********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்! - அப்துல் முஹைமின்

Tuesday, October 18, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.
  • அடி உதைகளுக்கு ஆளானார்கள்.
  • ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர்.
  • பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர்.
  • இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
  • மேற்கண்ட 'டயலாக்' அண்ணன் ஜமாஅத்தினரால் அடிக்கடி பயன்படுத்துவதாகும். அல்லாஹ்விற்காக பாடுபட்ட நல்லடியார்கள் இதுபோன்று நாள்தவறாமல் சொல்லிகொண்டிருக்கவில்லை. இது கிடக்கட்டும். இவர்கள் 25 வருட சாதனையில் மேடையில் முழங்கியது தவிர வேறு என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? எத்தனை நபிமொழி நூல்களை இவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்? ஒரு திர்மிதியை அதுவும் ஒரே பாகத்தோடு ஊத்தி மூடி விட்டார்கள். ஏற்கனவே திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு உள்ள நிலையில், இவர்கள் பங்குக்கு ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டார்கள். அதில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் உள்ளதாக இன்றுவரை அறிஞர்களால் விமர்சிக்கப்படுகிறது. தவ்ஹீதை மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டது போல் வெற்று மார்தட்டும் இவர்களைப் போல் இல்லாமல், நபிமொழிகள் மக்களுக்கு சென்றடையும் நன்னோக்கில் ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களை மட்டுமல்லாது பிரபல தப்சீர் மேதை இப்னுகசீர் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையையும் தமிழில் தந்தவர்கள் ரஹ்மத் டிரஸ்ட் சகோதரர்கள். இன்னும் அனைத்து நபிமொழிகளையும் தமிழில் தரும் உன்னதமான பணியையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெறும் மார்க்க பணிகளோடு நின்றுவிடாமல், கல்வியிலும் சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் சில கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ரஹ்மத் மகளிர் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் வெளியிடப்பட்ட ஆண்டு மலரில் ரஸூல் ஸல் அவர்களை குறிப்பிடும் வகையில் கார்ட்டூன் வரையப்பட்டிருந்ததாக கூறி,  அதை கண்டித்து கடந்த 10-10-2011 அன்று முத்துபேட்டை ரஹ்மத் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக  முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ரஸூல் ஸல் அவர்களை குறிக்கும் வகையில் கடந்த காலங்களில் கார்ட்டூன் வெளியிட்டவர்களை கண்டித்து அண்ணன் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. அதே போல் இந்த ஆர்ப்பாட்டமும் என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் கடந்த காலங்களில் முஸ்லிமல்லாத ஊடகங்கள் கார்ட்டூன் வெளியிட்டன. ஆனால் ரஹ்மத் கல்வி நிறுவனம் முஸ்லிம்களின் நிறுவனம் என்பதோடு, நாம் ஏற்கனவே சொன்ன நபிமொழி தொகுப்புகளை வெளியிட்ட முன்னோடி நிறுவனமான ரஹ்மத் டிரஸ்ட் சம்மந்தப் பட்டது. இப்படிப்பட்டவர்களால் நடத்தப்படும் ஒரு கல்வியகத்தின் நூலில் கார்ட்டூன் இடம்பெறுமானால் அது நிச்சயமாக அவர்களால் வேண்டுமென்று செய்யபப்ட்டது என்று சொல்லமுடியாது. அதுமட்டுமன்றி, அவர்களை அறியாமல் அந்த தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்த தவறை சுட்டிக்காட்டிய பின்னும் ரஹ்மத் கல்வியகம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட அளவில் மட்டுமல்ல; மாநில அளவில் மக்களை திரட்டி அண்ணன் ஜமாஅத் போராட்டம் நடத்தினாலும் தகும். ஆனால் உண்மை நிலவரம் என்ன? இந்த கார்ட்டூன் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட கல்வியகத்தின் தாளாளர் மு. முஸ்தபா அவர்கள் மூன்று மாதம் முன்பாகவே மன்னிப்பு கேட்டு எழுதிய கடித்தத்தை கீழே படியுங்கள்;
மேற்கண்ட கடிதத்தில் சகோதரர் முஸ்தபா அவர்கள் கார்ட்டூன் இடம்பெற்றது  குற்றம் என்றும், அந்த குற்றத்திற்காக அல்லாஹ்விடமும், இந்த சமுதாயத்திடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று எழுதிய பின்பும் அண்ணன் ஜமாஅத் போராட்டம் நடத்தியுள்ளது என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சமுதாயம் புரிந்து கொள்ளட்டும். இவர்கள் நடத்திய இந்த கூத்துக்கு சாரி போராட்டத்திற்கு இவர்கள் கூறும் காரணம், அந்த மலரை மாணவிகளிடம் இருந்து ரஹ்மத் கல்வியகம் திரும்ப பெற தவறிவிட்டது. எனவே அதைக் கண்டித்து போராட்டம் என்று அண்ணன் ஜமாஅத் காரணம் சொல்கிறது. ஒருவர் தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்ட பின்னால், இந்த சமுதாயத்திடமும் மன்னிப்பு கேட்ட பின்னால் அவரை மன்னிப்பதை விடுத்து போராட்டம் நடத்துவதுதான் இவர்கள் கற்ற தவ்ஹீத் பாடமோ? என்றைக்குத்தான் இவர்கள் திருந்துவார்களோ?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010