********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.?

Monday, March 5, 2012

பிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.?
கணடாவிலிருந்து இனியவன்.
முஸ்லீம்களின் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களின் தனித்துவ இயக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 14.02.2012 அன்று“முஸ்லீம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை” நடத்தியது.
இப்போராட்டம் தமிழ்நாடு மட்டுமன்றி புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலும் அனைத்து மாவட்டத் தலை
நகரங்களிலும் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக் கணக்கில் மக்கள் குவிந்தனர்.
கலைஞர் டிவி, மக்கள் தொலைக் காட்சி, ராஜ் நியுஸ், சன் டிவி போன்ற தொலைக் காட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
இதே நேரம் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தை ததஜ வின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களின் வேலைதான் என்ன?
நான் தொடர்ந்து ததஜ வின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றேன். முஸ்லீம் சமுதாயத்தை வழி கேட்டிலிருந்து மீட்டெடுக்கப் பாடுபடுவது மாத்திரமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியிலும் இவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றார்கள்.
இவர்களின் இயக்கம் இந்தியாவைத் தாண்டி இலங்கை, ஆஸ்த்திரேலியா,பிரான்ஸ், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆழமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் இந்த இயக்கம் கிருத்தவ அன்பர்களுடன் பகிரங்க விவாதம்ஒன்றை மேற்கொண்டதும் உலகளவில் பேசப்படும் விஷயமாக மாறியிக்கின்றது.
நிலைமை இப்படியிருக்க ததஜ என்ற முஸ்லீம்களின் இவ்வியக்கத்தில் இருந்து பாலியல் மற்றும் மோசடி போன்ற குற்றச் சாட்டுக்களினால் வெளியேற்றப்பட்ட சிலரின் இணையதளங்களையும் என்னால் பார்வையிட முடிந்தது. தொடர்ந்தும் தவ்ஹீத் ஜமாத் என்ற இவ்வியக்கத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை இவர்கள் பரப்பி வருவதை நான் அதில் அவதானித்தேன்.
வேலையற்றவன் கூட இவ்வளவு மோசமாக பொய்யைப் பரப்ப மாட்டான் என்று நானே எண்ணும் அளவுக்கு இவர்களின் பொய் முகம் அதில் வெளிப்படுகின்றது.
அதன் ஓர் அங்கமாகத் தான் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் பற்றிய செய்தியையும் நான் அவதானித்தேன்.
“பிசு பிசுத்த பி.ஜெயின் இட ஒதுக்கீடு போராட்டம்” என்று அவர்கள் தலைப்பிட்டிருந்தார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள் என்பதை நினைத்து மனம் வருந்தினேன் காரணம் நான் தான் இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெளிவாக அறிந்துள்ளேனே?
திருவள்ளுர் மாவட்டத்தில் பி.ஜெ அவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தின் புகைப்படங்கள் இந்த லிங்கில் உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்ற போராட்டங்களும் இந்த லிங்கில் உள்ளது.
உண்மைக்கெதிராக தினமும் பொய்களைப் பரப்புவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் இலவசமாக இவர்களுக்குக் கிடைத்திருக்கும் மூலையை இனியாவது பயன்படுத்துவார்களா?பொருத்திருந்து பார்ப்போம்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010