********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மிஸ்டர் கழுகு: அழகிரி குடும்பத்தார் தி கிரேட் எஸ்கேப்?

Wednesday, August 10, 2011

நேரடியாக விஷயத்துக்கு வந்தார் கழுகார்!
''கடந்த இதழில் ஸ்டாலின் குறித்து கரு​ணா​நிதி வருத்தப்பட்ட நிகழ்வுகளை உமக்கு நான்

சொன்னேன். அந்த விரிசல், நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. 'தனக்கு உரிய இடத்தை உடனடியாகத் தர வேண்டும்.’ என்பதில் ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார். தன்னுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மனிதர்​களை தனியாகச் சந்தித்துப் பேசும் கட்டத்துக்கு அவரும் நகர்ந்துள்​ளார். இந்த சூழ்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தாராம் முன்னாள் அமைச்சர் துரைமுருகன்!''
''ஏற்கெனவே இவர்கள் சந்தித்த​போது ரசாபாசம் ஆனதே?''
''இந்த சந்திப்பில் அமைதியான வகையில் சில கருத்துகள் பரிமாறப்பட்டதாம்.'எனக்கு வயசாகிப்போச்சு தலை​வரே! உடல்​நிலையும் ஒத்துழைக்​கலை. என்னமோ, மனசே சோர்ந்துபோச்சு...’ என்று விரக்தியில் பேசிய துரை​முருகனுக்கு, ஆறுதல் சொல்லித் தேற்றி இருக்​கிறார் கருணாநிதி. 'உங்களுக்குனு கடமைகள் இருக்கு தலைவரே! உங்களுக்கு அடுத்து யார் தலைவர்னு நீங்கள் உறுதியாக அறிவிக்க வேண்டும். தொண்டர்கள் எல்லாரும் அதை எதிர்பார்க்கிறார்கள். தலைமை தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு இருப்பதாக நினைக்கிறார்கள். அவரும் ஆர்வமாகத் தனது தகுதியை வளர்த்துக்கொண்டார். என் மகனுக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அவன் படித்தான். இன்று ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறான். ஆனால் ஸ்டாலின், அரசியலைத்தான் முழு நேரத் தொழி​லாகச் செய்​கிறார். எனவே, நீங்​கள் அவருக்கான பொறுப்பை அளித்​தால் நல்லது!’ என்று பக்குவமாகச் சொன்​னாராம். அத்தனை​யையும் கேட்ட கருணாநிதி, 'எனக்கும் குடும்பம் இருக்கு’ என்று சொன்னாராம்!
''புரியலையே!''
''விஷயத்தை என்னிடம் ஒருவர் சொன்னபோது, எனக்கும் புரிய​வில்லை. ஆனால், அந்தப் பிரமுகர் விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். 'ஸ்டாலினைத் தலைவராக அறிவிக்கத் தடையாக இருப்பது அழகிரியும் ராஜாத்தி அம்மாளும்தானே. அந்தக் குடும்ப உறுப்பினர்களை மீறி என்னால் என்ன பண்ன முடியும்?’ என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொன்னாராம்.  'தலைவர் தனது வாயால் இன்னார்தான் அடுத்த தலைவர் என்று சொல்ல மாட்டார் என்பதே இதன் மூலமாக நாம் அறிந்துகொள்ளும் செய்தி!’ என்றும் தி.மு.க. வட்டாரத்தில் தகவல் பரவிக்கிடக்கிறது.''
''அழகிரி?''
''தன்னுடைய குடும்பத்தைச் சுற்றி​லும்... குறிப்பாக, மனைவி காந்தியை மையம்கொண்டு சுழல ஆரம்பித்து இருக்கும் சூறாவளிகள் அழகிரியை வருத்தம் அடைய வைத்துள்ளன. 'எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. என் குடும்பத்துக்கு எதுவும் ஆகி​விடக் கூடாது!’ என்று திரும்பத் திரும்ப அவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாடாளுமன்றக் கூட்டத் தொ​ட
ருக்காக டெல்லி சென்ற அழகிரி, தன்னுடன் காந்தியையும் அழைத்துச் சென்றுவிட்டார். டெல்லி சென்றாலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரைக்கோ சென்னைக்கோ வந்துவிடுவது அழகிரியின் வழக்கம். ஆனால், இம்முறை டெல்லி​யைவிட்டு வர மனம் இல்லாமல் இருவரும் அங்கேயே தங்கிவிட்டார்களாம்.''
''மகன், மகள்கள்..?''
''அவர்களை அரசியல் வெப்பம் படாமல், வெளிநாட்டில் செட்டில் பண்ணவும் அழகிரி நினைக்கிறாராம். கடைசி மகள் அஞ்சுகச் செல்வி, அமெரிக்காவில் போய் செட்டில் ஆக இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் சொல்லி இருந்தேன். அந்தக் குடும்பம் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டது. சினிமா தயாரிப்பில் மும்முரமாக இருந்த துரை தயாநிதி, இப்போது லண்டனில் இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து, மூத்த மகள் கயல்விழியும் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். அவர்களின் மகனுக்கு பாஸ்போர்ட் எடுத்ததில் ஏற்பட்ட சிறு தவறைத் திருத்துவதற்காக, கடந்த வாரத்தில் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் தன்னுடைய அரசியல் சூழல், தனது வாரிசுகளுக்கு பரவக் கூடாது என்பதில் அழகிரி தெளிவாக இருக்கிறார்.''
''கருணாநிதியின் கட்டளை என்னவாம்?''
''அழகிரி டெல்லியில் இருந்து தனது அமைச்​சரவை வேலைகளைப் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார் கருணாநிதி. 'மதுரைக்குச் சென்று, அவன் அமைதியாக ஏதாவது தொழிலை நடத்தி நிம்மதியாக இருப்பான் என்று அனுப்பிவைத்தேன். ஆனால், அங்கு சில மனிதர்கள் அவனை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்​கிறார்கள்!’ என்று வருந்தினாராம். அதனால்தான், திருவாரூரில் நடந்த கண்டனக் கூட்டத்தில் வீரபாண்டியார், ஜெ.அன்பழகன் கைதுகளைப்பற்றி பேசியவர், மதுரையில் கைதான நபர்களைப்பற்றி பேசவில்லையாம். இதைச் சொல்லும் மதுரைப் பிரமுகர் ஒருவர், 'அழகிரி இனிமேல் மதுரைக்கே அபூர்வமாகத்தான் வருவார்...’ என்கிறார்.''
''இது என்ன புதுக் கதை?''
''மதுரைத் தி.மு.க-வில் பரவி இருக்கும் சமாசாரத்தைத்தான் சொல்கிறேன். அழகிரியின் சத்யசாய் நகர் வீடு கடந்த ஒரு வாரமாக அமைதியாய் இருக்கிறது. தனது முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் நம்பிக்கைக்குரிய சென்னைப் பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டாராம் அழகிரி. இரண்டு உதவியாளர்கள் மட்டும் காலையும் மாலையும் வந்து சில மணி நேரங்கள் இருந்து, போன் வந்தால் பேசிவிட்டு... கடிதங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்களாம். மற்றபடி இயல்பாய் வரும் மனிதர் கூட்டம் மொத்தமாய் குறைந்துவிட்டதாம். 'அழகிரியை ஆதரித்துப் பேசினால், தங்களை போலீஸ் வளைத்துவிடுமோ?’ எனப் பயந்து, சிலர் தேவை இல்லாமல் அழகிரியைத் திட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம்!'' என்று சொல்லிவிட்டு விண்ணைத் தொட்டார் கழுகார்!
படங்கள்: கே.குணசீலன்,
சொ.பாலசுப்ரமணியன்
''கோயிலுக்கு வர முடியும், கோர்ட்டுக்கு வர முடியாதா?''
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான  சொத்துக் குவிப்பு வழக்கு திங்கள் கிழமையும் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் பி.குமார், ''எனது கட்சிக்காரர் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கிறார். மாநில முதல்வராக  இருப்பதால் மக்கள் பணி அதிகம் இருக்கிறது.  பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது நடக்கிறது. அதனால் அவருக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்!'' என்று கேட்டார். 
இதைக் கேட்டு அரசு வக்கீல் ஆச்சார்யா கோபமானார். ''ஜெயலலிதா சமீபத்தில்கூட மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்தார். இப்போது காவிரி பிரச்னை போன்று எதுவும் இல்லாததால் பாதுகாப்பில் எவ்வித பிரச்னையும் இருக்காது. அவருக்குத் தேவையான பாதுகாப்பை கோர்ட் ஏற்படுத்தித்தரும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்!'' என்று கிடுக்கிப் பிடி போட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா, தீர்ப்பை ஆகஸ்ட் 12-க்கு ஒத்தி வைத்துள்ளார். ஜெயலலிதா நீதிமன்றப் படி ஏறுவாரா என்பது அன்று தெரிந்துவிடும். 
 ''கட்சியைக் கலைக்கத் தயார்!''
ராமதாஸும் திருமாவளவனும் மீண்டும் கைகோத்து​விட்டனர். 'தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தவர்கள், இடையில் கொஞ்சம் இடைவெளியில் இருந்தார்கள். 'தமிழீழமே தீர்வு’ என்ற தலைப்பில் கடந்த 7-ம் தேதி சென்னையில் நடத்திய கருத்தரங்கில்தான் இருவரும் மேடை ஏறினார்கள். ''விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகள்தான், தமிழீழம், விடுதலைப் புலிகள் ஆகியவற்றை ஆதரிக்கும் கட்சிகள். அதனால்தான், டாக்டர் ராமதாஸுடன் கைகோத்தோம்!'' என்று பேச ஆரம்பித்தார் திருமாவளவன். ''ராஜபக்ஷே என்ன சொல்கிறாரோ, அதைத்தான் இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்கின்றன. போர்க் குற்றத்தை மட்டுமே அவை எதிர்க்கின்றன. தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. தி.மு.க-வோ சூழ்நிலைக் கைதி. அதனால் இந்த விஷயத்தில் நாங்கள் இரண்டு பேர்தான் உறுதியாக எதிர்க்கிறோம்!'' என்றவர், ''என்னுடைய எம்.பி. பதவியைவைத்து நாக்குகூட வழிக்க முடியவில்லை. அதனால் எம்.பி. பதவியைக்கூட தூக்கி எறியத் தயார். ராமதாஸுடன் கைகோத்து ஈட்டி முனையுடன் களம் பாய நான் தயாராக இருக்கிறேன். அதற்காக, கட்சியைக் கலைத்துவிட்டு வரவும் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னோடு தோளோடு தோள் நின்ற தொண்டர்களுக்கு எதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். தேர்தல் அரசியலில் எப்படி இணைந்து களம் காண்பது என்பதுபற்றி மேலும் யோசித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்!'' என்று பூடகமாக எதையோ சொல்லி, உடனே வேறு சப்ஜெக்ட்டுக்குத் தாவினார் திருமா.
அவரின் இந்தப் பேச்சு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பைக் கிளப்பி உள்ளது!
 விநோதக் கூட்டணியில் வைகோ!
18-வது வருடமாக இஃப்தார் விருந்தை நடத்தி வருகிறார் வைகோ. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் ஹைதர் அலியும், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய லீக் கட்சியின் பசீரும் இந்த விழாவில் கலந்துகொண்டதுதான் ஆச்சர்யம். இஃப்தார் நிகழ்ச்சியில் வைகோ அரசியல் பேசுவது கிடையாது. இதைப் பல வருடங்களாகக் கடைப்பிடித்து வருகிறாராம். தேர்ந்த இஸ்லாமியரைப்போல, மார்க்க சொற்பொழிவு ஆற்றினார் வைகோ. வெறும் நோன்புக் கஞ்சி மட்டும் கொடுக்​காமல், பிரியாணியும் போட்டு அசத்தினார் வைகோ.
'நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்?’
தனது சொந்த மண்ணான திருவாரூர் வரும்போது மட்டும் வழக்கத்தைவிட, அதிகமாக உணர்ச்சிவசப்படுவார் கருணாநிதி. இந்த முறையும் அப்படித்தான்!
திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவசர அவசரமாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் எத்தனையோ கட்சி முக்கியஸ்தர்கள் இருக்க, அவர்கள் யார் பெயரையும் போட வேண்டாம் என்று கருணாநிதி கட்டளை போட்டார். நடிகர் வாகை சந்திரசேகர் பெயர் மட்டும்தான் விளம்பரங்களில் இருந்தது. இதுவே பலருக்கும் மனக் கசப்பைக் கொடுத்ததாம்.
ஆனால், டி.ஆர்.பாலு, எல்.கணேசன் உள்ளிட்டவர்கள் மேடையில் உட்காரவைக்கப்​பட்டார்கள். இறுதியாக, ''நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது. ஆனால், தி.மு.க-வை யாராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாது!'' என்று கருணாநிதி சொன்னதைக் கேட்டபோது, தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்!

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010