காழ்புணர்வை கொட்டும் ததஜ ஆதரவு பெற்ற பொய்யன் தளமே!
நடுநிலை தவறாத இலங்கை ததஜ தாஈயின் செயல்பாட்டை பாரீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பேராசிரியரின் இலங்கை விஜயம் தொடர்பாக சில விஷமத்தனமான இணையதளங்களில் காழ்புணர்ச்சியாகவும், கண்ராவித்தனமாகவும் செய்தி வெளியிட்டு வரும் வேளையில் முனைவர் அப்துல்லாஹ்வின் இலங்கை விஜயத்தின் ஏற்பாட்டுக் குழு சார்பாக சில விடயங்களை பதிய வைப்பது நமது கடமை என கருதிகிறோம்.
பேராசிரியரின் இலங்கை நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் அலை கடலென திரண்டு வந்து ஆர்வ மிகுதியுடன் சொற்பொழிவுகளை கேட்டார்கள் என்பது வெள்ளியிடை மலையென உண்மையாகும்.
இது இஸ்லாமிய ஆர்வலர்களுக்கு தேனைவிட இனிப்பான செய்தியாக இருக்கும் பொழுது இன்னும் சில பேருக்கு வேப்பங்காயை விடவும் கசப்பான செய்தியாக இருப்பது என்பது புரியதா புதிராக உள்ளது.
கூட்டம் கூடியது என்பதை மறுத்தால், பொய்யர்கள் என்பது ஊர்ஜிதம் ஆகிவிடும் என்பதால் கூட்டம் கூடியது உண்மைதான். ஆனால், அது யாருக்கு கூடியது என்கிற சிறுபிள்ளைத்தனமான ஆய்வில் இறங்கி இருக்கிறார்கள்.
கூட்டம் என்பதை விடுத்து, கூட்டம் எதற்காக என்பதை சிந்திக்குமாறு சிந்தான சக்தியை அடகு வைத்த இந்த சில்லறை கும்பலிடம் விநயமாய் கேட்டுக் கொள்கிறோம்.
எல்ஃபின்ஸ்டோன் அரங்கில் பாக்கர் பேசிய உரை சபையோர் கவனத்தை வெகுவாய் ஈர்த்தது என்பதில் இவர்களுக்கு உள்ள பிரச்னைதான் என்ன? இதே எல்ஃபின்ஸ்டோன் அரங்கில் இரண்டு வருடத்திற்கு முன் ததஜ தாஈயாக ஸைபுல்லாஹ் காஜா வந்த வேளை 100 பேர் கூட கூடவில்லையே!! இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
ஒரு வேளை இப்போது நாம் இதற்காக ஸைபுல்லாஹ் காஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோமே? அதனை அப்போதே இலங்கை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அதனால்தான் கூட்டம் வரவில்லை என்பார்களோ? கலவெவா கூட்டத்தில் பாக்கர் எதிர் கால இளைஞர்கள் பற்றியே பேசினாராம், தவ்ஹீத் பேசவில்லையாம். அண்ணன் PJ தவ்ஹீத் அல்லாத தலைப்புகளில் ஆயிரம் ஆயிரம் பேசி உள்ளார். அது எல்லாமே சுன்னத் வல் ஜமாஅத்துக்கு பயந்து பேசிய தலைப்புகள் என்ற சொல்ல வருகிறார்களா இவர்கள்?
இறுதியாக ஒரு விடயம் அண்ணன் பிஜெ அவர்களுக்கு இலங்கையில் ஒரு சில பேர் இன்று கூஜா தூக்கலாம். ஆனால் அந்த அண்ணின் இலங்கை நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாடுகளும் இதே அப்துல்லாஹ்வின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே என்பதை மறந்து விட வேண்டாம். இரண்டு தாஈகளிடம் நேரடியாக பழகிய வகையில் அப்துல்லாஹ் அவர்களிடம் அதிகமான மனிதநேய பண்புகள் காண கிடைத்தது.
அன்பாக பேசி, ஆடம்பரம் இன்றி பழகி, இஸ்லாமிய கடமைகளை கூட நேரத்திற்கு நிறைவேற்றி தனது சொற்பொழிவில் யாரையும் தரக்குறைவாக விமர்சிக்காது மிகச் சிறப்பான தாஈயாக அவரை கண்டோம் என்பதை முனைவரை கண்காணித்து வரும் காவல்துறை ஆய்வாளர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
அப்துல்லாஹ்வின் இலங்கை விஜயம் அதீர வெற்றி அடைந்து என்பதிலும் அதிலே இதஜவின் பங்களிப்பு இன்றியமையாதாதாக அமைந்தது என்பதிலும், இலங்கை வாழ் மக்கள் இதஜ நிர்வாகிகளையும் அன்புடன் வரவேற்று அவர்களின் சொற்பொழிவுகளையும் ஆர்வமாய் கேட்டார்கள் என்பது கசப்பான செய்தியாக தாங்களுக்கு இருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஏன் என்றால், வவுனியா நிகழ்ச்சியின் போது, ததஜ இலங்கை தாஈ ஜாபிர் மிகவும் அன்புடன் இதஜ உறுப்பினர்களை அனுசரித்த வேளை இது உங்கள் அடிப்படை உறுப்பினர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று சொன்ன வேளை, அந்த அன்புச் சகோதரர் சொன்ன பதிலையே உங்கள் படிப்பினைக்காக இங்கே பதிய வைக்கிறோம்.
அவர் கூறிய பதில் இதோ....
யுத்தத்தால் சீரழிந்த எங்கள் தாய் மண்ணில் 20 வருடங்களுக்கு பிறகு ஒரு இஸ்லாமிய பணி நடைபெறுகிறது. அதனை ஏற்பாடு செய்யும் வல்லமையும் தைரியத்தையும் அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ளான். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது என் கடமை. அதற்கு TNTJ நிர்வாகம் தடை விதித்தால், இஸ்லாத்திற்காக இயக்கத்தை தூக்கி எறிய நான் பின் நிற்க போவதில்லை என்று கூறியவரே இவர்களின் சிம்ம சொப்பனமாகிய செங்கிஸ்கானுடன் கைலாகு செய்தார் அந்த நடுநிலை தவறாத ததஜ தாஈ.
சிந்தியுங்கள், செயல்படுங்கள்...
ஏற்பாட்டுக் குழு சார்பாக அபூ ஷாஹிது, கொழும்பு.
0 comments:
Post a Comment