********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஒரு மாநில நிர்வாகியை கிளைப் பொதுக்குழு கூடி, அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியுமா? - அப்துல் முஹைமின்

Sunday, August 7, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; ஒரு மாநில நிர்வாகியை கிளைப் பொதுக்குழு கூடி,  அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியுமா?
 
-சேகனா கடையநல்லூர்.
 
பதில்; சமீபத்தில் நீக்கப்பட்ட சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா குறித்து கேட்கிறீர்கள் என கருதுகிறோம். சைபுல்லாஹ் ஹாஜா மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக அண்ணன் ஜமாஅத்தில் இருந்தவர். தணிக்கைக் குழு உறுப்பினர் பதவி என்பது மாநிலப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்  படுவதால் அவர்கள்  
மாநில நிர்வாகிகள் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று அண்ணன் ஜமாஅத்தின் பைலா சொல்கிறது. அந்த வகையில் தணிக்கைக்குழு உறுப்பினரான சைபுல்லாஹ் ஹாஜாவை நீக்கவேண்டுமெனில் மாநில செயற்குழுவையோ, அல்லது பொதுக்குழுவோ  கூட்டப்பட்டுத்தான் நீக்கமுடியும். ஆனால் ஒரு மாநில நிர்வாகியான சைபுல்லாஹ் ஹாஜாவை சாதாரண ஒரு கிளைப் பொதுக்குழு நீக்குவதாக தீர்மானம் போடுவதும் அதை மாநில நிர்வாகம் உடனடியாக அங்கீகரித்ததாகவும் அண்ணன் ஜமாஅத் சொல்வது பைலாவுக்கு எதிரானதாகும்.

மேலும் இந்த கிளை பொதுக்குழு நடவடிக்கைக்கு முன்பாக மாநில தணிக்கைக்குழு உறுப்பினரான சைபுல்லாஹ் ஹாஜா அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்ணன் ஜமாத்தால் வெளியிடப்படவில்லை. எனவே அவர் இறுதிவரை மாநில நிர்வாகியாகத்தான் இருந்துள்ளார்  என்பது தெளிவாகிறது. மேலும் சைபுல்லாஹ் ஒரு பேச்சுக்கு சாதாரண உறுப்பினர் என்றே வைத்துக் கொண்டு பார்த்தாலும் எந்த ஒரு உறுப்பினரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்ற எந்த கிளைக்கும் பைலா அனுமதிக்கவில்லை. ஒரு உறுப்பினரை நீக்குவது குறித்து பைலா என்ன சொல்கிறது என்றால்,

சட்ட விதி மீறல் நடவடிக்கை;
அமைப்பின் நலனி;ற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கும்.அவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

மேற்கண்ட பைலா விதிப்படி கடையநல்லூர் கிளைப் பொதுக்குழு சைபுல்லாஹ் காஜாவை நீக்கக் கோரி ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமேயன்றி, நீக்கி தீர்மானம் நிறைவேற்ற முடியாது. ஏனெனில் ஒரு உறுப்பினரை நீக்கவோ, வேறு நடவடிக்கை எடுப்பதை பற்றியோ முடிவெடுப்பது மாநில நிர்வாகத்தின் அதிகாரமாகும். ஆனால் இந்த விதிக்கு மாற்றமாக ''ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று கிளைப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாநிலத்தின் அதிகாரத்தை ஒரு கிளைப் பொதுக்குழு கையிலெடுப்பதாகும்.

உடனே அண்ணனின் தம்பிகள், ''இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது தானே என்று கூப்பாடு போடலாம். ஆனால் உண்மை என்னவென்றால் பொதுக்குழு நடந்த  தேதி. 19 . சைபுல்லாஹ் நீக்கம் என்று ததஜ ஆதிகாரப்பூர்வ  இணையதளத்தில் மறுநாளே செய்தி வருகிறது. ஒரே நாளில் ஒரு உறுப்பினர் பற்றி ஆய்வு செய்து விட்டதா  மாநிலத் தலைமை? அப்படியே ஆய்வு செய்து விட்டு நடவடிக்கைக்கு  மாநில நிர்வாகம் ஒப்புக்கொண்டாலும், அதற்கான அறிவிப்பு சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம்; ததஜ மாநிலத் தலைமை நடவடிக்கை என்றல்லவா அறிவிக்கவேண்டும். ஆனால் அறிவிப்பு கிளைப் பொதுக்குழு சைபுல்லாஹ்வை நீக்கிதாக அல்லவா வருகிறது? இது சரி என்றால் நாளை தொண்டி கிளைப் பொதுக்குழு கூடி அண்ணனை நீக்கி தீர்மானம் போட்டு அதை இப்படி அறிவித்தால் அண்ணனும் அவரது தம்பிகளும் சரி காண்பார்களா?

ஆக மாநில நிர்வாகி அந்தஸ்துடைய சைபுல்லாஹ் ஹாஜாவை சாதாரண உறுப்பினரைவிட இழிவாக ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழுவில் நீக்கியதாக கூறுவது பைலாவுக்கு முரண் என்பதோடு, இது சைபுல்லாஹ்வுக்கு 
உள்ளூரிலேயே எதிர்ப்பு உள்ளது என காட்ட அண்ணன் செய்த  செட்டப் பொதுக்குழு  என்பதுதான்  உண்மை. 

மேற்கண்ட எங்களின் பதிலுக்கு வழக்கம் போல நரகல் நடையில் திட்டித் தீர்க்காமல் ஒரு மாநில நிர்வாகியை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற கிளைப் பொதுக்குழுவிற்கு அதிகாரம் உண்டு என்று பைலாவிளிருந்து அண்ணனின் தம்பிகள் காட்டட்டும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010