********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்! - முகவை அப்பாஸ்

Friday, August 19, 2011

திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;
‘யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்’ என்று எழுதி இருந்தீர்கள்! குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா?
-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.

இதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள்? மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் ‘பார்ஸீ’ என்று சொல்லவில்லையா? அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  அந்நஜாத்]

மேற்கண்ட அறிஞர் பீஜேயின்  பதிலை நிதானமாக  படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு,  மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்? பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் ‘பார்ஸீ’ என்று சொல்லவில்லையா? என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார்.

''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள்  இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள்  எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை  மதீனாவில் அருளப்பட்டவை  என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார்.

நன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ'  என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம்  வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை  மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார்? ஏனிந்த முரண்பாடு? எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.

-முகவை அப்பாஸ்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010