********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு ! ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது! - செங்கிஸ்கான்

Friday, October 14, 2011

அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு

ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
பெறுநர் 
S.ஃபெய்சல் முஹம்மது,
தலைவர், டிஎன்டிஜே,
ரியாத் மண்டலம்
பொருள் : ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது
அன்புள்ள சகோ. S.ஃபெய்சல் முஹம்மது அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.             
ஓட்டை இஸ்மாயில் ஆகிய நான், அஸீஸியா டிஎன்டிஜே கிளையின் தலைவராகவும் மவ்லவி அஹ்மத் கபீர் செயலாளராகவும் ரியாத் மண்டல பேச்சாளராகவும் செயல்பட்டு வந்தோம். டிஎன்டிஜே மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் மாநில பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் செய்யது இப்றாஹீம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கடந்த 19.02.2011 அன்று கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தனர்.
இக்கூட்டம் மர்யம் பள்ளிவாசல் நிர்வாகிகள் குறித்து டிஎன்டிஜே தலைமைக்குத் தெரிவிக்கப்பட்ட புகாரை விசாரிப்பதற்காக கூட்டப்படுகிறது என்று நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அ­லி  மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அக்கூட்டம் நடத்தப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம்.
          ஓராண்டு, ஈராண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டிஎன்டிஜேயினர் குற்றமெனக் கருதுபவைகளையெல்லாம் சகோ. பீ.ஜே, சகோ, எஸ்.எஸ்.யூ.வை நேருக்கு நேராக 29.01.2011 அன்று சேலத்தில் சந்தித்த போதே விசாரித்திருக்கலாம். 19.02.2011 அன்று கடையநல்லூர் பொதுக்குழுவில் அப்துந் நாசரால் சுமத்தப்பட்டவைகள் குறித்து அதற்கு முன்னர் நேருக்கு நேராக விசாரிக்க சந்தர்ப்பங்கள் பல இருந்தும் விசாரிக்காதது சகோ. எஸ்.எஸ்.யூவை இழிவு படுத்தவேண்டும் அவரை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற உள் நோக்கத்தைத் தவிர வேறு காரணமில்லை.
              19.02.2011 அன்று எஸ்.எஸ்.யூ மீது சுமத்தப்பட்டவைகளுக்கெல்லாம் சபையிலேயே பதில் தரப்பட்டுவிட்டது. முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட இடத்தை கடையநல்லூர் டிஎன்டிஜே கிளைக்கு எழுதவேண்டும் என்ற ஒற்றை வரித் தீர்மானத்தை அந்தப் பொதுக்குழுக் கூட்டத்திலேயே தெரிவிப்பதை விட்டு விட்டு 25.03.2011 அன்று சகோ. எஸ்.எஸ்.யூ. சகோ. பீஜேயை சென்னையில் நேருக்கு நேராக சந்தித்த போது தெரிவித்ததன் நோக்கமென்ன?
              25.03.2011 அன்று எஸ்.எஸ்.யூவை டிஎன்டிஜேயின் அடிப்படை உறுப்பினரி­ருந்து நீக்குவதற்கு காரணமாக பீ.ஜே சொன்னது முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட இடம் கடையநல்லூர் டிஎன்டிஜே கிளைக்கோ அல்லது கடையநல்லூர் டிஎன்டிஜே பஜார் கிளைக்கோ எழுதவில்லையென்றால் டிஎன்டிஜேயின் அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க முடியாது என்பதுதான்.
இந்த உண்மையான காரணத்தை டிஎன்டிஜே தன்னுடைய உணர்வு வார இதழ், ஆன்லைன் பீஜே கடையநல்லூர் டிஎன்டிஜே போன்ற ஊடகங்களில் குறிப்பிட்டால் மக்கள் டிஎன்டிஜேயினரை அற்பமானவர்களாக எடை போட்டு விடுவார்கள். ஆதலால் இன்று வரை டிஎன்டிஜேயின் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகளிடமும் உறுப்பினர்களிடமும் எதுவெல்லாம் ம­லிந்து காணப்படுகிறதோ அதையெல்லாம் சகோ. எஸ்.எஸ்யூ.வின் மீது மட்டும் அடிப்படை உறுப்பினரி­ருந்து நீக்குவதற்குரிய கண்டறியப்பட்ட காரணங்களாக உணர்வில் வெளியிடப்பட்டுள்ளது.
                 ஒன்று இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றவைகளெல்லாம் நடவடிக்கைக்குரிய காரணங்கள் என்றால் இரண்டாவது முறையற்ற திருமணம் செய்த அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியும் 2006ல் பெண் வீட்டில் தடபுடலாக விருந்து நடைபெற்ற கடையநல்லூர் கஸ்ஸாலி ­ கோரி மகன் இமாமுடைய திருமணத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய ஷம்சுல் லுஹாவும் தடை செய்யப்பட்ட பீடி சுற்றுதல், விற்றல் போன்றவைகள் இன்று வரை செய்து வரும் மேலப்பாளையம் டிஎன்டிஜேயினரும், ஐவேளை தொழுகையே இல்லாமல் இருக்கின்ற கிளை, மாவட்ட, மாநில மற்றும் உறுப்பினர்களும், சுன்னத்திற்கு முற்றிலும் மாறுபட்ட திருமணங்களில் பகிரங்கமாக கலந்து கொள்ளும் கடையநல்லூர் டவுண் மற்றும் மர்யம் கிளை நிர்வாகிகளும், டிஎன்டிஜேயினரின் பகையாளிகள் என்று சொல்லப்படுகிற விடியல் வகையறாக்களும் இன்னும் இது போன்ற மார்க்கம் தடுத்த வெறுக்கின்றவைகளை செய்கின்றவர்களெல்லாம் டிஎன்டிஜேயில் உறுப்பினர்களாக நிர்வாகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
              மீடியாவை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு தலை தூக்கிவிட்டதை நாங்கள் உணர்கிறோம். அப்படி இல்லையென்றால் தன் ஊருக்கென்று (தவ்ஹீத் ஜமாஅத், மேலப்பாளையம், பதிவு எண் : 67/2003) தனியொரு ஜமாஅத்தைப் பதிவு செய்து, அந்த ஜமாஅத்தின் பெயரில் நூர்சேட் பீடிக் கம்பெனியின் மூலம் தானமாகக் கிடைத்த இடத்தை பதிவு செய்து கொண்ட லுஹா போன்றவர்களும் அங்கம் வகிக்க முடியுமா?
               முபாரக் பள்ளிக்கும் டிஎன்டிஜேக்கும் எந்த சம்பந்தமும் இல்லை (25.03.2011) என்று பீஜே ஒரு பக்கம் முழங்க 31.08.2011 நோன்புப் பெருநாள் உரையில் முபாரக் பள்ளியை கைப்பற்றியே தீருவோம் என்று அல்தாபி ஒரு பக்கம் முழங்குகிறார். இதையெல்லாம் பார்க்கிற எங்களுக்கு கீழ்த்தரமான அரசியல் கட்சிகளை விட மோசமான நிலைக்கு குர்ஆன், ஹதீஸிற்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லக்கூடிய அமைப்பு சென்று விட்டதாகவே உணர்கிறோம்.
           இணை வைக்கின்ற செயலை ஆதரிக்கிற இமாமுக்குப் பின்னரும் பள்ளிவாச­லும் தொழக்கூடாது என்று குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பிரச்சாரம் செய்த டிஎன்டிஜே எந்த ஆதாரமும் இன்றி தங்கள் அமைப்பை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு முபாரக் பள்ளிவாசலுக்கு போகக் கூடாது என்று டிஎன்டிஜேயின் மாநில நிர்வாகிகளே சொல்லும் அளவிற்கும் அமைப்பை வளர்ப்பதற்காக தனியொரு இடத்தை தக்வா பள்ளிக்குப் பக்கத்திலேயே அமைத்து தொழுகை நடத்தச் சொன்னதும் மே­ருந்து கீழ் வரை டிஎன்டிஜேயில் இருக்கின்றவர்களை மனோ இச்சை ஆட்டிப் படைக்கின்றது என்றே கருதுகிறோம்.
தன்னுடைய விருப்பத்திற்கு எஸ்.எஸ்.யூ. இணங்க மறுத்த காரணத்தால் அமைதியாக இருந்த கடையநல்லூர் தவ்ஹீத்வாதிகளை தூண்டிவிட்டு சண்டையிட வைக்கின்ற கிரிமினல் நடவடிக்கை டிஎன்டிஜேயின் தலைவரிடத்திலேயே வந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது.
             முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கு வாங்கப்பட்ட இடத்தை டிஎன்டிஜேக்கு எழுதித் தர எஸ்.எஸ்.யூவும் முபாரக் பள்ளி ஜமாஅத்தினரும் மறுத்த காரணத்தினால் அவர்களெல்லாம் கொள்கை அற்றவர்கள் என்ற டிஎன்டிஜேயினரின் எழுத்தும் பேச்சும் வேதனை அளிக்கிறது.
          கடையநல்லூரில் பத்தாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியக் கல்லூரியை திட்டமிட்டு கடையநல்லூரை விட்டு மேலப்பாளையம் கொண்டு சென்றது, அதற்கான காரணமாக சொல்லப்பட்டது கண்காணிப்பு சரியில்லை என்று. மேலப்பாளையத்தைச் சார்ந்த ஷம்சுல் லுஹாவும் எம்எஸ். சுலைமானும் நாங்கள் முழுமையாக கண்காணித்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். மேலப்பாளையத்திற்கு கல்லூரி போனதிற்குப் பிறகு இதுவரை எந்தத் தவறும் நடக்கவில்லையா? இந்தக் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சாராயம் குடித்ததாக தெரிய வந்த பின்பும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்களே. கண்காணிப்பு சரியாக இருந்திருந்தால் சாராயம் குடித்திருப்பார்களா? அவர்கள் சாராயம் குடித்ததே கண்காணிப்பு சரியில்லை என்று காட்டுகிறது. அப்படியானால் அங்கிருந்தும் இஸ்லாமியக் கல்லூரி ஏன் இன்னும் மாற்றப்படவில்லை.
             அங்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்வதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசூ­க்கப்படுகிறது. ஆனால் அங்குள்ள நிலைமை அதற்கு நேர் மாற்றமாக உள்ளது. ஒரு கட்டத்தில் மாணவர்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்திருக்கிறது.
இந்த அளவிற்கு நடத்தப்படும் இக்கல்லூரியைச் சொல்லி ­ உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் வசூ­க்கப்படுகிறதே?
இன்னும் இது போன்ற எண்ணிலடங்காத மனோ இச்சைக்கு இடமளிக்கும் காரணங்கள் மிகைத்திருக்கிற காரணத்தால் எங்கள் ஈமானையும் அதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிற முபாரக், தக்வா பள்ளிவாசல்களையும் நாங்கள் காத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தனை ஆண்டுகள் டிஎன்டிஜே என்ற அமைப்புக்காக உடல், பொருள் அத்தனையும் அர்ப்பணித்த நாங்கள் இன்றுடன் அவ்வமைப்பை கலைக்கின்றோம்.
               இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தினர்களாக முன்பு போல் குர்ஆன், சுன்னாவிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட உள்ளோம். இன்ஷா அல்லாஹ், வழக்கம் போல் மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு 21.10.2011 கேம்ப பள்ளிவாச­ல் நடைபெறுகிறது. மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமத் உமரீ அவர்கள் கலந்து சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
இடம் : ரியாத்
தேதி : 11.10.2011
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010