********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சிலை திறக்க வாங்க. ..தமுமுகவின் தவ்ஹீத்(?) அழைப்பு

Monday, March 5, 2012

சிலை திறக்க வாங்க….
நரகப்படுகுழியை நோக்கி அழைக்கும் மமக…
சிலை திறக்க வாங்க: தமுமுகவின் தவ்ஹீத் (?) அழைப்பு
ஏகத்துவப் பிரச்சாரம்தான் எங்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறி ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, ஏகத்துவபிரச்சாரத்தை எட்டி உதைத்து
விட்டு, அரசியல் ஆசையில் களம்காணச் சென்ற முன்னாள் சகாக்கள் தங்களது பதவி
சுகத்திற்காக எத்தகைய தியாகத்தையும் (?) செய்ய நாங்கள் தயார் என்பதை பறைசாற்றும் விதமாக தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு பறைசாற்றி வருகின்றார்கள்.
N சந்தியாகப்பர் திருத்தேர் திருவிழாவில் அவர்களது தலைவர் கலந்து கொண்டது..
N ஏசுவின் நீரோடை என்ற ஏசுவின் புகழ்பாடும் சீடிக்களை அவர்களது தலைவரே வெளியிட்டது
N பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் ஆபாச விருந்தில் கலந்து கொண்டது..
N ஆதீனத்திடம் சென்று ஆசிவாங்கியது..
N தீபாவளி, கிறிதும வாழ்த்துக்கள் கூறி போஸ்டர் அடித்தது..
N வாக்காளப் பெருமக்களே! வணக்கம் என்று கூறி வாக்கு கேட்டது..
N உங்கள் பாதம்தொட்டுக் கேட்டுக் கொள்கின்றோம் என்று நோட்டீ போட்டு சரணாகதி அடைந்தது..
N ஜோதி பாசு புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியது..
N பழனி பாதயாத்திரைக்கு பல்பு வழங்கியது..
N ஊழல் பெருச்சாளி அன்னா ஹசாரேவை வாழ்வின் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்து நபிகளாரை இழிவுபடுத்தியது...
என்று இவர்களது கேடுகெட்ட செயல்கள் ஏராளம். தாராளம்.
இவற்றை மட்டும் நாம் பட்டியல் போட்டு உணர்வு இதழில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம்.இவர்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய கேடு கெட்ட செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றையும் தற்போது வழங்கியுள்ளார்கள்.தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறையில் நடந்த ”சின்னதுரை” என்பவரது சிலை திறப்பு விழாவிற்கு இவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எங்களுக்கு கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. உலக ஆதாயத்தினை அடைவதற்காக நாங்கள் எத்தகைய மானங்கெட்டச் செயலையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர்.
மனித நேய மக்கள் கட்சியின் பெருநகர செயலாளரும், ஹாஜியார் கிளை செயலாளரும் இணைந்து சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம் என்று போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளார்கள் என்றால் ஏகத்துவக் கொள்கையை குழிதோண்டி புதைப்பதுதான் இவர்களது பிரதான கொள்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.
நரகப் படுகுழியை நோக்கி மக்களை அழைப்பதற்கு வால்போஸ்டர் அடிக்கும் வேலையை இவர்கள் செய்கின்றார்கள் என்றால் இவர்களது மனிதநேயப் பணியை என்னவென்பது?
இப்படியே இவர்கள் போய்க் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தர்கா திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்தாலும் அடிப்பார்கள் போல. அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர்களை முஸ்லிம் இயக்கமாக கருதும் நியாயவான்கள் இனியாவது திருந்தட்டும். இவர்களுக்கு நன்கொடை வழங்கும் கொடையாளர்கள் இனியாவது சிந்திக்கட்டும். தாங்கள் வழங்கும் நன்கொடைகள் இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடிப்பதிலும், இணைவைப்பு காரியங்களுக்கு கரம் கொடுப்பதிலும்தான் செலவிடப்படுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
அறியாமையின் காரணமாக இணை வைப்புக் கொள்கையிருக்கும் இந்த சமுதாயத்தை சத்தியப் பிரச்சாரத்தின் வாயிலாக சுவனப்பாதைக்கு நாம் அழைத்துச் செல்லுகின்ற இவ்வேளையில் நிரந்தர நரகப் படுகுழியில் தள்ளும் இணை வைப்புக் காரியத்தை செய்ய, சிலை திறக்க இவர்கள் மக்களை அழைப்பது இவர்களுக்கு இந்த சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை (?) பறைசாற்றுகிறது.
குறிப்பு: இதே தஞ்சை மாவட்டத்தில் தான் இஸ்லாமிய சமுதாய மக்களிடத்தில் வசூல் செய்த தொகையில் இருந்து இவர்களது இயக்கம் சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை சன்டிவியின் ‘நாதஸ்வரம்’ மெகா சீரியலில் நடிக்க வாடகைக்கு விட்டனர் என்பது நன்கொடையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
-நன்றி: உணர்வு
தமுமுகவின் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்த தமுமுக கொள்கைச் சகோதரர்கள், பிழைக்க வேறு வழியில்லாமல் மக்களிடம் வசூல் செய்து வாங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு விட்டு பிழைத்த காட்சி.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010