********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா

Saturday, August 27, 2011

ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு ஒப்பானதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
தற்போது இந்தியாவின் தாத்தாவாக, காந்தியின் அவதாரமாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேவின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் அன்றைய சுதந்திரப் போரை விட மிக பிரபலமான ஒன்றாக தேச எல்லைகளை தாண்டி சர்வதேச  ஊடகங்களின் கதாநாயகனாக மாறியிருக்கிறார் இந்த தாத்தா.

இன்று பத்திரிகைகள், முக நூல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹசாரேவின் போராட்டத்துக்கு எதிராக பேசுபவர்கள் சமூக விரோதிகளாக, தேச துரோகிகளாக சித்தரிக்கபடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கின்றோம். புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சொன்னதைப் போல் இன்று அன்னாவின் குழுவால் முன்வைக்கப்படும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் என்ன கிடைக்கும் என யோசித்தால் பின்வருபவை கிடைக்கலாம்.

a. வந்தே மாதரம்

b. பாரத் மாதா கி ஜெய்

c. இந்தியா தான் அன்னா, அன்னா தான் இந்தியா

d. ஜெய் ஹிந்த்

நன்றாகப் படித்து மேல்தட்டு ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அன்னாவின் போராட்டத்தில் பெரும்பான்மையாகக் கலந்து கொண்டுள்ளனர். மின்விசிறிகள் தரும் சுகமான காற்று வீச, தில்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள் இரவு பகலாக பணி புரிந்து சமன்படுத்திய இடத்தில், பன்னாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர்ஷிப்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தின் மூலம் அன்னாவின் எடை சில கிலோக்கள் குறைந்தது தவிர, சாமானியனுக்கு வேறொன்றும் நடக்கப் போவதாகத் தெரியவில்லை.

"ஏற்கனவே இருக்கும் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் மறைந்து விடும் அளவுக்கு ஊழல் எளிதானதல்ல" என்று இன்போஸிஸின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகினி சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது. 

உண்மையிலேயே ஊழலை ஒழிப்பது தான் அன்னாவின் பணி என்றால் இவரின் அணியின் உள்ள சந்தோஷ் ஹெக்டேவை தலைவராக கொண்ட லோக் ஆயுக்தா மூலம் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களை உள்ளடக்கிய பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்காமல் காங்கிரஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் புரியவில்லை. தலைவரே சூட்கேஸில் பணம் வாங்குவதில் தொடங்கி சவப்பெட்டி வரை ஊழல் நடத்திய பரிசுத்த பா.ஜ.கவும் இவரின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க மெனக்கெடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் போராட்டம் ஊழல் எதிர்ப்பா அல்லது வெறும் காங்கிரஸ் எதிர்ப்பா என்று?

அன்னாவை ஆதரிப்பதாக சொல்லும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட அவரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் சந்தோஷ் ஹெக்டே அறிக்கையால் ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப் பட்டு பதவி பறிக்கப் பட்ட எடியூரப்பா அமைச்சரவையில் பதவி வகித்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி  மற்றும் ஸ்ரீ ராமுலு ஆகியோர் மீண்டும்  அமைச்சர் பதவி கேட்டு பாஜக வை மிரட்டி வரும் நிலையில் வேறு யாருக்கும் அவர்கள் முன்னர் வகித்து வந்த இலாகாவை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜக மறு பக்கம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலே.

மேலும் நல்லாட்சி நடத்துகிறோம் என முழங்கும் மோடியின் குஜராத்தில் கூட இன்னும் லோக் ஆயுக்தா  அமைப்பு தோற்றுவிக்கப் பட வில்லை என்பதை விட வேறென்ன வேண்டும் இவர்களின் நேர்மைக்கு.

உடல்தகுதி அடிப்படையில் தகுதி பெறாமல், அவசர தேவையிருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த அன்னா ஹசாரே தன் கிராமத்தை சீர்படுத்தியது குறித்து இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. ஆனால் அவரின் கிராமத்தில் இன்னும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வது குறித்தும் தலித்துகள் ஜாதி பெயர் கொண்டே அழைக்கபடுவது குறித்தும் ஊடகங்கள் மறைப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. இன்னும் அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகூடங்களில் விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி போன்றவர்களே சுதந்திர வீரர்களாக கற்பிக்கப்படுதலையும் அங்குள்ள சினிமா தியேட்டரில் கூட இந்து கடவுள்களின் மேன்மைகளை சொல்லும் படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படுவதையும் வசதியாய் மறைத்து விடுகின்றன.

தன்னை காந்தியவாதியாக காட்டி கொள்ளும் அன்னா ஹசாரே காந்திய கோட்பாடுகளுக்கு எதிராக ஊழல் செய்பவர்களுக்கு உடனே மரண தண்டனை, மக்கள் தொகையை குறைக்க கட்டாய குடும்ப கட்டுப்பாடு என சர்வதிகார தோரணையில் செயல்படுதலை பார்க்க முடிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் இருக்கும் போது வீதியில் போராட்டம் நடத்துவதன் மூலம் தான் விரும்பும் சட்டத்தை கொண்டு வருவது அதே எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுகிறது. அதனால் தான் எமர்ஜென்ஸியின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவாவால் முன் வைக்கப்பட்ட “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” எனும் முழக்கத்தை போன்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி “அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா” என்று முழங்கியது கவனிக்கப்பட வேண்டியதாகும்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஷா அன்னா ஹசாராவின் போராட்ட நடைமுறைகள் எமர்ஜென்ஸியை நினைவுபடுத்துவதாகவும் என்னை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற சர்வதிகார தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

தனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை நிறைவேற்ற அழுதாவது காரியம் சாதிக்கும் குழந்தையைப் போல் உண்ணாவிரதத்தை ஒரு பிளாக்மெயில் ஆயுதமாகவே அன்னா பயன்படுத்துவதாக தெரிகிறது. இப்போது மக்கள் ஆதரவு இருப்பதால் சிறையை விட்டு வர மறுத்த அன்னா, ஏப்ரல் 1998ஆம் ஆண்டில் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்ட போது 5000 ரூபாய் ஜாமீன் கட்டி வெளி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கோரிக்கையின் பேரில் 2003ல் அமைக்கப்பட்ட பி.பி. சாவந்த் கமிஷன் அன்னாவின் டிரஸ்டுகளை பற்றியும் புகார்களை கூறியது. அன்னா ஹசாரேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவரின் டிரஸ்டான ஹிந்து சுவராஜ் டிரஸ்ட் 2,20,000 ரூபாய் செலவு செய்தது சட்டத்துக்கு புறம்பானது என்றும் ஜில்லாபரிஷத்துக்கு தன் டிரஸ்ட் சார்பாக 11 ஏக்கர் நிலம் ஒதுக்கியது விதிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் பிரஷ்டிச்சர் விரோதி ஜனன்தோலன் டிரஸ்டின் கணக்குகள் ஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை என்றும் மதச்சார்பற்ற கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொண்டு சாந்த் யதவ்பாபா ஷிக்ஷன் பிராசரக் மண்டல் டிரஸ்டின் மூலம் கோவிலை புதுப்பித்ததுபோன்றவை தவறென்றும் அவ்வறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிப்பது ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தும் என்று பல்வேறு மனித உரிமை குழுக்கள் குறை கூறியுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், அப்சல் குரு போன்றவர்களை தூக்கிலிடக் கூடாது என்று கூக்குரல் வலுக்கும் இந்நேரத்தில் தூக்கிலிடுவதை வலியுறுத்தும் அன்னா ஹசாரேவின் போராட்டம் சர்ச்சைகளை வலுப்படுத்துகிறது.

பாபா ராம்தேவின் போராட்டத்தை மத்திய அரசு அடக்க முயன்ற போது போராட்டக்காரர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை ஜனநாயகத்தை நசுக்குவதாகும் என்றும் மனித குலத்தின் மீதான வடு என்று ஆவேசப்பட்ட அன்னா நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றவாளியாக்குவதாக குறிப்பிட்டார். மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ அல்லது சிவசேனை கும்பல்களால் பிற மாநிலத்தவர்கள் அடித்து விரட்டப்பட்ட போதோ இதே ஆவேசத்தை  அன்னா ஏன் காட்டவில்லை. குஜராத்தின் முதல்வர் மோடியை புகழ்ந்தவர் 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது ஏன் ஆவேசப்படவில்லை, மோடியை குற்றவாளியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அன்னாவின் போரட்டத்தை பிரபலப்படுத்துவதில் மேல்தட்டு ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும். மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பத்து ஆண்டுகளாகப் போராடும் ஷர்மிளாவின் போராட்டமோ, கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடும் கிராம மக்களின் போராட்டமோ தங்கள் சொந்த இடங்களில் இருந்து தாரளமயமாக்கல் பெயரால் வெளியேற்றப்படுவதற்கு எதிராக ஒரிஸாவில் போஸ்காவுக்கு எதிராக போராடும் போராட்டங்களோ, போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட்டங்களோ ஊடகங்களின் கண்களில் படுவதில்லை.

மத்திய அமைச்சரவையில் இவர் தான் அமைச்சராக வர வேண்டும் என முடிவு செய்யும் அளவுக்கு சர்வ வல்லமை பெற்ற ஊடகங்களும் உண்டு என்பதை இந்தியாவிற்கு வெளிப் படுத்தியவர் நீரா ராடியா. இந்தியாவில் லாரிகள் வேலை நிறுத்தம் என எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்  அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு என மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களின் நேர்மையும் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது. 2G ஊழல் வழக்கில் பல்வேறு டாடா, அம்பானி போன்ற பெரிய கார்பரேட் கம்பெனிகளும் கோடி கோடியாக முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை எழுதி இருக்குமா இந்த ஊடகங்கள். இன்று ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாம்.

இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக அன்னா முன்னிலைப் படுத்தப் படுகிறார். இன்னும் தெளிவாகச்சொல்ல வேண்டுமென்றால் அன்னாவின் போராட்டங்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், போராட்ட ஒழுங்குமுறைகள், வெறியேற்றப்பட்ட தேசபக்தி போன்றவை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், உலகக் கோப்பை வெற்றி ஊர்வலம், அணு சக்தி வெற்றி கொண்டாட்டம் போன்றவைக்கு ஒத்திருப்பதை தெளிவாக கண்டு கொள்ள முடியும்.

அன்னாவின் கனவு கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 25 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, காந்தி கனவு கண்டது போன்று அவரவர் ஜாதிக்கு ஏற்ப ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வெட்டியான், துப்புரவு தொழிலாளி, ஒரு நாவிதன் என்று தன்னிறைவு கொண்ட கிராமமாக அன்னாவின் கனவு கிராமம் இருப்பது, சமநிலையை நோக்கிய இளைஞர்கள் எனும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தோடு அன்னாவின் தளபதிகள் இணைந்திருப்பது, கோகா கோலா, லெஹ்மன் பிரதர்ஸ் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களில் நிதியுதவி பெறும் அன்னாவின் தளபதிகளின் என்.ஜி.ஓக்கள் போன்றவை அன்னாவின் போராட்டத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றன. போர்ட் பவுண்டேசனிடம் இருந்து கடந்த 3 வருடமாக கபீர் என்ற அமைப்புக்காக அதனை நடத்தி வரும் அர்விந்த் கேஜ்ரிவால் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்று இருக்கும் நிலையில் நாளை போர்ட் பவுண்டேசன் மீது முறைகேடு புகார் வரும் நிலையில் இவர்களின் நடவடிக்கை எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

பிரதமரும் நீதித் துறையும் தங்களின் ஜன் லோக்பாலுக்குள் வர வேண்டும் என அடம் பிடிக்கும் அன்னா ஹசாரே குழுவினர் தாங்கள் பொறுப்பு வகிக்கும் தொண்டு அமைப்புகள் மட்டும் ஜன் லோக்பால் வரம்புக்குள் வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நேர்மை இருக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்து அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். இவர்கள் என்ன ஊழலே புரிய மாட்டார்கள் என இறைவனிடம் வரம் வாங்கி வந்தவர்களா?

அம்பேத்கர் குறிப்பிட்டதை போன்று இந்திய ஜனநாயகம் தனிமனித வழிபாடால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்று சொன்னதை போல் சாதாரண யோகா வாத்தியாரால் சில ஆண்டுகளில் தன் மாணவர்களை சீடர்களாக்கி அவர்களை தொண்டர்களாக்கி பின் அரசுக்கே சவால் விடும் அளவுக்கு உயர முடிகிறது. அப்படி அன்னாவை பின்பற்றும் ஓர் ஆட்டு மந்தை சமூகத்தைச் சமைக்கும் முயற்சியில் இந்திய ஊடகங்கள் தீவிரமாக குதித்திருக்கின்றன.  தலித் சமூக ஆர்வலர் காஞ்சா இலய்யா குறிப்பிட்டதை போல் “அன்னாவின் போராட்டம் சமூக நீதிக்கெதிரான மனு தர்ம இயக்கம். பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினருக்கு இதில் எவ்வித பங்குமில்லை” என்று குறிப்பிட்டதை போல் ஒரு சாராரின் விருப்பத்தை பொது புத்தியில் புகுத்தும் முயற்சியாகவே அன்னாவின் போராட்டம் தெரிகிறது.

அன்னாவின் போராட்டத்தை கண்மூடித்தனமாய் ஆதரிப்போர், அதையே தேச பக்திக்கான இலக்கணமாய் சொல்வோர் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும். ஆயுதப் புரட்சியின் மூலம் கடைநிலை மக்களை ஒன்று திரட்டி போராடும் மாவாயிஸ்டுகளின் நோக்கம் இந்திய ஜனநாயகத்தை தூக்கி எறிவது எனில் மேல் தட்டு மக்களை, அறிவு ஜீவிகளை, ஊடகங்களை வைத்துநடத்தப்படும் அன்னாவின் இயக்கம் வெற்றி பெற்றால் அதே விளைவு தான் ஏற்படும். ஆம் எனவே இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது மாத்திரமல்ல சட்டத்தை தன் கையில் தனிநபர்கள் எடுப்பதும் அனுமதிக்கப்பட கூடிய ஒன்றல்ல.

நன்றி: இந்நேரம்.காம்
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010