********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சங்பரிவாரின் ஊதுகுழலாக மாறிய உணர்வு!

Monday, March 5, 2012

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

தேர்தல் என்று வந்துவிட்டாலே ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும்-பாலாறும் ஓட வைப்போம்' என்ற ரீதியிலான அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த வகை வாக்குறுதியளிப்பதில் இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. இந்நிலையில், உ.பி.மாநில தேர்தலையடுத்து பல்வேறு கட்சிகளும் தமது வழக்கமான வாய்ப்பந்தல் போட்டுள்ளது போல், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களும், 'உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஒன்பது சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேச அது பரபரப்பை உண்டாக்கியதை அனைவரும் அறிந்த ஒன்றே.

இதற்கிடையில் சல்மான் குர்ஷித் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க, ஜனாதிபதி பிரமருக்கு உரியநடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பாரதீய ஜனதாக்கட்சியின் அகில இந்திய அத்வானி முதல், நம்ம ஊரு பொன். ராதாகிருஷ்ணன் வரை, சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறித் தீர்த்து விட்டார்கள். சம்மந்தபட்ட சல்மான் குர்ஷித் அவர்களோ, நான் தேர்தல் அறிக்கையில் உள்ளதைத்தான் பேசினேன் என்று தனது தனது தரப்பு நியாயத்தை சொல்கிறார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதியை பிரச்சாரத்தில் சொல்வது எந்தவகை விதிமீறலோ நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை சல்மான் குர்ஷித் பேச்சு விதிமீறல் என்றால், அதே உ.பி.யில் முலாயம் சிங் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 18  சதவிகிதம் இடஒதுக்கீடு தருவோம் என்று சொல்லியுள்ளாரே! அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்ற கேள்வியை தமிழக காங்கிரஸ் பிரமுகர் இதயதுல்லாஹ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி எழுப்புகிறார். அதே போன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் எழுப்புவோம் என்று கூறும் பாஜகவின் உளறல்கள் தேர்தல் கமிசனின் காதுகளை சென்றடையாததும் ஆச்சர்யமே. எது எப்படியோ இந்த விஷயத்தை சட்டம் தீர்மானிக்கட்டும். 

இப்போது இந்த விஷயத்தை நாம் இங்கே பதிவு செய்தது ஏன் என்றால், சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை கோரிய சங்பரிவாரின் குரலை, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் என்று சொல்லிக்கொள்ளும் அபகரிக்கப்பட்ட உணர்வு வாந்தி எடுத்துள்ளதை காட்டவே. 
'முஸ்லிம்களுக்கு 9  சதவிகத இடஒதுக்கீடு; காங்கிரஸ் மீது தேர்தல்கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், '' இது முஸ்லிம்களை ஏய்க்கும் பேச்சு. தேர்தல் நேரத்தில் இப்படி பொய்யான வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றும் சல்மான் குர்ஷித் போன்ற காங்கிரஸ்காரர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது அபகரிக்கப்பட்ட வார இதழ்.

சல்மான் குர்ஷித் விசயத்தில் சங்பரிவாரும் உணர்வும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதி பொய்யானது என்றால், இதே போன்று கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மட்டும் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சம்மந்தமாக சொன்ன காங்கிரசின் வாக்கை நம்பி, அண்ணன் ஜமாஅத் காங்கிரசை ஆதரித்தது ஏன்? ஆட்சியில் இருந்தபோது இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்த திமுகவின் வாக்குறுதி பொய்யானது என தூக்கி வீசாமல் திமுகவுக்கு கொடி பிடித்து கும்மியடித்தது ஏன்? இன்று சல்மான் குர்ஷித் விசயத்தில் மாத்திரம் சங்பரிவாரின் குரலை எதிரொலிப்பது ஏன்?

இன்றைக்கு சல்மான் குர்ஷித் சொன்னது பொய்யான வாக்குறுதி என்றால், இனிமேல் தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் தேர்தல் அறிக்கையிலோ, அல்லது பிரச்சாரத்திலோ சொல்வது பொய்யான வாக்குறுதி. எனவே அத்தகைய வாக்குறுதிகளை தரும் அரசியல் கட்சிகளை ஆதரிக்க மாட்டோம் என இந்த அபகரிக்கப்பட்ட உணர்வை இயக்கும் அண்ணன் ஜமாஅத் 'உணர்வோடு' சொல்லுமா? சொல்ல முடியாது. ஏனென்றால் ஜெகவீரபாண்டியன் மூலமாக 'ஜெயம்' பெறவேண்டுமே? 
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

தேர்தல் என்று வந்துவிட்டாலே ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும்-பாலாறும் ஓட வைப்போம்' என்ற ரீதியிலான அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த
வகை வாக்குறுதியளிப்பதில் இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. இந்நிலையில், உ.பி.மாநில தேர்தலையடுத்து பல்வேறு கட்சிகளும் தமது வழக்கமான வாய்ப்பந்தல் போட்டுள்ளது போல், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களும், 'உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஒன்பது சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேச அது பரபரப்பை உண்டாக்கியதை அனைவரும் அறிந்த ஒன்றே.

இதற்கிடையில் சல்மான் குர்ஷித் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க, ஜனாதிபதி பிரமருக்கு உரியநடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பாரதீய ஜனதாக்கட்சியின் அகில இந்திய அத்வானி முதல், நம்ம ஊரு பொன். ராதாகிருஷ்ணன் வரை, சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறித் தீர்த்து விட்டார்கள். சம்மந்தபட்ட சல்மான் குர்ஷித் அவர்களோ, நான் தேர்தல் அறிக்கையில் உள்ளதைத்தான் பேசினேன் என்று தனது தனது தரப்பு நியாயத்தை சொல்கிறார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதியை பிரச்சாரத்தில் சொல்வது எந்தவகை விதிமீறலோ நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை சல்மான் குர்ஷித் பேச்சு விதிமீறல் என்றால், அதே உ.பி.யில் முலாயம் சிங் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 18  சதவிகிதம் இடஒதுக்கீடு தருவோம் என்று சொல்லியுள்ளாரே! அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்ற கேள்வியை தமிழக காங்கிரஸ் பிரமுகர் இதயதுல்லாஹ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி எழுப்புகிறார். அதே போன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் எழுப்புவோம் என்று கூறும் பாஜகவின் உளறல்கள் தேர்தல் கமிசனின் காதுகளை சென்றடையாததும் ஆச்சர்யமே. எது எப்படியோ இந்த விஷயத்தை சட்டம் தீர்மானிக்கட்டும். 

இப்போது இந்த விஷயத்தை நாம் இங்கே பதிவு செய்தது ஏன் என்றால், சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை கோரிய சங்பரிவாரின் குரலை, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் என்று சொல்லிக்கொள்ளும் அபகரிக்கப்பட்ட உணர்வு வாந்தி எடுத்துள்ளதை காட்டவே. 
'முஸ்லிம்களுக்கு 9  சதவிகத இடஒதுக்கீடு; காங்கிரஸ் மீது தேர்தல்கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், '' இது முஸ்லிம்களை ஏய்க்கும் பேச்சு. தேர்தல் நேரத்தில் இப்படி பொய்யான வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றும் சல்மான் குர்ஷித் போன்ற காங்கிரஸ்காரர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது அபகரிக்கப்பட்ட வார இதழ்.

சல்மான் குர்ஷித் விசயத்தில் சங்பரிவாரும் உணர்வும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதி பொய்யானது என்றால், இதே போன்று கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மட்டும் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சம்மந்தமாக சொன்ன காங்கிரசின் வாக்கை நம்பி, அண்ணன் ஜமாஅத் காங்கிரசை ஆதரித்தது ஏன்? ஆட்சியில் இருந்தபோது இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்த திமுகவின் வாக்குறுதி பொய்யானது என தூக்கி வீசாமல் திமுகவுக்கு கொடி பிடித்து கும்மியடித்தது ஏன்? இன்று சல்மான் குர்ஷித் விசயத்தில் மாத்திரம் சங்பரிவாரின் குரலை எதிரொலிப்பது ஏன்?

இன்றைக்கு சல்மான் குர்ஷித் சொன்னது பொய்யான வாக்குறுதி என்றால், இனிமேல் தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் தேர்தல் அறிக்கையிலோ, அல்லது பிரச்சாரத்திலோ சொல்வது பொய்யான வாக்குறுதி. எனவே அத்தகைய வாக்குறுதிகளை தரும் அரசியல் கட்சிகளை ஆதரிக்க மாட்டோம் என இந்த அபகரிக்கப்பட்ட உணர்வை இயக்கும் அண்ணன் ஜமாஅத் 'உணர்வோடு' சொல்லுமா? சொல்ல முடியாது. ஏனென்றால் ஜெகவீரபாண்டியன் மூலமாக 'ஜெயம்' பெறவேண்டுமே? 

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010