********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பாலை வெறுக்கும் பூனையா? புகழை வெறுக்கும் அண்ணனா?

Monday, March 5, 2012

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

தமிழகத்தில் எல்லோருமே குப்ரில் மரணித்தது போன்றும், தமிழகத்தில் தவ்ஹீத் வரலாறு என்பது அல்லாஹ்வும் இல்லை- குல்லாவும் இல்லை என்று கிளம்பிய அண்ணனுக்கு பின் தான் என்று சொல்லும் அளவுக்கு புகழ் போதை கொண்டவர்கள் அண்ணன் ஜமாத்தினர். அந்த அண்ணன் கேள்வி ஒன்றுக்கு அபகரிக்கப்பட்ட இதழில் பதிலளிக்கும் போது இப்படி கூறியுள்ளார்.

''தனிப்பட்ட முறையில் பெயரை மட்டுமே பயன்படுத்துவது என்றும், பட்டமும் பதவிகளும் அடைமொழிகளும் வேண்டாம் என்று முடிவு செய்து சில ஆண்டுகளாக இதைக் கண்டிப்புடன் கடைபிடித்து வருகிறேன்.நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என் பெயருடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்றோ, மவ்லவி உலவி என்றோ,அறிஞர் என்றோ வேறு எந்த அடைமொழியுமோ பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறேன்.இது என்னளவில் நான் எடுத்துக் கொண்ட முடிவு தான். எனக்குப் பிடிக்கவில்லை என்பது தான் இதற்கு காரணம்.'' என்று கூறியுள்ளார்.

ஒருவர் தனது பெயருடன் வேறு எந்த அடைமொழியும் பயன்படுத்தப்படுவதை வெறுப்பவர் என்றால் அதை தான் மட்டுமல்லாது, தன்னைப் பின்பற்றுபவர்களையும் செயல்படுத்தச் செய்யவேண்டும். தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக விநியோகிக்கப்படும் பிரசுரங்களிலோ, போஸ்டர்களிலோ அடைமொழி குறிப்பிட்டாலோ, மேடையில் அடைமொழியோடு விளித்துப் பேசினாலோ நான் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பேன் என்று சொல்லவேண்டும். ஆனால் அண்ணன் இவ்வாறு சொன்னாரா? அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் பிரசுரங்கள் போஸ்டர்களில், ததஜ மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் என்று தானே அச்சடிக்கப்படுகிறது. இல்லையென்று அண்ணனால் மறுக்க முடியுமா? 

அதுமட்டுமல்ல. அண்ணனை மேடையில் பேச அழைக்கும் போது இதோ! பீ.ஜைனுல் ஆபிதீன் பேசுகிறார் என்று மட்டும் தான் சொல்லப்படுகிறதா? மவ்லவி என்றும் மாநிலத்தலைவர் என்றும் சொல்லவே இல்லையா? அவ்வளவு ஏன்? அதையும் தாண்டி அண்ணனை பொதுக்கூட்ட மேடையில்'தொண்டியிலிருந்து  கிளம்பிய பேரொளி' என்றெல்லாம் ஏகத்துக்கும் புகழ்மாலை சூட்டப்பட்டப்போது அண்ணன் வெறுத்துப்போய்  அவ்வாறு பேசியவரை மேடையிலேயே கண்டித்தாரா? அல்லது  அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்தாரா? இல்லையே!

இவர் அமைப்பு ரீதியாக எழுதும் கடிதங்களில் இவரது பெயருக்கு கீழே மாநிலத்தலைவர் என்று போட்டதே இல்லையா? ஆக, நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என் பெயருடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்றோ, மவ்லவி உலவி என்றோ,அறிஞர் என்றோ வேறு எந்த அடைமொழியுமோ பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறேன் என்று அண்ணன் சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா?

சரி. அண்ணன் 'உலவி' என ஆரம்பத்தில் போட்டு வந்தார். பின்பு போடாமல் விட்டதற்கு காரணம், 'எங்க கொள்கையை விமர்சிக்கிற உனக்கு எங்க பட்டம் ஒரு கேடா? என்று அண்ணன் பட்டம் வாங்கிப் பறக்கவிட்ட மதரசா தரப்பில் விமர்சித்ததால் தான் அண்ணன் 'உலவி'யை துறந்தார் என்று ஒரு பேச்சு அரசால் புரசலாக உண்டு. மெய்யாலுமா?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010