********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இந்தியப் பிறையை கைவிட்டு விட்டதா இதஜ...? - அப்துல் முஹைமின்

Tuesday, August 2, 2011

இந்தியப் பிறையை கைவிட்டு விட்டதா இதஜ...?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; இந்தியாவில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதை ஏற்போம் என்று கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின் போது அறிவித்த இதஜ, இப்போது கேரளாவில் பார்க்கப்பட்ட பிறையை புறந்தள்ளி தமிழகப் பிறையை கையிலெடுத்துள்ளதாக ததஜ குற்றம் சாட்டியுள்ளதே ?
 
-அப்துல் மஜீத் திருவல்லிக்கேணி.
 
பதில்; இதஜ'வின் இந்த நோன்புப் பிறை நிலைப்பாடு சரியா என்பதை பார்ப்பதற்கு முன்னால் ஒரு அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மஸாயில் பிரச்சினையில் ஒருவர் மீதோ, ஒரு அமைப்பின் மீதோ குறை கூறுபவர்கள் அந்த குறைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும். பிறை விசயத்தில் இதஜ பல்டியடித்து விட்டதாக புலம்பும் அண்ணன் ஜமாஅத், பிறை விசயத்தில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர்களா? என்றால் இல்லை. பிறை பல்வேறு வடிவங்களில் காட்சி தருவது போன்று இவர்களும் உலகப்பிறை தொடங்கி ஊர் பிறை வரை தேய்ந்து இப்போது மாநிலப் பிறையில் நிற்கிறார்கள். இவர்களின் மாநிலப்பிறை தேசியப்பிறையாகி உலகப் பிறையாகும் நாள் வந்தாலும் ஆச்சர்யமில்லை. இதை இங்கே சொல்வதற்கு காரணம் பிறை குழப்பம் பற்றி பேசும் தகுதி குழப்பவாத அண்ணன் ஜமாஅத்திற்கு கடுகளவும் இல்லை என்பதை அறிந்து கொள்ளவே.
 
அதே நேரத்தில் அண்ணன் ஜமாஅத் பிறையில் பல்வேறு பரிமானம் கண்டவர்கள் என்பதற்காக, இதஜ இந்த நோன்பில் கேரளாவில் பார்த்த பிறையை புறந்தள்ளி, தமிழக பிறையை கையில் எடுத்தது சரியாகிவிடுமா? என்றால் நிச்சயமாக இல்லை. இந்தியாவில் எங்கு பிறை கண்டாலும் அதை ஏற்போம் என்று சொன்ன இதஜ, கேரளாவில் பிறை கண்டதை கண்டுகொள்ளாமல் ஒரு நாள் தாமதமாக தமிழக பிறையை அடிப்படையாக கொண்டது அந்த அமைப்பின் தவறுதான் என்பதும், கண்டனத்திற்கு உரியதே என்றும் கூறிக் கொள்கிறோம். எந்த அமைப்பாக இருந்தாலும் நேரத்திற்கு ஒரு முடிவெடுப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என்பதை தெரிவிப்பதோடு, இந்த பிறை விசயத்தில் இதஜ மாநில நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் எமது பதிலாகும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010