********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

வெட்டுப்பட்டாலும் கட்டுப்பட மாட்டேன்!

Wednesday, August 10, 2011

வெட்டுப்பட்டாலும் கட்டுப்பட மாட்டேன்!

அடக்குமுறைக்கு அஞ்சாத கிருஷ்ணவேணி

''உள்ளாட்சித் தேர்தலில்பெண் ​களுக்கு 50 சதவிகித இட​ஒதுக்கீடு கொண்டுவரப் போ​றாங்​களாமே... எனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தெரிஞ்சுக்கிட்டா, அஞ்சு சதவிகிதப் பெண்கள்கூட போட்டி போட வர மாட்டாங்க. ஆனாலும் நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன்!'' - வேதனையை மீறிய உறுதியுடன் பேசுகிறார் கிருஷ்ணவேணி! 

இவர், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி ஒன்றியத் தலைவி. அருந்ததியர் சமூகத்தவர். மக்கள் நலனுக்கான போராட்டத்தில் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானவர். உடலின் சகல பாகங்களிலும் வெட்டுப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரை சந்தித்தோம்.
''பஞ்சாயத்துத் தலைவியா பொறுப்பு ஏத்துக்கிறதுக்கு முன்னாலேயே, 'ஏதோ தப்பித் தவறி தேர்தலில் ஜெயிச்சுட்டே. ஆனா, நீ ஆபீஸுக்கு வரக் கூடாது. வந்தா, மானபங்கப்படுத்துவோம்’னு மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இருந்த போன் நம்பருக்குப் பேசினா, ஆள் கிடைக்கவே இல்லை. பொய்யான முகவரி கொடுத்து வாங்கப்பட்ட நம்பராம் அது. நான் அதுக்கெல்லாம் பயப்படாம, தைரியமா மக்களுக்கான பிரச்னைகளைத் தீர்ப்பதில் உறுதியா இருந்தேன். ஆனா, முதல் நாளில் இருந்தே துணைத் தலைவர் மீரான்கனி என்னைச் செயல்படவிடாமத் தடுப்பதில் குறியா இருந்தார்.
திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதில் எந்தக் காசோலையிலும் கையெழுத்துப் போட மாட்டார். நானும் பல முறை கலெக்டர் ஆபீஸில் நடக்கிற மனு நீதி நாளில் மனு கொடுத்தேன். ஒரு தடவைகூட நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கும் இந்த அநியாயங்களைத் தட்டிக் கேட்கிற தைரியம் இல்லை. அப்படியும் ஒரு முறை, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோட முகமதா என்கிற முஸ்லிம் பெண்ணைத் துணைத் தலைவரா ஆக்கத் தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனா, அந்தப் பெண்ணையும் மிரட்டி விலகவெச்சுட்டாங்க. ஜெயராம் கலெக்டராகப் பொறுப்பேற்றபோது மட்டும்தான், மீரான்கனியை ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் பண்ணினார்.
ஆனா, ஆறு மாதம் கழிச்சு மீண்டும் மீரான்கனியோட அக்கிரமங்கள் ஆரம்பமானது. மீரான்கனியோட ஆள் சுல்தான் என்பவர், ஒரு முறை பெண்கள் முன்னாலேயே நிர்வாணமா நின்னு எங்களைக் கேலி பண்ணினார். அவமானத்தால் கூசிப்போனோம். போன வருஷம் சுதந்திர தின விழாவில், என் மேல் தாக்குதல் நடந்தது. கை முறிஞ்சு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். நான் பல முறை புகார் கொடுத்தும், போலீஸ் நடவடிக்கை எடுக்கலை. இத்தனைக்கும் சிறந்த கிராமப் பஞ்சாயத்தாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சோனியா காந்தி கையால் நான் விருதும் வாங்கி இருக்கேன்.
எல்லாப் பிரச்னைகளுக்கும் உச்சமா வந்தது பெண்களுக்கான கழிப்பறை கட்டும் பிரச்னை. சரியான பொதுக் கழிப்பறை இல்லாததால் பெண்கள், வெட்டவெளியில்தான் இயற்கைக் கடன்களைத் தீர்க்க வேண்டிய நிலை. ராத்திரி நேரத்தில் ஆம்பளைங்க டூவீலர் லைட் அடிச்சுத் தொந்தரவு பண்றதுக்குத் தீர்வு வரத்தான், பொதுக் கழிப்பறை கட்டும் முயற்சியில் இறங்கினேன். இந்தியா சிமென்ட்ஸ் கம்பெனியில் இருந்து நிதி கொடுக்க முன்வந்தாங்க. ஆனா, சுப்பிரமணி என்பவர் இந்த முயற்சிக்கு எதிரா இறங்கினார். 'ஓடைப் பக்கத்தில் டாய்லெட் வருது. தன்னோட வீட்டுப் பக்கத்தில் வருது’னு புகார் கொடுத்தார். 'இந்த டாய்லெட்டைக் கட்டப்போறதே என் கணவர் பொய்யாக்கனி’னு போலீஸில் புகாரும் கொடுத்தார். நானும் வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ-னு பல அதிகாரிகள்கிட்டே விளக்கம் கொடுத்தும் எதுவும் நடக்கலை.
ஜூன் 13-ம் தேதி ஊர் மக்கள் ரெண்டு, மூணு வேனில் போய், கலெக்டர் ஆபீஸில் மனுநீதி நாளில் மனு கொடுத்தோம். மனு கொடுத்துட்டு ஆபீஸ் வந்து வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேன். அன்னிக்கு ஜமாபந்தி. அதனால், ஆபீஸில் எக்கச்சக்க வேலை. ராத்திரி 9 மணி ஆயிடுச்சு. வீட்டுக்கு ஆட்டோவில் போறேன். பின்னாடியே டூவீலரில் சுப்பிரமணியும் சுல்தானும் ஃபாலோ பண்ணிட்டு வந்தாங்க. தெருமுக்கில் ஆட்டோ நுழைஞ்சதும், 'டேய் ஆட்டோ வந்திடுச்சு, வெட்டுங்கடா!’னு சுப்பிரமணி கத்தினார். ஏழெட்டுப் பேர் அரிவாளோட சுத்திட்டாங்க. டிரைவர் பயந்துட்டு ஓடிட்டார். ஆட்டோவில் வெச்சே வெட்டினாங்க. கம்மலோட காது அறுந்து விழுந்துடுச்சு. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துட்டேன். நான் செத்துட்டேன்னு நினைச்சு ஓடிட்டாங்க.
வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. சில நாட்களுக்கு முன்பே, சுப்பிரமணி ஜாமீனில் வெளியே வந்துட்டார். என் வீட்டுக்காரருக்கோ, என் புள்ளைகளுக்கோ என்ன பாதுகாப்பு? ஆனா, ஒண்ணுங்க... எந்தச் சாதிக்காரங்க என்னை அரிவாளால் வெட்டிச் சாய்ச்சாங்களோ, அதே சாதியைச் சேர்ந்த ஜனங்கதான் எனக்கு ரத்தம் கொடுத்தாங்க. இன்னிக்கு என் உடம்பில் ஓடறது அவங்க ரத்தம்தான்!'' என்கிறார் நெகிழ்ச்சியாக கிருஷ்ணவேணி.
இப்போதுதான் சில பெண்கள், அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், அடிமை விலங்குகளில் இருந்து விடுபட்டு வெளியே வருகிறார்கள். இந்த வன்மமும் வெறியும் மீண்டும் அவர்களைக் கூட்டுக்குள் அடைத்துவிடக் கூடாது!

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010