********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மிஸ்டர் கழுகு: ''ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுறேன்யா!''

Saturday, August 6, 2011

ட்ஜெட்டைக் கையில் ஏந்தி, மிடுக்கு நடையுடன் வந்தார் கழுகார்.
 ''நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வரும் அமைச்சர்போல் வருகிறீரே!'' என்று நாம் கிண்டல் அடிக்க... சிரித்தபடியே பட்ஜெட் நியூஸில் இருந்து தொடங்கினார்.

''கடந்த ஒரு மாத காலமாக வெளி​யிட்டு வந்த பல அறிவிப்புகளோடு, புதிய
திட்டங்களையும் சேர்த்து முதல் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. முதல் முறையாக நிதிப் பொறுப்பை வகிப்பதால் என்னவோ, கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அம்மாவிடம் பூங்கொத்து கொடுத்து ஆசி வாங்கிக்கொண்டார். அப்புறம், வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் இப்போது மிஸ்ஸிங்!
அதாவது, பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பு, அது சம்பந்தமான ஃபைல்கள் அடங்கிய சூட்​கேஸுடன் நிதி அமைச்சர், முதல்வரோடு நின்று போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், சூட்கேஸில் ஜெயலலிதாவின் படத்தை ஓட்டி, அதோடு நின்று போட்டோவுக்குபோஸ் கொடுத் தார் பன்னீர்​செல்வம்.''
''ஓஹோ''
''இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப், தங்கத் தாலி, ஆடு போன்ற அறிவிப்புகளோடு 'கிராமப் பெண்களுக்கு நாப்கின், இன்னும் ஓர் ஆண்டில் மின் வெட்டு முற்றிலும் நீக்கம்’ என்று சில அறிவிப்புகளும் வெளியாகி இருக்கின்றன. அதோடு, 'அரசு கேபிள் டி.வி. விரைவில் செயல்படும்’ என்ற அறிவிப்பும் முக்கியமானது. 16 மாவட்டங்களில் இதற்காகப் புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். 11 மாவட்டங்களில் ஏற்கெனவே இருக்கிற தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து, ஒளிபரப்பைத் துவக்கப்போவதாகவும் பட்ஜெட் சொல்கிறது. தஞ்சை, வேலூர், கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இதற்கான வசதிகளை முந்தைய தி.மு.க. அரசே ஏற்படுத்தி இருந்தது. மாறன் சகோதரர்களுடன் சமரசம் ஆன பிறகு, இவை கிடப்பில் போடப்பட்டன. தி.மு.க. போட்ட அந்தப் பாதையில், இப்போது அ.தி.மு.க. அரசு நடைபோட ஆரம்பித்துவிட்டது!''
''ஓ... கருணாநிதியின் விரலை வைத்தே அவர்களது கண்ணைக் குத்துகிறார்களோ!''
''சென்னைக்கு குடிநீர் வழங்க மூன்று இடங்களில் குடிநீர் சேமிப்பு ஏரிகள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் இருக்கிறது. இதற்குப் பின் ஒரு வில்லங்கம் இருக்கிறதாம். ஏரி அமைக்கப்படும் மூன்று இடங்களில், திருவள்ளூரில் உள்ள தேர்வாய் கண்டிகையும் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களை அழித்து, சிப்காட்டுக்கு முந்தைய தி.மு.க. அரசு நிலம் ஒதுக்க... ஏரியா மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இங்குதான் 'கலைஞர் டி.வி’-யின் சரத்குமாருக்கு மது ஆலை அமைக்கவும் இடம் ஒதுக்கினார்கள். இப்போது அங்கே ஏரி வந்தால், மது ஆலையின் கதி அவ்வளவுதான்! அதாவது, அந்த ஆலைக்கு முட்டுக்கட்டை, பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏரி என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!''
''தி.மு.க. வெளிநடப்பு செய்து இருக்​கிறதே...''
''சபையில் நடந்த வெளிநடப்பு அனை​வருக்கும் தெரிந்ததுதானே! கட்சிக்குள் சில வெளிநடப்புகள் இருக்கும் என்கிறார்கள். கோவை பொதுக் குழுவில் நடந்த களேபரங்களுக்குப் பிறகு கருணாநிதி அதிக மனவருத்தத்தில் இருக்கிறார். 'என்னை மேடையில் வைத்துக்கொண்டே எனக்குப் பதிலாக வேறு தலைவரைப் போடச் சொல்லிப் பேசும் அளவுக்கு ஆட்கள் தயாராகிவிட்டார்களா? நான் வேணும்னா, ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுறேன்யா’ என்கிறாராம் வேத​னையாக. 'எல்லாரையும் தூண்டி விட்டுட்டு ஒண்ணுமே தெரியாதது மாதிரி ஸ்டாலின் உட்கார்ந்து இருந்ததை நினைச்சாத்தான் என்னால் தாங்க முடியலை!’ என்றும் பொரு​முகிறாராம். 'தலைவருக்கும் தளபதிக்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லை’ என்று கட்சி மட்டத்தில் பேச்சு. 'இன்றைய குழப்பமான கட்டத்தில், ஸ்டாலினிடம் தலைவர் பதவியைக் கொடுத்தால் சமாளிக்க முடியாது’ என்று ஒரு குரூப் பிரசாரம் செய்கிறது. 'தளபதி கையில் கட்சியைக் கொடுக்க வேண்டிய சரியான நேரம் இதுதான். அவரைத் திருவாரூர்ல கைது பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்டதுமே தமிழ்நாடு முழுக்க தொண்டர்கள் எவ்வளவு உற்சாகத்தோடு, தானே முன்வந்து கைதானாங்க. அந்த சூழ்நிலையைத் தலைவர் புரிஞ்சுக்கணும்!’ என்று இன்னொரு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள். 'ஸ்டாலின் வந்தால் தங்கள் பதவி காலியாகிவிடும் என்று நினைக்கும் சில மூத்த தலைகள்தான், இந்த பதவிப் பிரமாணத்துக்குத் தடை’ என்றும் அறி​வாலய வட்டாரம் சொல்கிறது.''
''அழகிரி?''
''தன்னை ஆபத்துகள் சூழ்ந்து இருக்கும் இந்த நேரத்தில் கட்சிக்குள் எதையாவது செய்து ஸ்டாலின், தலைமை நாற்காலியைப் பிடித்துவிடுவார் என்ற பதற்றம் அழகிரிக்கு வந்துள்ளது. ஸ்டாலின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சென்னையில் இரண்டு மூன்று ஆட்களை வைத்து ரகசியத் தகவல்களைப் பெற்று வருகிறாராம். மதுரையில் மலையெனக் குவியும் வழக்குகள் அவரை நோக்கி போலீஸ் வருகையை நாளுக்கு நாள் அதிகப்படுத்துகின்றன. அந்தப் பதற்றமும் அவரை நிலையில்லாமல் தவிக்க வைத்துள்ளது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்று பீடிகை போட்டபடி பறந்தார் கழுகார்!
மண்டபத்தில் சிறை!
சில விஷயங்கள் வேண்டுமென்றே நடக்கிறதா அல்லது சொல்லிவைத்துச் செய்கிறார்களா என்று தெரியாது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் போது காஞ்சி கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர் கைதானது இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி தினத்தில்.  அதேபோல்,   ரம்ஜான் நோன்பு ஆரம்பமான அதிகாலை நேரத்தில் முன்னாள் உளவுத் துறை தலைவர் ஜாஃபர் சேட் வீடு தேடிப் போய் அவரது சஸ்பெண்ட் ஆர்டரைக் கொடுத்து இருக்கிறார்கள். சஸ்பெண்ட் ஆவோம் என்பதை அவர் எதிர்பார்த்துத்தான் இருந்தார். ஆனால் அதில் போடப்பட்டு இருந்த கண்டிஷன்களைப் பார்த்ததும், கலங்கிப்போனாராம். 'சஸ்பெண்ட் காலத்தில் மண்டபத்தில் தங்கியிருக்க வேண்டும்!’ என்பதுதான் ஜாஃபரின் அதிர்ச்சிக்குக் காரணம்!
பொதுவாக, இதுமாதிரி உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படும்போது, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தை மையமாகக்கொண்டு தங்கியிருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதுதான் வழக்கம். ஜாஃபர் விஷயத்திலும் இதேமாதிரி ஃபைல் ரெடியாகியதாம். ஆனால், கடைசி நேரத்தில் அரசு மேலிடப் பிரமுகர் ஒருவர் இதைப் படித்து, கடைசித் திருத்தம் சொன்னாராம். 'சஸ்பெண்ட் மட்டும் அல்ல... வீட்டுக் காவல்.’ என்றும் சொல்லிச் சிரிக்கிறது ஜாஃபரால் பாதிக்கப்பட்ட எதிர் கோஷ்டி!
காக்கிகளைக் கலங்கடிக்கும் மர்மக் கடிதம்...
தி.மு.க. ஆட்சியின்போது,  தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரைப்பற்றி மொட்டை பெட்டிஷன்கள் கிளம்பின. போலீஸில் உள்ள கோஷ்டிப் பூசலின் கைவரிசை இது எனத் தெரிந்து நடுநிலையான போலீஸ் அதிகாரிகள் தலையில் அடித்துக்கொண்டனர். கொஞ்ச காலம்  கடித வரத்து குறைந்தது. இப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மொட்டை பெட்டிஷன் கலாசாரம் கிளம்பிவிட்டது. இங்கு உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளில்,  54 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப்பற்றி 22 பக்கங்களைக்கொண்ட மர்மக் கடிதம் அது. யார் அனுப்பினார்கள் என்கிற விவரம் இல்லை. ஆனால், முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வெகு சிலருக்கு மட்டும் தபாலில் வந்து சேர்ந்ததாம். டி.ஜி.பி பதவியில் உள்ளவர்களில் ஆரம்பித்து டி.ஐ.ஜி-கள் வரை நீள்கிறது. உதாரணத்துக்கு, வீரப்பனை வதம் செய்த உயர் அதிகாரியின் பின்னணி மற்றும் அவர் மத்திய அமைச்சருக்கு நெருக்கமாக இருப்பதுபற்றியும் பேசுகிறது கடிதம். அடுத்து, தற்போதைய அரசுக்கு நெருக்கமானவரும் ரிட்டயர்டு ஆனவருமான அதிகாரியை போலீஸ் துறையின் 'பெரிய நடிகர்' என்று வர்ணிக்கிறார்கள். தற்போது கூடுதல் டி.ஜி.பி. பதவியில் உள்ள ஒரு அதிகாரியைப் பற்றி சொல்லும்போது, 'நல்ல அதிகாரி. ஆனால், வடநாட்டு அதிகாரி என்று தன்னை வெளிக்காட்டிக்கொள்வார். லூஸ் டாக். ரகசியம் காப்பாற்றத் தெரியாதவர்!' என்று குறிப்பு. யார் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார்கள்? எந்தெந்த அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு? போன்ற விவரங்களும் உள்ளன.  ''தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட யாரோதான் இதை எழுதி இருக்கிறார்கள். அநேகமாக அ.தி.மு.க. அனுதாபியாக இருக்கவேண்டும். உயர் அதிகாரிகளில் ஊழல் செய்த ஒருவரை நல்ல அதிகாரி என்று எழுதியிருக்கிற வரிகளைக் கவனிக்கும் போது, இதை யார் எழுதியது என்று யூகிக்க முடிகிறது. ஒரே ஒரு க்ளூ சொல்கிறேன்... அவர் சூட்கேஸில் எப்போதும் பத்து மொட்டை பெட்டிஷன்கள் தயாராக இருக்கும். புண்ணியவான் பெயரை வைத்துக்கொண்டு இதுமாதிரியான காரியங்களை அவர் பண்ணக் கூடாது! '' என்று ரகசியங்களை உடைக்கிறார்கள்.
ரிவைஸில் போகுமா வழக்கு?
முக்கிய வழக்கு ஒன்றில் தொடர்புடைய நீதித் துறைப் பிரமுகரை கண்காணிக்கும் காரியத்தை தோட்டத்துக்கு நெருக்கமான மனிதர்கள் செய்து வருகின்றனர். அந்தப் பிரமுகருக்கும் கடந்த ஆட்சியில் இருந்த முக்கிய அமைச்சர் ஒருவருக்கும் நெருக்கம் அதிகமாம். இன்னாரைத்தான் இதற்குப் போட வேண்டும் என்பதில் தொடங்கி... அவரைப் போட்டால் என்னென்ன லாபம் என்பது வரை, சில இடைத்தரகர்கள் தொடர்ந்து அந்த அமைச்சருக்குப் பேசினார்களாம். அந்தக் காலகட்டத்து செல்போன் சாட்சிகள் திரட்டப்பட்டால்... 'இன்னார் மீது நம்பிக்கை இல்லை’ என்று மனுப்போட்டு வழக்கை மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே பின்னால் இழுத்துச் செல்ல முடியும் என்று சொல்​கிறார்கள்.
இயற்கை மரணமா?
சுமங்கலி கேபிள் மீது புகார் கொடுத்து இருந்த, 'மான்கொம்பு’ நாகராஜன் திடீரென மரணம் அடைந்தது, மேலும் பரபரப்பை எழுப்பியுள்ளது.
கடந்த மாதம் ராமநாதபுரம் எஸ்.பி-யிடம், ''கேபிள் டி.வி. நடத்தி வந்த என்னை சுமங்கலி கேபிள் விஷன், ஆகாஷ் கேபிள் ஆகியவற்றைச் சேர்ந்த சரவணன், கமலக்கண்ணன் உள்ளிட்ட 10 பேர் கடத்தி சென்று மிரட்டினர். அப்போது மதிச்சியம் போலீஸ் துணை கமிஷனரான குமரவேல் முன்னிலையில், 'நான் நடத்தி வந்த கேபிள் கன்ட்ரோல் ரூமை இனி நடத்தக் கூடாது’ என எழுதி வாங்கினார்கள். என்னைத் தொழில் செய்யவிடாமல் தடுத்த கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார் நாகராஜன்.  போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மான்கொம்பு நாகராஜன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துபோனார்.
போலீஸ் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கொடுத்த அலைக்​கழிப்புகளால் இறந்துபோனார் என்றும், தி.மு.க-வில் இருந்துவந்த பிரஷர் காரணமாகவே டென்ஷனில் இறந்துபோனார் என்றும் செய்திகள் பரவ, போலீஸ் தீவிரமாக மரணத்தை ஆராய்ந்து வருகிறது.
மனித உரிமை கமிஷனில் தி.மு.க.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க. முக்கியப் புள்ளிகள் எல்லாம் நிலப் பறிப்பு மோசடி வழக்குகளில் சிக்கி, அடுத்தடுத்த வழக்குகளில் கைதுசெய்யப்படுவது தொடர்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தவிக்கிறது தி.மு.க. மனித உரிமை கமிஷனுக்கு மனுக்களை அனுப்புவதில் தேர்ந்தவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனை அழைத்து இது சம்பந்தமாகக் கருணாநிதி பேசி இருக்கிறார். 'தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டால், தமிழக போலீஸார் பயப்படுவார்கள். பழிவாங்கும்  நடவடிக்கையைக் குறைப்பார்கள்’ என்று சொல்ல, உடனடியாக தமிழகத்தில் நடந்தது அனைத்தையும் மனுவாக எழுதி அனுப்பி இருக்கிறார்களாம்.
'சமூக மதிப்புமிக்க மனிதர்களை நள்ளிரவில் கைதுசெய்வது, மனித உரிமைகளை மீறிய செயல்’ என்கிறதாம் அந்த மனு!

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010