********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஆப்கனில் ஹெலிகாப்டர் சுடப்பட்டதில் பின்லேடனை கொன்ற 22 அமெரிக்க வீரர்கள் பலி

Sunday, August 7, 2011

 வாஷிங்டன், ஆக.7- 
 
ஆப்கானிஸ்தானில் வார்டெக் மாகாணத்தில் சயத்அபாத் மாவட்டத்தில் தலிபான்கள் மீதான நடவடிக்கையில் நேட்டோ ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டது. அப்போது அந்த ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்.
அதில் 31 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுடன் 7 ஆப்கானிஸ்தான் வீரர்களும் இறந்தனர். பலியான 31 அமெரிக்க வீரர்களில் 25 பேர் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.   இவர்களில் 22 பேர் “நேவிசீல்” என்ற படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.
 
கடந்த மே மாதம் 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவன் பின்லேடனை கொல்ல நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் அனைவரும் அதில் கொல்லப்பட்டனர்.
 
இந்த தகவலை சர்வதேச பாதுகாப்பு படை கமாண்டர் ஜெனரல் ஜான் ஆர்.ஆலென் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பலியான 38 பேரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அதற்கான வருத்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார்.  
 
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில்தான் உண்மையான விவரங்கள் தெரியவரும் என்றும் கூறினார்.

மாலைமலர்.காம்
********************************************************************************************
 வாஷிங்டன், ஆக.7- 
 
அதில் 31 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுடன் 7 ஆப்கானிஸ்தான் வீரர்களும் இறந்தனர். பலியான 31 அமெரிக்க வீரர்களில் 25 பேர் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.   இவர்களில் 22 பேர் “நேவிசீல்” என்ற படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.
 
கடந்த மே மாதம் 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவன் பின்லேடனை கொல்ல நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் அனைவரும் அதில் கொல்லப்பட்டனர்.
 
இந்த தகவலை சர்வதேச பாதுகாப்பு படை கமாண்டர் ஜெனரல் ஜான் ஆர்.ஆலென் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பலியான 38 பேரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அதற்கான வருத்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார்.  
 
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில்தான் உண்மையான விவரங்கள் தெரியவரும் என்றும் கூறினார்.

மாலைமலர்.காம்

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010