********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று நிகழ்வு - 2

Friday, August 19, 2011

(ஸஹீஹ் முஸ்லிமிலிருந்து)

சூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சூனியக்காரர் இருந்தார். அவர் வயது முதிர்ந்த பொழுது எனக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆகவே ஒரு
சிறுவரை அனுப்பி வைப்பீராக! நான் அவனுக்குச் சூனியக் கலையைக் கற்றுத் தருகிறேன் என அவர் அரசரிடம் கூறினார். அதனை அரசர் ஏற்றுக் கொண்டு அவரிடம் சூனியத்தை கற்றுக் கொள்ள ஒரு சிறுவரை அனுப்பி வைத்தார்.

பின்னர் (ஒரு நாள்) வழியில் (கிறிஸ்துவ) துறவி ஒருவர் சென்றார். அவரிடம் அச்சிறுவர் சென்று அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டார். அவர் கூறுவது அச்சிறுவருக்கு பிடித்து விட்டது. அச்சிறுவர் சூனியக்காரரிடம் வந்தால் உடனே அத்துறவியிடம் சென்று விடுவார். பின்னர் சூனியக்காரரிடம் திரும்பி வந்தால் அவரை சூனியக்காரர் அடித்து விடுவார். இதனை அச்சிறுவர் (ஒரு முறை) துறவியிடம் முறையிட்டார். அதற்கவர் சூனியக்காரனிடம் நீ பயந்தால் என் குடும்பத்தார் என்னைத் தடுத்து வைத்திருந்தனர். (எனது குடும்பத்தாரின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்) என்று கூறிவிடு. உன் குடும்பத்தார்களிடம் நீ பயப்படும் பொழுது சூனியக்காரன் என்னைத் தடுத்த வைத்திருந்தான் என்று கூறிவிடு! எனச் சொல்லித்தந்தார்.

இதற்கிடையே அச் சூனியக்காரர் ஒரு நாள் ஒரு பெரிய வாகனத்தில் வந்தார். அவ்வாகனம் மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டது. அப்பொழுது, அச்சிறுவர் சூனியக்காரர் சிறந்தவரா? துறவி சிறந்தவரா? என்று நான் இன்று அறிவேன் என்று (தனக்குள்) கூறிக் கொண்டார். பின்னர் ஒரு கல்லை எடுத்து இறைவா! சூனியக்காரனின் விஷயத்தைவிட துறவியின் விஷயம் உனக்கு மிகப் பிரியமானதாக இருந்தால் இவ்வாகனத்தைக் கொன்றுவிடு! மக்கள் போகட்டும் என்று கூறினார். பின்னர் அக்கல்லை வாகனத்தில் மீது எறிந்தார். அவ்வாகனம் இறந்து விட்டது. மக்கள் சென்று விட்டார்கள்.

பின்னர் அச்சிறுவர் துறவியிடம் வந்து செய்தியைக் கூற அவர், ''மகனே! இன்று நீர் என்னை விடச் சிறந்தவர். நான் பார்க்கும் இந்த அளவுக்கு உம் விஷயம் (சிறப்பான இடத்தை) அடைந்துள்ளது. நிச்சயமாக நீர்(பிற்பாடு) சோதிக்கப்படுவீர்! நீர் சோதிக்கப்பட்டால் எனக்கு அதனைக் கூற வேண்டாம்'' என்று கூறினார்.

அச்சிறுவர் பிறவிக் குருடரையும், வெண்குஷ்டமுடையவரையும் மற்ற நோய்களை விட்டும் மக்களைக் குணப்படுத்தினார். இதனை அரசவையை சேர்ந்த கண் பார்வையற்ற ஒருவர் கேள்விப்பட்டார். அவர் பல அன்பளிப்புகளுடன் அச்சிறுவரிடம் வந்து ''நீர் என் கண்பார்வையை குணப்படுத்த வேண்டும்'' என்றார், அதற்கு அச்சிறுவர் நிச்சயமாக நான் யாரையும் குணப்படுத்தவதில்லை. அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான். நீர் அவனைக் கொண்டு ஈமான் கொண்டால் நான் அவனிடம் துஆச் செய்வேன். அவன் உம்மைக் குணப்பத்துவான் என்றார். அதனை ஏற்று அவர் அல்லாஹ்வைக் ஈமான் கொண்டார். அல்லாஹ் அவரை குணப்படுத்தினான். பிறகு அவர் அரசவைக்கு வந்து அமர்ந்தார். அப்பொழுது அரசர் அவரிடம் உமக்குக் கண் பார்வையை மீண்டும் வழங்கியது யார்? என்றார். அதற்கவர் ''என் இரட்சகன்'' என்று பதிலளித்தார். அரசர், உமக்கு என்னைத் தவிர வேறு இரட்சகன் இல்லையே என்று கூற, ''ஆம்'' என்னுடைய இரட்சகனும் உம்முடைய இரட்சகனும் அல்லாஹ்தான் என்று பதிலளித்தார். உடனே அரசர் அவரைப் பிடித்து கடும் வேதனை செய்யவே, அவர் அச்சிறுவரைப் பற்றிக் கூறிவிட்டார். உடனே அச்சிறுவர் (அரசவைக்கு) கொண்டு வரப்பட்டார். அரசர் அவரிடம், ''மகனே பிறவிக் குருடையும், வெண்குஷ்டத்தையும் வேறு நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு உன் சூனியம் சென்றுவிட்டதே!'' என்று கூறினார். அச்சிறுவர் ''நான் யாரையும் குணப்படுத்துவதில்லை, அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான்'', என்றார். உடனே அரசர் அச்சிறுவரைப் பிடித்து வேதனை செய்யவே அவர் துறவியைப் பற்றி அறிவித்துக் கொடுத்தார். உடனே அத்துறவி கொண்டுவரப்பட்டார். அவரிடம் உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுத்தனர். அவர் இரண்டு துண்டாகக் கிழே விழுந்தார்.

கண் ஒளி பெற்ற அரசவையைச் சேர்ந்தவர் அரசவைக்கு கொண்டு வரப்பட்டு நீர் உமது மார்க்கத்தை விட்டு விலகி விடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கவர் மறக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுக்கப்பட்டது. அவரும் இரண்டு துண்டாகக் கிழே விழந்தார். பின்னர் அச்சிறுவர் கொண்டு வரப்பட்டு உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிடவே, உடனே அரசர் தமது ஆட்களில் சிலரை அழைத்து இவரை இன்ன மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லுங்கள்! அம்மலையின் உச்சியை நீங்கள் அடைந்ததும், அவர் தம் மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் அவரை விட்டு விடுங்கள்! இல்லையென்றால் அவரை அங்கிருந்து தூக்கி வீசி எறிந்து விடுங்கள்!  என்று கூறினார்.

அவர்கள் அச்சிறுவரை இழுத்துச் சென்று மலையின் உச்சியில் ஏற்றினார்கள். அப்பொழுது அவர் ''இறைவா! நீ நாடியதைக் கொண்டு இவர்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!'' என துஆச் செய்தார். உடனே மலையில் கால் வழுக்கி அவர்கள் கீழே விழுந்தார்கள். பின்னர் சிறுவர் அரசரிடம் நடந்து வந்தார். அவரைப் பார்த்த அரசர் உம் தோழர்கள் (உம்முடன் வந்த நம் ஆட்கள்) என்ன ஆனார்கள்? என்று கேட்டார். அதற்கவர் அவர்களை விட்டும் அல்லாஹ் என்னைக் காப்பாற்றி விட்டான் என்று கூறினார்.

அரசர் அச்சிறுவரைத் தம் ஆட்கள் சிலரிடம்(மீண்டும்) ஒப்படைத்து ஒரு கப்பலில் ஏற்றி இவரை நடுக்கடலுக்குக் கொண்டு செல்லுங்கள்! அவர் அப்பொழுது மனம் திருந்தி தனது மார்க்கத்தை விட்டு விலகிவிட்டால். அவரை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால் அவரைக் கடலில் வீசி எறிந்து விடுங்கள்! என்று கூறினார். (அதன்படி நடுக்கடலுக்கு அச்சிறுவர் அழைத்துச் செல்லப்பட்டார்) அப்பொழுது அவர் ''இறைவா நீ நாடியதை கொண்டு இவர்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!'' என்று கூறினார். அதன்படி கப்பல் மூழ்க ஆரம்பித்தது. அரசரின் ஆட்கள்(மட்டும்) தண்ணீரில் மூழுகினர். பிறகு சிறுவர் அரசரிடம் வந்தார். அரசர், உம் தோழர்கள் (உம்முடன் வந்த நம் ஆட்கள்) என்ன ஆனார்கள்? என்று கேட்டார். அதற்கவர் அவர்களை விட்டும் அல்லாஹ் என்னைக் காப்பாற்றி விட்டான் என்று கூறினார். பின்னர் கூறினார், ''அரசரே! உமக்கு நான் ஏவுவது போல் நீர் செய்யாத வரை என்னை நீர் கொல்லமுடியாது'', என்று கூறினார். அது என்ன? என்று அரசர் கேட்டார். அதற்கவர் நீர் எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, என்னை ஒரு மரத்தில் கட்டி பிறகு எனது அம்புப் பையிலிருந்து ஓர் அம்பை எடுத்து அதனை வில்லின் நடுவில் வைத்து பின்னர் ''பிஸ்மில்லாஹ் ரப்பில் குலாமி'' (இச்சிறுவனின் இரட்சகனான அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறி என் மீது அம்பை எறிவீராக! அவ்வாறு செய்தால் என்னைக் கொன்று விடலாம்! என்று கூறினார். அதன்படி அரசர் மக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டி ஒரு மரக்கிளையில் அச்சிறுவரைக் கட்டிப் பின்னர் அவரது அம்புப் பையில் இருந்து ஒர் அம்பை எடுத்து வில்லின் மத்தியில் வைத்து ''பிஸ்மில்லாஹி ரப்பில் குலாமி'' என்று எய்தார். அந்த அம்பு அவரது நெற்றிப் பொட்டில் பட்டது. (உடனே) அவர் தம் கையை நெற்றிப் பொட்டில் வைத்தார். அவர் இறந்து விட்டார். உடனே மக்கள், இச்சிறுவருடைய இரட்சகன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம், என்று கூறினர். அப்பொழுது அரசரிடம் சிலர் வந்து நீர் எதனை அஞ்சினீரோ அது அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிகழ்ந்து விட்டது. மக்கள் ஈமான் கொண்டு விட்டனர் என்று கூறினார். உடனே அரசர் பாதைகளின் வாயில்களில் (தெருமுனைகளில்) குழிகளைத் தோண்டுமாறு கட்டளையிட்டார். அதில் நெருப்பு மூட்டப்பட்டது. பின்ன யார் தம்(புதிய) மார்க்கத்தை விட்டு விலகவில்லையோ அவரை இந்நெருப்புக் குழியில் போடுங்கள் என்றார். அல்லது (புதிய) மார்க்கத்தை விட்டு விலகாதவரை நோக்கி இக்குழியில் விழுவீராக எனக் கூறப்பட்டது. அவர்களும் அவ்வாறே செய்தார்கள். (இறுதியாக) ஒரு பெண்மணி தம் குழந்தையுடன் வந்தாள். அந்த நெருப்புக் குண்டத்தில் விழுவதற்கு அஞ்சினாள். அதற்கு அக்குழந்தை, ''தாயே! நீ பொறுமை கொள்வாயாக! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கிறாய்'' என்று கூறியது. (முஸ்லிம் : ஸுஹைப்(ரலி)

PDF-ல் தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

நன்றி: S.A.SULTHAN
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010