********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மிஸ்டர் கழுகு: அறிவாலயத்தில் ராகு காலம்... கோட்டையில் நல்ல நேரம்!

Wednesday, August 17, 2011

'இந்திய சுதந்திரப் போராட் டத்துக்குப் பின்னால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இருந்தது. தி.மு.க. உதயமானதற்குப் பின்னாலும் ஒரு சுதந்திர தினம் உண்டு!'' என்றபடியே கழு கார் என்ட்ரி!
அவரது புதிரை அவரே அவிழ்க்கட்டும் என்று காத்திருந்தோம்.
'' 'வெள்ளைக்காரன் இடத்தில் காங்கிரஸ் உட்கார்ந்து கொள்ளும். திராவிட மக்கள் தொடர்ந்து
அடிமைகளாகவே கஷ்டப்படு வார்கள். திராவிட நாடு கிடைக்காது!’ எனச் சொல்லி 1947, ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தை துக்க நாளாகக் கொண்டாடச் சொன்னார் பெரியார். 'சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் தியாகத்தை மறக்கலாமா? அவர்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் வீண் போகலாமா? துக்க நாளாகக் கொண்டாடி, அழியாப் பழிச் சொல்லை நாம் தேடிக்கொள்ள வேண்டாம். இது திராவிடருக்கும் திருநாள்தான். சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது, எந்த வகையிலும் தவறோ... துரோகமோ அல்ல!’ என்று 'திராவிட நாடு’ பத்திரிகையிலேயே பெரியாருக்குப் பதிலடி கொடுத்தார் அண்ணா. தி.மு.க. உதயமாக சொல்லப்பட்ட வெளிப்படையான காரணம், மணியம்மை திருமணம். இந்தத் திருமணத்துக்கு முன்பே, பிளவுக்குப் பிள்ளையார் சுழி போட்டது இந்த சுதந்திர தின சர்ச்சைதான்.''
''இந்த ஃப்ளாஷ்பேக் இப்போது எதற்காம்?''
''சுதந்திர தினத்தைக் கொண்டாடச் சொன்ன அண்ணா உருவாக்கிய தி.மு.க-வின் 62 ஆண்டு காலப் பயணத்தில், இது வரை கட்சியின் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவே இல்லை. ஆனால், முதன்முறையாக  இப்போதுதான் அறிவால யத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. பொதுவாக, திராவிடக் கட்சிகள் இந்தச் சடங்கில் எப்போதும் தன்னை இணைத்துக் கொள்வது இல்லை. இப்போது, திடீரென்று தேசிய நீரோட்டத்தில் தி.மு.க. குதித்ததற்குப் ஒரு பின்னணி உண்டு.'' - சஸ்பென்ஸ் வைத்து நிறுத்திய கழுகாருக்கு அருகில், சுண்டல் பிளேட்டை நகர்த்தி வைத்தோம். கொறித்தபடியே தொடர்ந்தார்.
''சுதந்திர தினமானாலும், குடியரசு தினமானாலும் வழக்கமாக எல்லா மாநிலங்களிலும் காலை 8 மணிக்குதான் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். இந்த மரபை இம்முறை தகர்த்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்த பிறகு, முதன் முறையாகக் கோட்டையில் கொடி ஏற்றும் வைபவம் இது. எனவேதான், நாள் நட்சத்திரம் பார்த்தாராம்.  காலை 7.30 முதல் 9 வரை ராகு காலம் என்பதால், கொடி ஏற்ற வேண்டிய நேரத்தை  8 மணி என்பதில் இருந்து 9.30-க்கு  மாற்றிவிட்டார். ராகு காலம் முடிந்த பிறகு, 9.05-க்குத்தான் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார். அரசு வெளியிட்ட சுதந்திர தின நிகழ்ச்சி நிரலில்கூட அவர் வீட்டில் இருந்து புறப்பட்ட நேரத்தைத் துல்லியமாகப் போட்டு இருக்கிறார்கள்.''
''இதற்கும் அறிவாலயத்தில் தி.மு.க. கொடி ஏற்றியதற்கும் என்ன தொடர்பு?''
''9.30 மணிக்குத்தான் கொடி ஏற்ற வேண்டும் என்று எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அரசே ஓர் உத்தரவு போட்டது. வழக்கத்துக்கு மாறாக, மரபை மீறி ஜெயலலிதா கொடியேற்றப் போகிறார் என்பது முந்தின நாள் இரவில்தான் தி.மு.க-வுக்குத் தெரிந்தது. 'அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும்.’ என்று உடனே அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிடச் சொன்னாராம் கருணாநிதி. அப்போதே பலருக்குக் குழப்பம். அடுத்த நாள் அறிவாலயத்தில், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காக அறிவாலயத்தில், அண்ணா சிலைக்கு அருகில் கம்பமும் ரெடியாகி விட்டது. கொடி ஏற்றிய இளங்கோவன் நிருபர்களிடம், 'மரபுப்படி காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தோம்.’ என்று பொடி வைத்தார். அதாவது, ஜெயலலிதா மரபுப்படி கொடியை ஏற்றவில்லை என்பதைச் சொல்வதற்காகவே, இப்படிக் கொடி ஏற்றும் வைபவம் அரங்கேறியதாம்.''
''மரபுப்படி தேசியக் கொடியை ஜெயலலிதா ஏற்றவில்லை என்று தி.மு.க. ஒரு அறிக்கைவிட்டு இருக்கலாமே?''
''அ.தி.மு.க-வின் 2001 - 2006 ஆட்சிக் காலத்தில், முதல்வராக இருந்த ஜெயலலிதா கோட்டையில் கொடி ஏற்றியபோது ஒரு பிரச்னை வெடித்தது. கோட்டைக் கொத்தளத்தின் நீண்ட படிக்கட்டுகளில் ஏற முடியாததால், வெளியே ரோட்டில் நின்று தேசியக் கொடியை ஏற்றினார் ஜெயலலிதா. தேசியக் கொடியைக் கம்பத்துக்குக் கீழ் நின்றுதான் ஏற்ற வேண்டும் என்பது மரபு. அந்த மரபை உடைத்து, கம்பத்தைவிட்டுப் பல அடிகள் தள்ளி நின்று, தேசியக் கொடியை ஏற்றியதற்கு தி.மு.க. உட்பட எதிர்க் கட்சிகள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கு, 'தேசியக் கொடியை ஏற்றாமல் இருந்தால்தான் தவறு.’ என்று பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. 'இப்போதுதான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. விமர்சனம் வைக்க வேண்டாம்.’ என்றுதான் மறைமுகமாக தமது கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்களாம்.''
''சுதந்திர தினத்தில் விசேஷம் வேறு எதுவும் உண்டா?''
''ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தில், துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவுக்கு வழங்கினார் முதல்வர். சட்டசபைத் தேர்தலில் ஆங்காங்கே ரெய்டு நடத்தி, தேர்தல் ஆணையம் பணம் கைப்பற்றியபோது, அதிகபட்சமாக திருச்சியில்,  5 கோடி கடத்தி வந்த பஸ்ஸை மடக்கிப் பிடித்தவர் சங்கீதா. எல்லோரும் இந்தப் பணியில் துணிச்சலாகப் பணியாற்றினார்கள். சங்கீதாவுக்கு மட்டும் இந்தக் கௌரவத்தைக் கொடுப்பதற்குக் காரணம், இந்தப் பணம், முன்னாள் அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதை சங்கீதா கைப்பற்றியபோது, அவருக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அதை எல்லாம் துணிவாக எதிர்கொண்டு கடமையைச் செய்தார். இதுபற்றி தலைவியிடம் அப்போதே சிலர் சிலாகித்தார்களாம். ஆக, சங்கீதாவுக்கு விருது கொடுத்து தி.மு.க-வுக்குப் பாடம் புகட்டி இருக்கிறார். அதோடு, சுதந்திர தின விழாவில் பேசும்போது, 'ஐந்து ஆண்டு கால அடிமை விலங்கு தகர்க்கப்பட்டு இருக்கிறது. அப்போது மக்களுக்கு சுதந்திரம் இல்லை. அச்ச உணர்வில்தான் மக்கள் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். இப்போது, கொடுங்கோல் குடும்ப ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலர்ந்தவுடன், மக்களுக்கு மீண்டும் சுதந்திரம் கிடைத்த உணர்வு ஏற்பட்டு உள்ளது.’ என்று தி.மு.க-வை ஒரு பிடி பிடித்தார். இதில் இன்னோர் ஆச்சர்யமும் உண்டு. தி.மு.க. ஆட்சியில் இலவசங்களுக்கு எதிர்ப்புக் காட்டிய ஜெயலலிதா, 'மக்களைக் கை ஏந்துபவர்களாக ஆக்கிவிட்டார்கள்.’ என்றார். இப்போது சுதந்திர தின உரையில், 'விலை இன்றி வழங்குவதை இலவசம் என்று கொச்சைப்படுத்த விரும்பவில்லை.’ என்று அந்தர் பல்டி அடித்தார்!'' என்றவர், அடுத்த சப்ஜெக்ட் மாறினார்...
''பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பொட்டு சுரேஷ், பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க. புள்ளிகளுக்கு சிறப்பு உபசரிப்புகள் நடந்ததாகப் புகார் எழுந்ததால், சிறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாற்றப் பட்டனர் என்பது உமக்குத் தெரியும். ஆனாலும், சிறைக்குள் உபசரிப்புகள் இன்னும் நிற்கவில்லை. பொட்டு சுரேஷ§க்கும், சக கைதியான முத்துப்பாண்டி என்பவருக்கும் உரசல் ஏற்பட்டதாம். பொட்டு சுரேஷைப் பார்க்க வரும் தி.மு.க-வினர் மூலம் நிறையப் பொருட்கள் உள்ளே வருகின்றனவாம். இப்படி வந்த பொருட்களில் சிலவற்றை முத்துப்பாண்டி கேட்டதால்தான், இருவருக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. அதோடு, கடந்த வாரத்தில் இன்னொரு விவகாரமும் வெடித்தது...''
''அது என்ன?''
''சிறைக்குள் செல்போன் நடமாட்டம் அதிகம் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். 'தன் உறவினர்களிடமும் பேச வேண்டும்’ என செல்போன் கேட்டு முத்துப்பாண்டி அடம் பிடித்ததாகவும், அதற்கு சுரேஷ் மறுத்ததாகவும், உடனே அந்த செல்போன் மாயமானதாகவும் சொல்கிறார்கள். 'முத்துப் பாண்டிதான் அதை எடுத்திருப்பார்’ என்று  நினைத்தாராம் சுரேஷ். இருவருக்கும் சண்டை நடந்ததாம். முத்துப்பாண்டியை வார்டன்கள் தனியாக நையப்புடைத்தார்களாம். 'தனக்கும், செல்போன் காணாமல் போனதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்று அவர் சொன்னதைக் காதில் கேட்காமலேயே தாக்குதல் நடந்திருக்கிறது. மீண்டும் தாக்குதல் வரும் என்ற பயத்தால்தான், முத்துப்பாண்டி பிளேடை விழுங்கித் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டால் 'அப்படி எதுவுமே நடக்கவில்லை.’ என்கிறார்கள்!'' என்ற கழுகார்...
''கரன்சியில் கொழிக்கும் ஜாம்பவான் ஒருவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்ததாகவும், நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் அவரை தோட்டத்தில் செல்வாக்கானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சந்தித்து, வர்த்தக விவகாரங்களைப் பேசியதாகவும், அந்த நபர் பணம் கொடுக்கத் தயங்கி, மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பியதாகவும் சில வாரங்களுக்கு முன் சொன்னேன் அல்லவா..?''
''ஆமாம்! 'விரைவில் அவர் மீது போலீஸ் பாயும். அப்போது சொல்கிறேன் அவர் யார் என்று’ எனச் சொல்லி எஸ்கேப் ஆனீரே?''
''ஆம்! அவர்தான் சேலம் வழக்கில் கைதானவர்!''  என்று சொல்லிச் சிரித்த கழுகார்,  சென்னையை அடுத்த பனையூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீஸ் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்றபடியே பறந்தார்!
படங்கள்: சு.குமரேசன், வி.செந்தில்குமார்,
எஸ்.சாய் தர்மராஜ்
உள்துறை அமைச்சர் வீட்டில் 'உலக்கை’ கொள்ளையர்!
காரைக்குடி அருகில் உள்ள கண்டனூ ரில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத் தின் பங்களா இருக்கிறது. 1908-ல் கட்டப்பட்ட மிகப் பழமையான இந்தப் பங்களாவில்தான் மகன் கார்த்தியின் திருமண வரவேற்பு நடத்தினார் சிதம்பரம். இதற்குள்ளேதான் கொள்ளையர்கள் புகுந்தது. எப்போது உள்ளே போனார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சுதந்திரத் தினத்தின் மதியத்தில்தான் விஷயம் வெளியில் தெரிந்து, பதறிப்போனது போலீஸ்!
ப.சிதம்பரம் தொகுதிக்கு விசிட் அடிக்கும் நாட்களில், இந்த பங்களாவுக்கு போலீஸ் பந்தோபஸ்து இருக்கும். மற்ற நாட்களிலும் ரோந்து போலீஸார் இந்த ஏரியாவைக் கண்காணித்தபடிதான் இருப்பார்களாம். அதையும் தாண்டி, முற்றத்தின் வழியாக பங்களாவின் உள்ளே இறங்கியவர்கள், ஜன்னல் கம்பிகளை எல்லாம் உலக்கையால் அடித்து வளைத்துவிட்டு, உள்ளே போயிருக்கிறார்கள்.
''தமிழகத்திலேயே நாலு பேர் மட்டும்தான் இந்த டைப்பில் உலக்கையைப் பயன்படுத்தும் கொள்ளையர்கள். அதில் ரெண்டு பேர் இறந்துட்டாங்க. இன்னொருத்தன் தஞ்சாவூர் ரவி ஜெயில்ல இருக்கான். தேனியைச் சேர்ந்த தோனி மட்டும்தான் வெளியில் இருக்கான். அநேகமா அவன்தான் இதை செஞ்சிருக்கணும்'' என்கிறது போலீஸ்!

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010