ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த, மாநில நிர்வாகியான சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக கூறியது அண்ணன் ஜமாஅத்தின் ஃபைலாவிற்கு முரண் என்பதை நாம் அண்ணன் ஜமாத்தின் ஃபைலாவை மேற்கோள்காட்டி எழுதியிருந்தோம். படிக்க;http://amaibbukal.blogspot.com/2011/08/blog-post_06.html
இதற்கு வழக்கம் போல பதில் எழுதியுள்ள பொய்யனின் பினாமி, சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம் எனபது ததஜ பைலா விதிமுறைப்படியே என்று நிரூபிக்க முடியாமல், '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று எழுதியுள்ளது.
இதன் மூலம் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. பொய்யனின் பினாமி தொடர்ந்து இவ்வாறு உளறுவதை பார்க்கும் போது, இவர் ததஜவில் இருந்து கொண்டு, ததஜவுக்கே வேட்டு வைக்கும் வேலையை செய்வதால், இவர் பாக்கரின் உளவாளியாக இருப்பாரோ என்று அண்ணனே சந்தேகப்படுவதற்கு முன் பொய்யனின் பினாமி விழித்துக் கொண்டு ஒழுங்காக பதில் எழுதுவது நன்று.
0 comments:
Post a Comment