொல்வதை இந்த வீடியோவில் பாருங்கள்;
பொதுவாக வயது ஏற ஏற நினைவாற்றல் இறங்கும் என்பது நடைமுறையில் உள்ளதுதான். அண்ணன் என்னதான் தன்னை '20 ' ஆக காட்டிக் கொண்டாலும், அவரது நினைவாற்றல் என்னவோ அவரது உண்மையான வயதைக் காட்டி விடுகிறது. ஹதீஸ்களில் கூட வயதான பின் நினைவாற்றல் தடுமாறியவர்களின் அறிவிப்பை ஏற்க மறுக்கும் அண்ணனின் தம்பிகள், நேற்று சொன்னதை இன்று மறந்து முரண்பட்டு பேசும் அண்ணனை பின்பற்றுவதிலும் கவனம் செலுத்தட்டும். ஆனாலும் தக்லீது செய்வது கூடாது என அண்ணன் சொல்லும் அறிவுரைக்காக அண்ணனை பாராட்டுகிறோம். 

இனிமேலாவது அண்ணன் என்ன செஞ்சாலும் தலையாட்டாமல் அண்ணனின் அறிவுரைக்கு மதிப்பளித்து, அவரை பின்பற்றும் தம்பிகள் குர்ஆன்-ஹதீஸை பின்பற்ற முன்வரட்டும். தக்லீதிலிருந்து விடுபட, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010