********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

விகிதாச்சார வாக்குமுறை வந்தால் எங்களுக்கு ஒட்டுக் கேட்டு வீதிக்கு வருவோம்- அண்ணன் அறிவிப்பு. - அப்துல் முஹைமின்

Friday, October 14, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

விகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறை வந்தால் ததஜ தேர்தலில் போட்டியிடலாம் என்று அண்ணன் உணர்வில் கூறியுள்ளார். தேர்தல் களத்தில் அண்ணன் ஜமாஅத் உள்ளாட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களை களத்தில் இறக்கி விட்டது உலகமறியும். அடுத்து அண்ணனும், அவரை பின்பற்றும் மேல்மட்ட நிர்வாகிகளும் போட்டியிடும் நாளும் வரக்கூடும். அப்படி வரும் பட்சத்தில், உறுப்பினர்களை இறக்கி விட்டதற்கே வரிசையில் நிற்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுவதால், விகிதாசாரம் அது இது என்று திசை திருப்புகிறார்.

விகிதாசார முறை வந்தால் கூட்டணி தேவையில்லை, கூழை கும்பிட்டு போட வேண்டியதில்லை, இசுலாமிய வரம்பை மீற வேண்டியதில்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடலாம் என்கிறார் அண்ணன். இவரது கூற்றுப் பிரகாரம் இன்றைய நடைமுறையில் உள்ள இந்திய தேர்தல்  முறையில் போட்டியிட்டால்  இஸ்லாமிய வரம்பை மீற வேண்டிய நிலை வரும் என்கிறார். அப்படியானால் இஸ்லாமிய வரம்பை மீறவேண்டிய நிலையில் உள்ள இன்றைய ஜனநாயக தேர்தல் முறையில் தனது உறுப்பினர்களை களமிறக்கி இஸ்லாமிய வரம்பை மீற இவர் பச்சைக்கொடி காட்டியது ஏனோ? உறுப்பினர்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைத்தாரோ? தான் விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பவேண்டும் எனற நபிமொழிக்கு மாற்றமாக இவர் மட்டும் தேர்தலில் போட்டியிடாமல் இவரது ஈமானை பாதுகாத்துக் கொள்வாராம். ஆனால் உறுப்பினர்கள் மட்டும் போட்டியிட்டு இஸ்லாமிய வரம்பை மீறலாமாம். இது எந்த ஊரு நியாயமுங்க?

அடுத்து இவர் கூறுவது போன்ற விகிதாச்சார பிரதிநித்துவம் வந்தாலும் அண்ணனை அலேக்காக தூக்கி கொண்டு போய் சட்டமன்ற சபாநாயகர் சீட்டில் உக்கார வைத்து விட மாட்டார்கள். இவர் வேட்பாளருக்கு ஓட்டுக் கேட்டு மக்களிடம் செல்வதற்கு பதிலாக, இவரது அமைப்பிற்கு ஓட்டுக்கேட்டு அதே மக்களிடம் சென்றாக வேண்டும்.  விகிதாசார முறை பிரநிதித்துவம் வந்தாலும் அப்போதும் இதே மக்கள் தான் வாக்களிக்க வேண்டும். அந்த மக்களை நாடி இவர் ஓட்டுக் கேட்டு  போய்த்தான் ஆகவேண்டும். அப்போதும் இவர் கூறும் கூழை கும்பிடு போட்டுத்தான் ஆகவேண்டும். இவர் வாக்கு கேட்க போகாமலேயே வீட்டில் இருந்தால் இவரது அமைப்பிற்கு தேடி வந்து யாரும் குத்த மாட்டார்கள். அதெல்லாம் கெடக்கட்டும். அரசியல் சாக்கடை என்று அடுக்குமொழி பேசிய இவர், விகிதாசார முறை வந்தால் மட்டும் அரசியல் சந்தன மேடையாகி விடும் என்பாரா? அரசியல் சாக்கடை என்ற இவரது கொள்கையில் இவர் உண்மையாளர் என்றால், இந்திய தேர்தல் முறையில் எந்த மாற்றம் வந்தாலும் என் இயக்கம் போட்டியிடாது என்றல்லவா சொல்ல வேண்டும்? எப்பிடி சொல்லுவார்? கண் முன்னாடி நேத்து வந்த பேராசிரியர், எம்.எல்.ஏ ஆகி தொலஞ்சுட்டாரே!

கடைசியா ஒரு சந்தேகமுங்க. இன்றைக்கு உள்ள தேர்தல் முறை சூதாட்டஅரசியல் என்று சொல்லும் அண்ணன், இந்த சூதாட்ட அரசியலில் முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று கேக்குறாரே? அது எதுக்கு? ஓஹோ! எதாவது சொல்லி மாநாடு அது இதுன்னு வசூலை பாக்கணும்ல., மறந்தே போயிட்டேன்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010