********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மஹ்தீ'யை பின்பற்ற ஆதாரமா? 'அறிவீனமா? - அப்துல் முஹைமின்

Friday, August 19, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
 
மஹதீ'யாக்களுக்கு விவாத அறைகூவல் விடுத்துள்ள அண்ணன் ஜமாஅத், ''நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த மஹதீ அவர்கள் இன்னும் வரவில்லை. மஹதீ என்பவர் உண்மையில் வந்துவிட்டார் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக இவர்கள் நிரூபித்து விடுவார்களேயானால் நாம் அனைவரும் அந்த மஹதீயை பின்பற்றத் தயாராக உள்ளோம் என்று கூறியது. 
 
அப்போது நாம் மஹதீ வந்துவிட்டார் என்று ஒருவேளை மஹதி'யாக்கள் நிரூபித்து விட்டால் அந்த மஹதியை பின்பற்றத் தயார் என்று அண்ணன் ஜமாஅத் சொன்னது எந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்? எந்த ஹதீஸின் அடிப்படையில் என்று அண்ணன் ஜமாஅத் சொல்லத் தயாரா? மஹதி அவர்களை முஸ்லிம்கள் பின்பற்றலாம் என்பதற்கு  என்ன ஆதாரம்? என்று கேட்டோம்.
 
அதோடு, மஹ்தீ என்பவர்  வந்து விட்டார் என்று மஹதி'யாக்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் ஒரு பேச்சுக்கு அவரை பின்பற்றத் தயார் என்று சவால் விட்டோம் என்று அண்ணனின் தம்பிகள் ஜகா வாங்கக் கூடாது. ஏனெனில் மஹதீ அவர்கள் இன்றல்ல என்றாவது கண்டிப்பாக வரக் கூடியவரே! அப்படி வந்தால் அண்ணன் ஜமாஅத் அவரை பின்பற்றுவோம்  என்று சொல்வது எந்த ஆதாரத்தின்  அடிப்படையில் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நாம் கூறியிருந்தோம்.
 
இதற்கு வழக்கம் போல துள்ளி வந்த பொய்ஜேயின் பினாமி, ஆதாரம்  என்ற பெயரில் பல விதண்டாவாதங்களை  வைத்துவிட்டு,  மஹதியை பின்பற்ற ஆதாரம் என்று ஒரே ஒரு குர்'ஆன் வசனத்தையும் வைத்துள்ளது. அந்த  வசனம் இதுதான்;

قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ
(நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"[அல்-குர்'ஆன் 43:81 ]

இந்த வசனத்தை எழுதிவிட்டு 'இப்ப என்னடா செய்யப்போற' என்று தனது தலைவனின் பாணியில் 'மரியாதையான' வார்த்தையில்  கேட்டுள்ளது பொய்யன் தளம். இந்த வசனத்தின் மூலம் பொய்ஜேயின் பினாமி சொல்ல வருவது என்னவென்றால், 'அல்லாஹ்விற்கு சந்ததியிருந்தால் நான் வணங்கத் தயார் என்று நபியவர்கள் எப்படி சொன்னார்களோ, அதே பாணியில் மஹ்தீ வந்து விட்டார் என்று நிரூபித்து விட்டால் அவரை பின்பற்றத்  தயார் என்று நாங்களும் சொன்னோம் என்று சொல்ல வருகிறது இந்த பினாமி. இதன் மூலம் தனது தலைவனைப் போல   மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறது  இந்த பினாமி. 

நன்றாக சிந்திக்கக் வேண்டும். அல்லாஹ்விற்கு சந்ததியுண்டு என்று கியாமநாள் வரைக்கும் எவராலும் நிரூபிக்க முடியாது என்பதால் தான், நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு தனது தூதருக்கு கட்டளையிடுகின்றான் இறைவன். 

ஆனால் மஹ்தீ நிலை அவ்வாறல்லவே! அவர் இன்றல்ல என்றாவது நிச்சயமாக வரக்கூடியவராயிற்றே! கியாமநாள் வரை வரவே செய்யாத  அல்லாஹ்வின் சந்ததிக்கு சொன்ன வசனத்தை இன்றோ நாளையோ அல்லது உலகம் அழிவதற்குள் நிச்சயமாக வரவிருக்கிற மஹ்தீ அவர்களுக்கு பொருத்துவது இவர்களுக்கு மண்டையில் எதுவுமில்லை என்று காட்டுகிறதல்லவா?

இன்னும் தெளிவாக இந்த மூளையை அடகு வைத்த கூட்டம் விளங்கிக் கொள்ளும் வகையில் சொல்வதாக இருந்தால், 'குழந்தைப் பேறு அறவே சாத்தியமில்லை என்ற நிலையில் உள்ள மலடியிடம், 'நீ பிள்ளை பெற்றுக் காட்டி விட்டால் நீ மலடியில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சவால் விடுவது அறிவுடமை. அதே சவாலை கருவுற்று நிறை மாசமாக இன்றோ நாளையோ பிள்ளை பெறும் நிலையில் இருக்கும் பெண்ணிடம் விட்டால் இது அறிவாளியின் செயலா? அடி முட்டாளின் செயலா? என்பதை அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் விளங்கிக் கொள்வார்களா?   

அண்ணனுக்கும், அவரை பின்பற்றும் தம்பிகளுக்கும் நேர்வழி கிடைத்திட இந்த புனித ரமலானில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010