********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சென்ற வார செய்திகள் (28 செப்டம்பர் 2011)

Wednesday, September 28, 2011

சென்னையை ஆளப்போவது யார்?

மாநகராட்சி மோதல் ஆரம்பம்
சென்னை மாநகராட்சி என்கிற கோட்டையைப் பிடிக்க அ.தி.மு.க.,
தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. என நான்கு தரப்பில் இருந்தும் சுறுசுறுவென ஆட்கள் களம் இறங்கி விட்டார்கள். முக்கியக் கட்சிகள் அதற்குள் பிரசாரத்தை துவக்கிவிட்டதால் சென்னை இப்போது செம ஹாட்!
'நாங்கதான் ஜெயிக்கப் போறோம்...’ என்கிற ஓவர் நம்பிக்கை இப்போதே அ.தி.மு.க. தொண்டர்களிடம்  தட்டுப்படுகிறது. அதன் மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, அதிகாலையிலேயே சென்னைக்குள் புகுந்து புறப்படத் தொடங்கிவிட்டார்.     அவரது ஆதரவாளர்களோ, ''அ.தி.மு.க-வில் எத்தனையோ பேர் முட்டி மோதினாங்க. ஆனா, அண்ணன் அப்ளை பண்ணிட்டு அமைதியா இருந்தார். மேயர் வேட்பாளருக்கு இவரைவிட சரியான சாய்ஸ் வேற யாரும் இல்லைன்னு அம்மாவே முடிவு பண்ணித்தான் இவரை அறிவிச்சாங்க. அதுவும் இல்லாம ஸ்டாலினை எதிர்த்து சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் இவர் தோத்த நேரத்திலேயே, 'கவலைப்படாதிங்க துரைசாமி. உங்களுக்கு நல்ல வாய்ப்பு தர்றேன்’னு அம்மா சொன்னாங்க. அதை நிறைவேத்திட்டாங்க. அண்ணனுக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். மாநகராட்சி முழுக்க கல்வி வசதிகளை மேம்படுத்துறதுதான் அவரோட பிரசார யுக்தியா இருக்கும்...'' என்று குதூகலமாய் சொல்கிறார்கள்.
''சென்னைவாசிகளுக்கு இருக்கும் தி.மு.க. வெறுப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக மேயராக இருந்தபோதும் ஒழுங்காக நிர்வாகப் பணிகள் செய்யாதது, இதுவரை இருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மீதான கெட்ட பெயர், ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் நன்மை உண்டு என்ற எண்ணம், சைதை துரைசாமிக்கு இருக்கும் பிரபல்யம்... ஆகிய ஐந்தும் சேர்ந்து இரட்டை இலையை ஜெயிக்க வைக்கும்!'' என்று அ.தி.மு.க.வினர்கள் சொல்கிறார்கள்.
தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அலட்டிக் கொள்ளாமல் படுகூலாக இருக்கிறார். இவரது பெயர் அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலை 5 மணிக்கே இவர் வீட்டு வாசலில் சால்வைகளுடன் வாழ்த்துச் சொல்ல கட்சியினர் குவிந்துவிட்டார்கள். வரும் அனைவரிடமும், 'தேவை இல்லாத அரசியல் பேசாதீர்கள். தேர்தல் வேலைகளை எப்படிப் பார்ப்பது என்று மட்டும் பேசுங்கள்’ என்கிறார். 'அரசியல் பேசாதே’ என்று சொல்லும் ஒரே அரசியல்வாதி இவராகத்தான் இருக்கும்.
நம்மிடம் பேசியவர், ''சட்டசபை தேர்தலை மனசுல வெச்சிக்கிட்டு இதுலயும் தி.மு.க. தோத்துப் போயிடும்னு கணக்கு போடுறது தப்பு. அப்ப மக்கள் இருந்த மன நிலை வேற. இப்ப இருக்குற மன நிலை வேற. அ.தி.மு.க. அரசின் சமச்சீர்க் கல்வி குளறுபடி, புதிய தலைமைச் செயலகத்தை முடக்கிப் போட்டது, தமிழகத்தில் சுமார் 550 மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அந்த திட்டத்தை ரத்து செய்து நோயாளிகளின் உயிரோடு விளையாடியது என்று அத்தனை குளறுபடிகளையும் மக்கள் கவனிச்சிட்டுதான் வர்றாங்க.
சென்னை மக்களின் பெரும் பிரச்னை கூவம். எங்க ஆட்சியில அந்த நதியை சுத்தப்படுத்த திட்டங்கள் தொடங்கினோம். ஆனால், இந்த ஆட்சியில அதுதொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை. தி.மு.க. ஆட்சியில் கலைஞர் செயல்படுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக பல நல்ல திட்டங்​களை இந்த அரசு ரத்து செய்துள்ளது. வெற்றிகரமான மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செஞ்சிட்டு மோனோவை அறிவிக்கிறாங்க. மெட்ரோ ரயில்ல ஒரு மணி நேரத்துல 40,000 பேர் வரை பயணிக்கலாம். 130 கிலோமீட்டர் வரை வேகம் போகும். ஆனால், மோனோ ரயிலில் 10,000 பேர்தான் பயணிக்க முடியும். 15 முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரைக்கும்தான் ஓடும். இதை எல்லாம் இந்த அரசுக்கு எடுத்துச் சொல்ல ஆளே இல்லை போலிருக்கு.
எங்களோட சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்டாலே போதும். இப்பக்கூட கொருக்குப்பேட்டை மேம்பாலம், தங்கச்சாலை மணிக்கூண்டு மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப் பாதை, வில்லிவாக்கம் சுரங்கப் பாதை, பல இடங்களில் சிறு பாலங்கள் என்று ஆட்சி மாற்றத்துக்கு அப்புறம்கூட, மாநகராட்சி சார்பில் தொய்வு இல்லாமல் பணிகள் செஞ்சிட்டுத்தானே இருக்கோம். மக்களுக்குத் தெரியும்... யாருக்கு ஓட்டு போடணும்னு...'' என்கிறார்.
ம.தி.மு.க-வின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாள​ரான மனோகரன் அக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார்.  மறைந்த தி.மு.க. பிரமுகரான 'மெட்டல் பாக்ஸ்’ மு.நடராசனின் மகன் இவர். வைகோவுடன் தி.மு.க-வில் இருந்து வைகோவுடன் ஒன்றாக வெளியேறிய இவருக்கு வடசென்னையில் ஓட்டு வங்கி கணிசமாக இருக்கிறது. ஏற்கெனவே, 2001-ல் ஸ்டாலினை எதிர்த்து மேயர் வேட்பாளராக போட்டியிட்ட அனுபவமும் உண்டு.
அவரிடம் பேசினோம். ''ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் என்கிற உத்தரவாதத்தை ம.தி.மு.க. தரும். இதுதான் எங்களது தாரக மந்திரம். கடந்த காலங்களில் எந்த ஆட்சியினரும் சென்னைக்குத் தேவையான முழுமையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. இன்னும் மெட்ரோ வாட்டர் செல்லாத குடிசைப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. அப்படியே மெட்ரோ வாட்டர் சப்ளை இருந்தாலும் அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால், சென்னை மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படாது...'' என்கிறார் உறுதியுடன்.
இதற்கிடையில் தே.மு.தி.க-வுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  தேர்தலை சந்திக்க இருப்பதற்கான  பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.  சென்னை நான்கு முனைப் போராட்டத்தை சந்திக்க இருக்கிறது. அதனால் சென்னை அதிரப்போவது மட்டும் நிச்சயம்!
**********************************************************************************
கருணாநிதி வேட்பாளர்கள் மேயர் ஆவார்களா?

மாநகராட்சி தி.மு.க.... மள மள ரவுண்ட்!
'உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிக்காத முத்தமிழ்த் தலைவா! உமக்கு என் உளமார்ந்த நன்றி!’ என்று 'முரசொலி’யில் முழுப் பக்க விளம்பரம் கொடுக்காததுதான் மிச்சம்... மற்றபடி ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஸீட் கிடைக்காத தி.மு.க. புள்ளிகள். ஆளும் கட்சியின் அதிகார மற்றும் பண பலம், மாவட்டச் செயலாளர்களின் தொடர் கைதுகள் போன்ற எதிர்மறை விஷயங்களால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஏற்கெனவே 'சம்பாதித்ததை’ இழக்க தி.மு.க. புள்ளிகள் தயார் இல்லை. ஆனாலும், ஃபார்மாலிட்டிக்காகப் பணம் கட்டியவர்களில் சிலரின் உச்சி முடியைப் பிடித்துத் தூக்கிக் கதறக் கதறக் களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறார் கருணாநிதி. அந்த தி.மு.க. மேயர் வேட்பாளர்களின் பக்பக் ப்ரொஃபைல் இதோ...

ராஜேஸ்வரி - வேலூர்:
வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்த இவர் அரசு மருத்துவர். கணவர் மோகன்காந்தியும் அரசு மருத்துவர்தான். அ.தி.மு.க வேட்பாளர் கார்த்தியாயினி போலவே ராஜேஸ்வரிக்கும் சொந்தக் கட்சியில் அறிமுகம் இல்லாததால், எந்த செல்வாக்கும் இல்லை. 'அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை... வேட்பாளரான பிறகும் கட்சிக்காரங்ககூட பழக அந்த அம்மா பதறுவது நல்லாவா இருக்கு?’ என தி.மு.க-வினர் குறை பட்டுக்கொள்கின்றனர். விளைவு, டாக்டரம்மாவை ஜெயிக்கவைக்க பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கிறார் துரைமுருகன். அதெல்லாம் இருக்கட்டும்... 'தலைமைக் கழகம் இவரை வேட்பாளராக அறிவிச்ச பிறகுதான் கட்சியோட உறுப்பினர் அடையாள அட்டையை இந்த அம்மா வாங்குச்சுப்பா..!’ என்று வேலூர் உடன்பிறப்புகள் காட்டமாகப் பேசுகி றார்கள். உண்மையா மேடம்?

கார்த்திக் - கோவை:
கோவை மாநகராட்சியின் சிட்டிங் துணை மேயர் கார்த்திக். கோவை சிட்டி தி.மு.க-வைப் பொறுத்த வரையில் பொங்கலூரார் டீம், வீரகோபால் டீம் என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், கார்த்தியோ தனக்கென ஒரு கூட் டத்தை உருவாக்கவில்லை. யாரையும் பகைத்துக்கொள்வதும் இல்லை. எதிர்ப்படும் எல்லோருக்கும் ஒரு வணக்கம்வைத்து நகர்வதால் 'கும்பிடு கார்த்திக்’ என்று கட்சியில் செல்லப் பெயரே உண்டு. அடிக்கடி கோவை வரும் ஸ்டாலினின் கண்படவே நடந்துகொள்வதால் அவரிடம் பரிச்சயம் உண்டு. இதை எல்லாம் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. அதாவது, பெரிய குடும்பத்தின் பேத்தி ஒருவருக்கு சொந்தமாக கோவை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பில்டிங் தயாராகி இருக்கிறது. 'இந்த கட்டடம் முறையான அனுமதி பெறவில்லை’ என்று அப்போதைய எதிர்க் கட்சியினர் பிரச்னை கிளப்பினார்கள். அந்த விவகாரத்தை சாமர்த்தியமாகக் கையாண்டு 'சைலன்ட்’ செய்ததன் மூலம் கட்சியின் கவனத் துக்கு உள்ளானார்; பெரிய வாய்ப்பையும் பெற்றிருக் கிறார்.
பாக்யநாதன் - மதுரை:
பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி உள்ளிட்ட சில சீனியர்களின் பெயர்களைத் தனது ஆலோசனைப் பட்டியலில் வைத்திருந்தார் கருணாநிதி. ஆனால், 'பாக்யநாதன்’ என்ற பெயரை அழகிரி நீட்ட, அதுவே டிக் செய்யப்பட்டதாம். 2001-ல் கவுன்சிலராக இருந்த பாக்யநாதன் நகர் அமைப்புக் குழு தலைவராகவும் இருந்தவர். கடந்த தேர்தலில் தனது வார்டு, பெண்களுக்காக மாற்றப்பட்டதால், மனைவி நாகலெட் சுமியை கவுன்சிலராக்கினார். ஆனாலும், சமீப காலமாகக் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் இருந்த இவரை தேடிப் பிடித்து களத்தில் இறக்கி இருக்கிறாராம் அழகிரி. காரணம்? மற்ற யாரை நிறுத்தினாலும் ஆளும் கட்சியி னர் ஏதாவது வழக்கில் சிக்கவைத்து ஆட்டத் தைக் கலைத்துவிடுவார்கள் என்பதால், இந்த ஏற்பாடாம்! துணை மேயராக இருந்தே அள்ளித் தட்டிய மன்னனுக்கும் மேயர் ஸீட் மீது ஒரு கண் உண்டுதான். ஆனால், இன்னும் ஐந்து வருஷங்களுக்கு சூழ்நிலை சரியில்லை என்பதால், தனது நண்பரான பாக்யநாதனை அவர்தான் அழகிரியிடம் சிபாரிசு செய்திருக்கிறார் என்கிறார்கள் மதுரை உ.பி-க்கள். ''இவர் மேயரானால் மன்னனே மேயரானது மாதிரித்தான்...'' என்றும் காதைக் கடிக்கிறார்கள்.
அமுதா - நெல்லை:
கட்சியின் அனுதாபி என்பதைத் தவிர, தீவிர அரசியலுக்கு வந்தவர் கிடையாது. அரசு அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவரும், கடந்த முறை பாளையங்கோட்டை மண்டலத் தலைவராகச் செயல்பட்டவருமான சுப.சீதாராமன் இவரது தந்தை. வேட்பாளர் ரேஸில் இருந்த சிட்டிங் பெண் கவுன்சிலர்கள் பலரையும் மீறி இவருக்கு வாய்ப்புக் கிடைக்கக் காரணமாக இருந்தது இந்தத் தகுதி மட்டுமே. கடந்த 1996-ல் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த சமுதாய வாக்குகள் சிதறாமல் தனக்கு வந்து சேரும் என நம்புகிறார். அத்துடன், மேலப்பாளையம், பாளையங்கோட்டையில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளும் கட்சிக்காகத் தனக்கு சாதகமாகவே கிடைக்கும் என நம்புகிறார். நெல்லை தி.மு.க-வில் இதுவரை இருந்து வந்த கோஷ்டிகள், கைது சம்பவங்களுக்குப் பின்னர் ஓய்ந்து இருப்பதும் இவரது நம்பிக்கையை உயர்த்தியிருக்கிறது.
பொன் இனிதா - தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர தி.மு.க. அவைத் தலைவர், வட்டச் செயலாளர், நகராட்சி கவுன்சிலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த பி.எஸ்.காசிராஜனின் மருமகள்தான் பொன் இனிதா. நகரில் வலுவான அரசியல் பிரமுகராக வலம் வந்த காசிராஜனுக்கு இதுபோன்ற முக்கியப் பதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கைகூடவில்லை. ஆனால், காசிராஜன் மரணத்துக்குப் பின் அவரது குடும்பப் பெண்ணுக்கு இப்படி ஒரு சான்ஸ்.
வசதி வாய்ப்புக்கு குறைவில்லாத பொன் இனிதா பி.ஏ-பட்டதாரியும்கூட. 'மேயர் பதவியைப் பிடித்தே ஆக வேண்டும்’ என்கிற கட்சித் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதாகச் சொல்லி மாவட்டச் செயலாளர் பெரியசாமி களத்தில் இறங்கி இருக்கிறார். ஆனாலும், 'நில அபகரிப்புப் புகார்களை அவ்வப்போது அவிழ்த்துவிட்டுப் பூச்சாண்டி காட்டும் ஆளும் கட்சியோட அட்ஜஸ்ட்மென்ட்ல இருக்கும் பெரியசாமி முழு மூச்சா உழைப்பாரா?’ என்று எடக்கு மடக்காக சந்தேகிக்கிறார்கள் லோக்கல் தி.மு.க-வினர்.
கலையமுதன் - சேலம்:
சிறை மீண்ட வீரபாண்டி ஆறுமுகத் துக்கு கருணாநிதி கொடுத்த முதல் அசைன்மென்ட் 'சேலம் மேயர் வேட் பாளரை செலக்ட் பண்ணுய்யா’ என்பதுதான். வீரபாண்டியார் டிக் அடித்தது தனது தீவிர ஆதரவாளரான கலையமுதன் பெயரை. ஆனால், அவர் ஜெயிலுக்குப் போன பிறகு, கலையமுதன் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுடன் நட்பு பாராட்டியது ஆறுமுகம் அறியாத ரகசியம்தான். சேலம் மாநகர தி.மு.க. செயலாளராக இருக்கும் கலையமுதன், இரண்டு முறை கவுன்சிலர் ப்ளஸ் ஒரு முறை மாநகராட்சியின் எதிர்க் கட்சியின் தலைவரும்கூட. அடாவடித் தனம், கட்டப்பஞ்சாயத்து என்று எந்தப் பிரச்னையிலும் சிக்காத புள்ளி. ஆனால், சேலத்தின் பெரும்பான்மையான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது இவருக்கு ஒரு சறுக்கலாக இருக்கலாம்.
செல்ல பொன்னி - ஈரோடு:
கட்சியின் நீண்ட நாள் விசுவாசியான செல்ல பொன்னிக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, ஈரோடு மாநகர தி.மு.க-வினரின் கண்ணை உறுத்தாதது ஆரோக்கிய மான விஷயம். இரண்டு முறை மாவட்ட துணைச் செயலாளராக இருந்ததன் மூலம் தொண்டர்கள் வரை அறிமுகம் உண்டு. இதுவரை பல தேர்தல்களில் டிக்கெட் கேட்டும் கிடைக்காத இவரது நிலையைத் திரும்பிப் பார்த்த தலைமை இம்முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. உட்கட்சிப் புள்ளிகளின் வாஞ்சையான ஒத்துழைப்பும், ஈரோடு நகராட்சி நெடுங்காலமாக தி.மு.க-வின் கைகளிலேயே இருந்து வரும் சென்டிமென்ட்டும் செல்ல பொன்னிக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

செல்வராஜ் - திருப்பூர்:
சென்னைக்கு அடுத்து திருப்பூரிலும் சிட்டிங் மேயரே வேட்பாளராகி இருக்கிறார். ஒரு காலத்தில் பனியன் கம்பெனித் தொழிலாளியாக இருந்தவர். மாநகர தி.மு.க. செயலாளராகவும் இருப்பதால் கட்சியில் செல்வாக்கு நிச்சயமாக இருக் கிறது. ஆனால், 'நான் மேயரா?’ என்ற ஆச்சர்யத்திலேயே கடந்த காலங்களைக் கழித்துவிட்டதால், மாநகராட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்று கடுப்பாகிறது பொதுஜனம். கூடவே செல்வராஜின் வலது, இடது கைகளாக இருந்த இரண்டு பேர்வழிகள் பண்ணிய சேட்டையால் இவரது பெயர் டேமேஜாகிக்கிடக்கிறது. போதாக் குறைக்கு நில அபகரிப்பு விஷயங்கள் சிலவற்றை சைலன்ட்டாகத் தயாரித்திருக்கும் போலீஸ் 'எப்போ அமுக்கலாம்’ என்று கண் வைத்த படியே இருப்பதாகத் தகவல்!
ஜூ.வி. டீம்
************************************************************************

வைகோ மேயர்கள்!

விறுவிறு அறிமுகம்
ட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்த ம.தி.மு.க., இந்த உள்ளாட்சியில் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டவேண்டிய கட்டாயத்துடன் களம் இறங்கி உள்ளது. அந்தக் கட்சியின் மேயர் வேட்பாளர்களை ஒரு ரவுண்டு பார்க்கலாம்.
மதுரை - ஆர்.பாஸ்கர சேதுபதி:
இலங்கைப் பிரச்னைக்காக டெல்லியில் வைகோ போராட்டம் நடத்திய போது, தொண்டர் அணியைச் சேர்ந்த 620 பேரை தன் சொந்தச் செலவில் ரெயிலில் அழைத்துச் சென்றவர் பாஸ்கர சேதுபதி. அதுகூட 'கடன் வாங்கித்தான்’ என்பதை அறிந்து வைகோ உருகிவிட்டாராம். நீண்ட காலமாக ம.தி.மு.க. மாநில தொண்டர் அணித் துணை அமைப்பாளராக இருந்து சமீபத்தில் தொண்டர் அணி அமைப்பாளராக உயர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு மதுரை மேயர் பதவிக்குத் தனித்து நின்று சுமார் 12,000 வாக்குகள் வாங்கினார் பாஸ்கர சேதுபதி. தமிழகம் முழுக்க இருக்கும் தொண்டர் அணியினரும் வைகோவும் தீவிரப் பிரசாரத்துக்கு உறுதி கொடுத்து இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நெல்லை - மகேஸ்வரி நடராஜன்:
நெல்லை ம.தி.மு.க-வினருக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர். கணவர் நடராஜன், பேட்டை பகுதி இலக்கிய அணிப் பொறுப்பாளராக இருப்பது மட்டுமே கட்சியில் மகேஸ்வரிக்கான விசிட்டிங் கார்டு. சமீபத்தில் நடந்த கட்சி மாநாட்டில், நடராஜனின் வேகத்தைக் கண்டு வியந்துபோன வைகோ, தற்போது அவரது மனைவிக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்து இருப்பதாகக் கட்சியினர் பேசிக்கொள்கின்றனர். கட்சிக்குள் பல்வேறு கோஷ்டிகள் இருந்தாலும் வேட்பாளர் பெயர் தலைமையால் அறிவிக்கப்பட்ட சூட்டோடு கட்சியினர் பம்பரமாகச் சுழல்வதுதான், பிற கட்சியினரை மிரளவைத்துள்ளது.
தூத்துக்குடி - பாத்திமா பாபு:
கட்சியில் உறுப்பினராக இல்லாத பாத்திமா பாபுவை வைகோவே தொடர்புகொண்டு ம.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கச் சொன்னாராம். காரணம், இவர் ஈழத் தமிழர் பிரச்னை, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுப்பவர். தீவிரப் போராளியாக இருப்பதால், பாத்திமா பாபுவை தன்னுடைய இயக்கத்தில் இணைத்துக்கொள்ள விரும்பிய வைகோ, முதற்கட்டமாக அவரை வேட்பாளர் ஆக்கி யிருப்பதாகச் சொல்கிறார்கள்.  புறநகர்ப் பகுதியான கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டாரத்தைவிட தூத்துக்குடி மாநகரில் ம.தி.மு.க-வுக்கு பலம் கம்மி என்பதால், கட்சியிலும் பெரிய அளவு போட்டி இல்லை என்கிறார்கள்.  இங்கு அனைத்துக் கட்சிகளும் நாடார் சமுதாயத்தவரையே வேட்பாளராக நியமித்து வருவதால், மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என ம.தி.மு.க-வினர் நம்புகிறார்கள்.
கோவை - அர்ஜுன் ராஜ்:
ம.தி.மு.க-வின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கிறார் அர்ஜுன்ராஜ். கட்சிப் பதவியைத் தாண்டி, மத்திய அரசின் இந்திய புதுப் பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர், பெங்களூரு ஸ்ரீசாமுண்டீஸ்வரி சுகர்ஸ் லிமிடெட்டின் இயக்குநர், சென்னை ஆடிட்டர் சங்க உறுப்பினர் என்று பல வெயிட்டான பதவிகளுக்கு சொந்தக்காரர். மு.கண்ணப்பனின் உறவினராக இருந்தாலும், அவர் பின்னே போகாமல் ம.தி.மு.க-வின் விசுவாசியாகத் தொடர்வதால், வைகோ மனதில் தனி இடம் பிடித்துவிட்டார். 'மாநகரம் முழுவதும் மரங்களை நட்டு கோவையைப் பசுமை நகராக்குவேன்’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி உள்ளார்.
திருப்பூர் - நாகராஜ்:
கட்சியினரிடம் பணிவாகப் பேசுவது, தேர்தல் செலவுகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வசதி யுடன் இருப்பதுபோன்ற தகுதிகள்தான் நாகராஜை வேட்பாளராக்கி உள்ளன. ரியல் எஸ்டேட் மற்றும் பனியன் தயாரிப்பு தொழில் செய்வதால் மற்ற திராவிடக் கட்சிகளின் பண பலத்தை இவரால் சமாளித்து நிற்க முடியும் என்கிறார்கள். திருப்பூர் மாநகர மக்களுக்கு இவர் அறிமுகம் இல்லை என்றாலும்கூட, கட்சியினரின் ஒற்றுமை தன்னைக் கரை சேர்த்துவிடும் என்று நம்புகிறார் நாகராஜ்.
ஈரோடு - 'பூங்கொடி’ சுவாமிநாதன்:
ம.தி.மு.க-வின் விசுவாசம் மிக்க தொண்டர்களில் ஒருவர். ம.தி.மு.க. உதயமாகும் முன்பே வைகோவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டவர். முன்னணி நிர்வாகிகள் பலர் திரும்பவும் தி.மு.க-வுக்குத் திரும்பியபோதும், வைகோவைவிட்டு விலகாதவர் பூங்கொடி சுவாமி நாதன். ஈரோட்டைப் பொறுத்த வரைக்கும் தி.மு.க-வின் பெயர் ரொம்பவே கெட்டுக்கிடக்கிறது. அதனால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை கவர்ந்து வெற்றிபெற நினைக்கிறார் பூங்கொடி.
வேலூர் - ஈஸ்வரி:
ம.தி.மு.க-வுக்கு வேலூரில் முன்னணி நிர்வாகிகள் பலர் இருந்தும் போட்டியிட முடியவில்லை. காரணம், எஸ்.சி. பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப் பட்டதுதான். அதனால், காட்பாடி காங்கேய நல்லூரைச் சேர்ந்த காந்தி நகர் கிளைச் செயலாளர் பதவி வகிக்கும் ஈஸ்வரி வேட்பாளர் ஆனார். அ.தி.மு.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகள் எல்லாம் 'செல்வாக்கான’ வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காந்தி நகரில் டீக்கடை வைத்திருக்கும் ஜெயகுமார் மனைவிக்கு ஸீட் கொடுத்து, களத்தில் வித்தியாசப்பட்டு நிற்கிறது ம.தி.மு.க. 'நாம் தமிழர்’ கட்சியினரின் வாக்குகளும், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாக்குகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ம.தி.மு.க-வினர் இப்போதே ஈழம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை ஒளிபரப்பி வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஜூ.வி. டீம்
***********************************************************************
''ஜெ. வருந்தவும் இல்லை, திருந்தவும் இல்லை!''

டந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் முதல் கட்சியாக நுழைந்தது, புதிய தமிழகம். மூன்று தமிழர் உயிர்காப்பு, பரமக்குடி கலவரம் ஆகியவற்றை சட்டமன்றத்தில் கிளப்பியதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தை முதலில் பெற்றவரும் இவர்தான். இப்போது, கூட்டணி நிலவரம் களேபரம் ஆகியிருக்க... புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேசினோம்.
''அ.தி.மு.க. தலைமை, கூட்டணிக் கட்சிகளை மிக மோசமாக அவமதித்து​விட்டது என்று எதிர் அணியினரே ஆதங்கப்​படுகிறார்களே?''
''தி.மு.க-வைப் போலவே ஆட்சியைப் பிடிப்பதற்காக, அ.தி.மு.க-வும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு மெகா கூட்டணியை அமைத்தது. மரபுப்படி, அதே அணிதான் உள்ளாட்சித் தேர்தல், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் தொடர வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி, உதாசீனப்படுத்தி உள்ளது, அ.தி.மு.க. தலைமை. வழக்கமாக, கூட்டணியின் அங்கமாக இருக்கும் கட்சிகள்தான், ஆளும் கட்சியின் குறைகள், கருத்து வேறுபாடுகளால் அணியில் இருந்து விலகும். இதுவரை தமிழக அரசியலில் கூட்டணித் தலைமையே மற்ற கட்சிகளை ஒதுக்கித் தள்ளியது இல்லை. ஜெயலலிதா இப்போது அதையும் செய்துகாட்டி இருக்கிறார். இது, கூட்டணி தர்மத்தை அப்பட்டமாக மீறுவதாகும்!''
''ஜெயலலிதா இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்?''
''கடந்த தி.மு.க. ஆட்சியின் மொத்தத் தவறுகளுக்காகவும் அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. இன்று காங்கிரஸ் துணைகூட இல்லாமல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு நிற்கிறது. அதை முற்றாக வீழ்த்துவதற்கு இதுவே சரியான தருணம். சட்டமன்றக் கூட்டணியே இப்போதும் தொடரும் பட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் எந்த இடத்திலும் தி.மு.க. டெபாசிட் வாங்கக்கூட முடியாது. ஆனால், ஜெயலலிதா தன் இமாலயத் தவறுகளால் தி.மு.க-வுக்கு மறுபடியும் வாழ்வு கொடுக்கிறார். மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது. எங்கோ ஓர் இடத்தில் எதற்காகவோ சமரசம் நடக்கிறது. எதற்காகவோ ஜெயலலிதா பின்வாங்குகிறார், அச்சப்படுகிறார் என்றுகூட நினைக்கிறேன். ஜெயலலிதாவின் முதல் (1991)ஆட்சிக் காலத்தில் அவரை வேறு யாரோ இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. 2001-ல் ஆட்சிக்கு வந்தபோது அவரிடம் சிறிது மாற்றம் ஏற்பட்டது போல இருந்தது. ஆனால், இந்த ஆட்சியைப் பார்க்கும்போது, ஜெ. சுயமாக செயல்படவில்லை; பின்னால் இருந்துகொண்டு அவரை யாரோ இயக்குகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.''
''பரமக்குடி சம்பவத்தில் முதல்வரின் தவறு என்ன என்று நினைக்கிறீர்கள்..?''
''பொதுவாக, ஜெயலலிதா ஆட்சியில் எல்லாக் காலகட்டங்களிலும் ஒடுக்கப்பட்டோர் மீது அத்துமீறல்கள் நடந்துள்ளன. வாச்சாத்தியில் வெறியாட்டம், சிதம்பரம் பத்மினி, சின்னாம்பதியில் பழங்குடியினர், கொடியங்குளம் வன்முறை எனப் பல சம்பவங்களைச் சொல்ல முடியும். காலம் அவரிடம் மாற்றத்தை உருவாக்கும் என நம்பினோம். ஆனால், ஜெயலலிதாவிடம் எந்த மாற்றமும் உருவாகவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சி போக வேண்டும்; நல்ல ஆட்சி வர வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். போலீஸ் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக அல்ல. 'யாருக்கும் கட்டுப்படாமல் காவல் துறை தன்னிச்சையாகச் செயல்படவேண்டும்’ என்று முதலமைச்சரே பேசுகிறார். அரசியல் சாசனத்தில் எந்த ஓர் அரசுத் துறைக்கும் இப்படி ஒரு சிறப்பு உரிமை இல்லை.
பரமக்குடியில் அன்று நடந்தது என்ன? போலீஸ் டி.ஐ.ஜி-யே பொதுமக்களின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அவர் செய்தது, முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம். எளிய மக்கள் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் போலீஸார் ஏளனமாகத்தான் நடத்துவார்கள். இதில், முதலமைச்சரே போலீஸுக்கு ஊக்கம் கொடுத்துப் பேசினார். இது அவர்களுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்துத் தறிகெட்டு நடந்துகொள்ளும் அளவுக்குப் போயிருக்கிறது. பரமக்குடியில் மக்கள் மறியல் செய்தார்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதை போலீஸ் எப்படிக் கையாளவேண்டும் என்ற சட்டரீதியான ஒரு நடைமுறையைக்கூட அன்று பின்பற்றவில்லையே! நீயா... நானா என ரவுடித்தனமாக, நிரபராதிகளான தேவேந்திர குல மக்களை துப்பாக்கியால் சுட்டு ஏழு உயிர்களைப் பறித்திருக்கிறது போலீஸ்.
சென்னையில் துணை ஆணையராக இருக்கும் செந்தில்வேலனை பரமக்குடிக்கு அனுப்பிவைத்தது யார்? அவரும் டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டலும் சம்பவத்தன்று சென்னையில் யாரிடம் பேசினார்கள்? குறிப்பிட்ட டி.ஐ.ஜி-க்கும் தி.மு.க-வின் தென் மண்டலப் பொறுப்​பாளருக்கும் நெருக்கம் என்று சொல்லப்​படுகிறதே? இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும். நாங்கள் இதை எளிதாக விட்டுவிட மாட்டோம். ஜெயலலிதாவின் ஒவ்வொரு ஆட்சியிலும் தாழ்த்தப்​பட்ட மக்களை அச்சமூட்டி பீதியூட்டுவதையே வழக்கமாக்கி​விட்டார்கள். ஜெயலலிதாவைப் பொறுத்த வரை, தன் தவறுகளுக்காக அவர் வருந்துவதாகவும் இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை. அ.தி.மு.க. அணியில் நாங்கள் சேர்ந்ததன் மூலம் தென் தமிழகத்தில் நல்ல நம்பிக்கை உருவானது. அதை ஒரே நாளில் ஜெயலலிதா நொறுக்கிவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்களை அ.தி.மு.க. சார்பில் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட அவருக்கு மனம் இல்லை. அவர்களின் தலித் விரோதப் போக்கும் மனிதநேயம் இன்மையும்தான் இதில் அப்பட்டமாகத் தெரிகிறது!''
*********************************************************************************
மாவட்டத்துக்கு 100 பேரைக் கொடுங்கள்!

தமிழ் சாதிப் படையைத் திரட்டும் ராமதாஸ்
ள்ளாட்சித் தேர்தலின் உஷ்ணம் எகிறும் வேளையில்... 'தமிழ் சாதிகள்தான் இனி தமிழகத்தை ஆள வேண்டும்’ என்று ஓர் அதிரடி அரசியல் பிரகடனம் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் செய்யப்பட்டு உள்ளது!
தேவரின பாதுகாப்புப் பேரவையின் நிறுவன​ரான கதிரேசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 22-ம் தேதி மதுரை ஒத்தக்கடையில், தமிழ் சாதிகளின் சமூக நீதிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், ''வடக்கில் வன்னியர்களும், தெற்கில் தேவர்களும் கைகோர்த்தால், நம்மைத் தவிர வேறு யாரும் தமிழகத்தை ஆள முடியாது!'' என்கிற ரீதியில் பேசிப் பரபரப்பை உண்டாக்கியவர் ராமதாஸ். அந்தப் பார்வையை இன்னும் விசாலப்படுத்தி இந்த முறை, அவரோடு, நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம், வ.உ.சி. பேரவையின் மாநிலத் தலைவர் கணேசன், யாதவர் மகாசபையின் தேசியச் செயலாளர் குணசீலன், ஆளும் கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ-வான தனியரசு உள்ளிட்டோரையும் அழைத்திருந்தார்கள். குணசீலன், கரிக்கோல்ராஜ் தவிர அத்தனை தலைகளும் ஆஜர்!
''நாம் சின்ன மருது¬​வயும், பெரிய மருதுவையும் பார்த்ததில்லை. இங்கே அமர்ந்திருக்கும் மருத்துவர் ராமதாஸ்தான் பெரிய மருது, தனியரசு சின்ன மருது...'' - என ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்தினார் தேவரின பாதுகாப்புப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவர் முருகேசன்.
அடுத்துப் பேசிய தேவர் சிந்தனை மையத்தின் பசும்பொன் பாண்டியன், ''எங்களைப் பார்த்து ஆதிக்க சாதி என்கிறார்கள். கடவுளைக்கூட கம்பீரமாக நிமிர்ந்து நின்று வணங்கிப் பழக்கப்பட்ட தேவர் இனம், இப்போது 'அம்மா தாயே’ என முதுகு வளைய வணக்கம் போடுகிறதே... அழகிரி சம்சாரத்தை 'எங்கள் குல விளக்கே’னு போஸ்டர் அடிக்கும் அளவுக்கு எங்கள் இனம் ஒடுக்கப்பட்டுக்கிடக்கிறதே! நானும், திருமாவளவனும் சண்டை போட்டால் தமிழன் பின்னுக்குத் தள்ளப்படுவான். அப்புறம், தொப்புளில் பம்பரம் விட்டவர்தான் எதிர்க் கட்சித் தலைவனாக வருவார்; நாளைக்கு முதலமைச்சர் ஆவதற்கும் அச்சாரம் போடுவார்...'' என்று அரங்கத்தைக் கலக்கினார்.
''நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்று சிந்திப்பதே தேச விரோதம் என்று நினைக்கும் மூடர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நான் பரமத்திவேலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டேன். அங்கே பிரசாரத்துக்கு வந்த ஐயா ராமதாஸ், 'தனியரசுவின் நோக்கமும் நம்முடைய நோக்கமும் ஒன்றுதான்’ என நினைத்ததால், பா.ம.க. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு போதிய அழுத்தம் கொடுக்காமலேயே சென்றார். இன்றைக்குத் தொடங்கி இருக்கிற இந்த தமிழ் சாதிகள் இயக்கத்தை சமரசம் இல்லாமல் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தமிழகம் முழுக்க வலுப்படுத்தினால், நாமே இந்த நாட்டை ஆளுகிற நிலை வரும்!'' என்று தடதடத்தார் தனியரசு.
'தனித் தமிழர் சேனை’ தலைவர் நகைமுகன், ''தமிழ் சாதிகள் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க வேண்டுமானால், நமது பொது எதிரியை அடையாளம் காட்ட வேண்டும். தமிழ்ச் சாதிகளை ஆள விடாமல் சூழ்ச்சி செய்து துண்டாடுகிற சக்தி எதுவோ, அதுதான் நமக்குப் பொது எதிரி. தலைமை ஏற்கும் பொறுப்பை ஐயா ராமதாஸ் ஏற்க வேண்டும்!'' என்று உசுப்பேற்றினார்.
கடைசியாகப் பேசிய டாக்டர் ராமதாஸ், ''திராவிடத்தாலும் வீழ்ந்தோம்; தேசியத்தாலும் வீழ்ந்தோம். இனி தமிழ் சமூகங்களை ஒன்றிணைத்து அரசியலை வென்றிடுவோம். அதற்காகத்தான் திராவிடக் கட்சிகளோடு இனி உறவில்லை என்று துணிச்சலுடன் முடிவு எடுத்து இருக்கிறோம். தமிழ்ச் சாதிகளை அடையாளம் கண்டு அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்கள், என்ன நடக்கிறது என்று... சென்னையில் 40, 50 தமிழ் சாதிகளை அழைத்துக் கூட்டம் போட்டுப் பேசுவேன். அத்தகைய கூட்டங்களை மற்ற மண்டலங்களிலும் போடுவோம். திராவிடம் என்ற சொல்லை யார் சொன்னாலும் அவர்கள் நமது பொது எதிரி. மாவட்டத்துக்கு 100 படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அரசியல் கல்வியைப் பயிற்றுவியுங்கள். அப்போதுதான் தமிழ் சாதி ஆள வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் வளரும்...'' என்று அழுத்தம் கொடுத்து முடித்தார்.
ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் அழைப்பதாக இருந்தார்களாம். பரமக்குடியின் கலவர வெப்பம், கருத்தரங்க மேடையில் எதிரொலிக்கலாம் என்பதற்காகவே அந்த முயற்சியைக் கைவிட்டார்களாம். கருத்தரங்க மண்டபத்தைவிட்டுக் கிளம்பும்போது, ''மாவட்டத்துக்கு 100 இளைஞர்கள் வீதம் 1,000 இளைஞர்களைத் தேர்வு செய்து கொடுங்கள். அவர்களுக்கான வித்தியாசமான அரசியல் தளத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. பக்குவப்பட்ட இளைஞர் படையை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை ஓட ஓட விரட்டுவோம்...'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாராம் ராமதாஸ்!
ம்... ஆளுக்கொரு ஆசை!

''பட்டியலை மாத்திக்கலாம் என்றதால் பேச்சு வார்த்தைக்குப் போனோம்!''

அப்பாவியாய்ச் சொல்லும் ஜி.ஆர்.!
ள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை தடால​டியாக ஜெயலலிதா அறிவித்த பின்னால், தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துவிட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தே.மு.தி.க. இப்போதுதான் ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் கட்சி அதன் தலைமையில் அணிவகுப்பது சரிதானா?
''யார் தலைமை ஏற்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. ஓர் அணியாய் நின்று செயல்படுவதுதான் முக்கியம். அத்தோடு தே.மு.தி.க. தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சிதானே! அதனோடு சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதில் பெருமை கொள்கிறோம்’
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து?
''அக்கட்சியின் மாநிலச் செயற்குழு கூடி விவாதித்திருக்கிறது. அவர்களோடு நாங்கள் தொடர்ந்துபேசிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் அணியில் மேலும் இடதுசாரி கட்சிகளும், ஜனநாயகக் கட்சிகளும் இணைவதற்கான முயற்சி​களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். முயற்சியில் வெற்றி கிட்டும் என்று நம்புகிறோம். இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியும் எங்களுடன் இணையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.''
அ.தி.மு.க. இடதுசாரிகளை அவமானப்படுத்தியதாக உணர்கிறீர்களா?
''நாங்கள் உதாசீனப்படுத்தப்பட்டதால்தான் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. அ.தி.மு.க. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அதன் பிறகும், பேச்சுவார்த்தைக்குப் போனோம். எங்கள் பலத்துக்கு ஏற்ப இடங்களைக் கேட்டோம். ஆனால், நாங்கள் கேட்கும் அளவுக்கான எண்ணிக்கையில் இடங்களைத் தர அவர்களுக்கு விருப்பம் இல்லை. 2006-ல் நாங்கள் வெற்றி பெற்ற இடங்களைக்கூட அவர்கள் கொடுக்க விரும்பவில்லை. இருந்தும், பேச்சுவார்த்தை தொடரும்போதே, அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். அவர்களுக்கு எங்களோடு இணைந்து தேர்தலை சந்திப்பதில் விருப்பம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தததால் வெளியேறிவிட்டோம்.''
அ.தி.மு.க. தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல் அறிவித்தும் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கத்தான் வேண்டுமா?
''நாங்கள் இது குறித்துக் கேட்டபோது, 'பட்டியல் அறிவித்துவிட்டாலே அது ஒன்றும் இறுதி முடிவல்ல. அது மாறுதலுக்கு உரியதுதான்’ என்றார்கள். அதனால்தான் பேச்சுவார்த்தைக்குப் போனோம். ஆனால், பேச்சுவார்த்தை நடக்கும்போதே முன்பு செய்தது போன்றே தவறான அணுகுமுறையை கடைப்பிடித்ததால், வெளியே வந்துவிட்டோம்.''
இந்த புதுக் கூட்டணியை தமிழகத்தில் மூன்றாவது மாற்று அணிக்கான தொடக்கம் என்று சொல்லலாமா?
''அப்படிச் சொல்ல முடியாது. இது உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி. மூன்றா​வது மாற்று அணி என்பது கொள்கை அளவில் கட்ட வேண்டிய அணி.''
இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமியக் கட்சிகள், பா.ம.க., ம.தி.மு.க. ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அணிக்காக திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தாரே?
''தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி. தவிர்த்த மற்ற அனைத்து ஜனநாயக, இடதுசாரி கட்சிகளையும் உள்ளடக்கிய அணியை உருவாக்கத்தான் எங்கள் கட்சியும் முயன்று வருகிறது.''
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் கட்சி​யின் நிலைப்பாடு என்ன?
''இப்போதைக்கு எங்கள் கவனம் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்​தான்.''
சட்டமன்றத்தில் 'ஆடு மாடு குட்டி போடும்; கலைஞர் டி.வி. குட்டி போடுமா?’ என்று உங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமமூர்த்தி இன்றைய ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவது மாதிரி பேசினாரே. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
''கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்​பாடுகள், அவர்களின் பேச்சுகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்.''
மார்க்சிஸ்ட் கட்சி அ.தி.மு.க-வின் பின்னால் ஓடுகையில், ஜெயலலிதா ஆதரிக்கும் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தை, சீத்தாராம் யெச்சூரி எதிர்ப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்று கருணாநிதி சொன்ன விமர்சனத்தைப் பார்த்தீர்களா?
''எங்கள் கட்சி எந்தக் கட்சியின் பின்னாலும் ஓடவில்லை. எந்த விஷயத்தில் கண்டிக்க வேண்டுமோ அந்த விஷயத்தில் கண்டிக்கிறோம். அப்படி கண்மூடித்தனமான ஆதரவை நாங்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கியதில்லை''
அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்கு​வீர்கள்?
''மதிப்பெண்கள் எல்லாம் வேண்டாம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அவர்கள் நல்லது செய்தால் ஆதரிப்போம். மக்களுக்குத் தீமை விளைத்தால் எதிர்ப்போம். இதுதான் எங்கள் நிலைப்பாடு!''

வீரபாண்டியார் ஆட்களுக்கு அ.தி.மு.க.-வில் ஸீட்!

சேலம் அ.தி.மு.க. அதிர்ச்சி
ரண்டு வருடங்களுக்கு முன்பு, சேலம் மாநக ராட்சி சார்பில் கவுன்சிலர்கள் கோவா டூர் கிளம்பினார்கள். அதற்கு முன்பாக தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு இனிய பயணத்தை தொடங்கினார்கள். காலில் விழுந்தவர்களில் அ.தி.மு.க. கவுன்சிலர்களும் அடக்கம். இந்த விவகாரத்தை நாம் அப்போதே ஜூ.வி-யில் எழுதி இருந்தோம்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் காலில் விழுந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அத்தனை பேருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஸீட் வழங்கப்பட்டு இருப்பதுதான் சேலம் ஆச்சர்யம்! இதனைக் கண்டு குமுறிப்போய் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பிக் கொண்டிருக்க, கொந்தளிக்கிறது சேலம்.
சி.டி. விவகாரத்தை அந்த சமயத்தில் வெளிக் கொண்டு வந்த சேலம் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை பொருளாளர் சி.டி. செல்வத்தை சந்தித்து பேசினோம். ''எங்க மாவட்டச் செயலாளரை பொருத்த வரைக்கும் எப்பவுமே வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து எதையும் செய்ய மாட்டாரு. செய்யுறவுங்களையும் விட மாட்டாரு. அதனாலதான் அன்றைக்கு வீரபாண்டியார் காலில் விழுந்தவங்களுக்கெல்லாம் மறுபடியும் ஸீட் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி தி.மு.க-வின் கைக்கூலிகள் அ.தி.மு.க-வுல இருக்கிற வரைக்கும் ஒரு வார்டுல கூட ஜெயிக்க முடியாதுங்க. அம்மாவுக்கு துரோகம் பண்றவன் எந்த கொம்பனா இருந்தாலும் என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. இதை புரட்சித்தலைவி அம்மாவுக்கும் புகாரா அனுப்பி இருக்கேன்!'' என்று கொந்தளித்தார்.
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் விஸ்வநாதனும் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார். அவர் நம்மிடம் ''இந்த உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரை மாவட்டச் செயலாளருக்கு ஆதரவானவர்களுக்கும், தி.மு.க. விசுவாசிகளுக்கும்தான் ஸீட் கொடுக் கப்பட்டு உள்ளது. மாவட்டச் செயலாளராகவும் சேலம் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார் எம்.கே.செல்வராஜ். தற்போது 35-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி கோகிலவாணிக்கே ஸீட் கொடுத்து இருக்கிறார். ஏற்கெனவே இரண்டு பதவியில் இருப்பவர், இப்போது மனைவிக்கும் ஸீட் கொடுப்பது என்ன நியாயம்? அ.தி.மு.க. என்ன செல்வராஜின் குடும்பக் கட்சியா? அம்மாவின் வழியில் அயராது உழைக்கிற எத்தனையோ அடிமட்டத் தொண்டர்கள் இருக்கிறார்கள். அப்படி தன்னலம் கருதாது உழைப்பவர் யாருக்காவது ஸீட் கொடுக்கக் கூடாதா?
உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அறிவித்துள்ள விதிமுறைகள் எதையுமே பின்பற்றாமல்... கட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகாதவர் களுக்குக்கூட, வெயிட்டாக அண்டர் ஸ்டேண்டிங்கில் ஸீட் கொடுத்து உள்ளார். உதாரணமாக, நான்காவது டிவிஷன் ஜம்பு, அ.தி.மு.க-வுக்கு வந்து இரண்டு வருடங்கள்கூட ஆக வில்லை. எட்டாவது வார்டிலேயே இல்லாத பாமா கண்ணன் தே.மு.தி.க. கட்சியில் இருந்து இங்கே வந்து ஒன்றரை வருடம்கூட ஆகவில்லை அவருக்கு கவுன்சிலர் ஸீட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது போலவே 45-வது வார்டுக்கு ஸீட் கொடுக்கப்பட்டுள்ள கீதா சேகரனும் சமீபத்தில்தான் தே.மு.தி.க-வில் இருந்து கட்சி மாறி வந்தவர். சசிகலா வெங்கடேசன் ஊரை விட்டே வேறு ஊருக்குப் போய்விட்டார், அவரை மீண்டும் கூட்டிவந்து 27-வது வார்டு கவுன்சிலர் ஸீட் கொடுத்து இருக்கிறார். அதேபோன்று, 'எனக்கு ஸீட்டே வேண்டாம்’ என்று ஒதுங்கி இருந்த கீதாஅன்பழகனுக்கும் ஸீட் கொடுத்து உள்ளார்.
37-வது வார்டு சுப்பு என்கிற சுப்பிரமணி தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ரங்கநாதனின் கார் டிரைவர். வீரபாண்டி ஆறுமுகத்திடம்  ஆசி வாங்கிய முன்னாள் கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், ஜெய பிரகாஷ், நாகேஸ்வரன், மாரியப்பன், ஜே.ஜே.மாணிக்கம், பெருமாள்சாமி, பாலசுப்ரமணியம் போன்றவர்களுக்கும் ஸீட் கொடுத்து இருக்கிறார். வீரபாண்டி ஆறுமுகத்தையும், வீரபாண்டி ராஜாவை யும் முன்னிலையாக வைத்து நாடகம் நடத்தி, அவர்களிடம் பரிசும் பாராட்டும் வாங்கிய சவுண் டப்பனுக்கு மேயர் ஸீட்டை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட நேரத்தில், அம்மா மாதிரி சேலை கட்டி தி.மு.க-வினர் அசிங்கப்படுத்தியபோது உண்மையான தொண் டர்களான எங்களுக்கு ரத்தம் கொதித்தது. உடனே மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லி 'கண்டன போஸ்டர் ஒட்டலாம்... அல்லது உண்ணாவிரதம் இருக்கலாம்' என்று சொன்னோம். அதைக்கூட காது கொடுத்துக் கேட்காமல் இருந்தவர்தான் இந்த எம்.கே.செல்வராஜ். இவர் இருக்கும் வரை எங்கள் கட்சியை வளர விடமாட்டார். இங்கே அ.தி.மு.க. ஜெயித்தாலும் தி.மு.க. ஆட்சிதான் நடக்கும்!'' என்றார் ஆதங்கமாக.
குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜிடம் விளக்கம் கேட்டோம். ''என் மனைவிக்கு ஸீட் கொடுத்தது மற்றும் கவுன்சிலர்களுக்கு ஸீட் கொடுத்து பற்றி நீங்கள் என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் அம்மாவே பார்த்துக் கொடுத்தது!'' என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
தொண்டர்களின் குமுறலுக்கும் குரலுக்கும் மதிப்பு தருவாரா ஜெயலலிதா?
********************************************************************************
தலைவர் பதவி வாங்கினால் இன்னொரு பதவி இலவசம்!

அதிரவைத்த உசிலம்பட்டி பஞ்சாயத்து ஏலம்!
சிலம்பட்டியில் இருந்து உத்தப்புரம் செல்லும் ரோட்டில் 12-வது கிலோ மீட்டரில் அமைந் திருக்கிறது தாடையம்பட்டி பஞ்சாயத்து. ஏழு கிராமங்களில் சுமார் 3,000 வாக்காளர்களைக்கொண்ட இந்தப் பஞ்சாயத்தில் தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கே பெரும்பான்மை வாக்காளர்கள் கள்ளர் சமுதாயத்தினர் என்பதால், இவர்கள் ஆதரிப்பவர்களே தலைவராக முடியும். அதனால், இங்கு தலைவர் பதவியை ஏலம் எடுப்பவருக்குத் துணைத் தலைவர் பதவியை இலவசமாகக் கொடுத்துவிடுவார்களாம். ஏனாம்? தலைவர் பதவிக்கு கைக்கு அடக்கமான தலித் ஒருவரை உட்காரவைத்துவிட்டு, ஆக்டிங் தலைவராக துணைத் தலைவரே செயல்படலாம் என்பதற்காகத்தான்.
 இந்த ஆண்டும் ஏலம் நடக்க இருந்தது. தகவல் அறிந்து எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தலைமையில் வந்த போலீஸ் படையினர் ஏலத்தைத் தடுத்து நிறுத்தி ஆறு பேரை கைது செய்து இருக்கிறார்கள்.
இது குறித்து விசாரிக்கச் சென்றபோது பொது மக்கள் ஆங்காங்கே கூடி நின்று, காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். கிருஷ்ணன் என்பவர், 'இந்த சின்னக் கிராமத்தில் கிட்டத்தட்ட  1 கோடி செலவழிச்சு, காளியம்மன் கோயில் ராஜ கோபுரம் கட்டியிருக்கோம். தலைக்கு  1,000 என்று 350 தலைக்கட்டுகிட்ட வரி வசூலிச்சும் பத்தலை. சிற்பியில் இருந்து சித்தாளு வரைக்கும் பாக்கிவெச்சிருக்கோம். கோயிலுக்குக் கதவுகூட இன்னும் போடலை. அதனால, ஊர்ப் பங்காளிங்க எல்லாம் ஒண்ணாக் கூடி, தலைக்கட்டு வரி கூடுதலாப் போடலாமானு விவாதிச்சிக்கிட்டு இருந்தாங்க. தலைவர் பதவியை ஏலம் விடுறாங்கன்னு எவனோ சொன்னதை நம்பி, கூட்டமா இருந்த ஊர்க்காரங்களை பிடிச்சிட்டுப் போயிருச்சு போலீஸ். எத்துப்பல்லுக்காரன் அழுதாக்கூட சிரிச்சமேனிக்குத்தான் இருக்கும். எது உண்மைன்னு விசாரிக்க வேண்டாமாய்யா?' என்றார் கோபமாக. ஊர்க்காரர்களும் கோரஸாக அதையே சொன்னார்கள்.
உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பதைப் பெயர் சொல்ல விரும்பாத பெரியவர் ஒருவர் விவரித்தார். 'கடந்த தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை  3 லட்சத்துக்கு ஏலம் எடுத்த கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த செந்தில்குமார், அருந்ததியப் பெண்ணான மாரியம்மாளைத் தலைவராக்கிவிட்டு, துணைத் தலைவராக இருந்தார். 'காசு கொடுத்துப் பஞ்சாயத்து தலைவரானால், ஊருக்கு எப்படிப்பா நல்லது செய்வாங்க? அதனால், இந்த வாட்டி ஏலமேவேண்டாம்ப்பா’னு சிலர் சொன்னாங்க. ஆனா, காளியம்மன் கோயில் திருப்பணிகள் அரைகுறையாக்கிடக்கிறதால, கடைசியில ஏலத்துக்கு சம்மதிச்சாங்க ஊர்க்காரங்க. தற்போதைய துணைத் தலைவர் செந்தில்குமார், துரைராஜ், பிச்சை, உதயகுமார் என்று நாலு பேர் ஏலம் எடுக்க முன்வந்தாங்க. 25-ம் தேதி காலையில் ஊர்ப் பொது மந்தையில் பங்காளிங்க, ஊர்ப் பிரதிநிதிகள் எல்லாம் வட்டமா உட்கார்ந்து இருந்தோம். வேடிக்கை பார்க்கிறதுக்கு 100 பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க.
திடீர்னு கறுப்பு கலர் கார் ஒண்ணு வேகமாக வந்துச்சு. அதுல இருந்து செவத்த ஆள் ஒருத்தர் இறங்கினார். கேரள ரியல் எஸ்டேட்காரராக்கும்னு நினைச்சு நாங்க காரியத்துல கண்ணா இருந்தோம். கூட்டத்தை அவர் நெருங்கினதும், 'டேய் போலீஸ்டா!’னு சத்தம் போட்டுக்கிட்டு அம்புட்டுப் பயல்களும் ஓட ஆரம்பிச்சிட்டாங்க. எஸ்.பி-க்கு சந்தேகம் வலுத்திடுச்சு. ஊர்ப் பிரமுகர் ஒருத்தர், 'அய்யா இருங்கய்யா சேர் எடுத்திட்டு வந்திடுறேன்’னு நழுவப்பார்த்தார். அவர் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு, அத்தனை பேரையும் கைது செய்ய உத்தரவு போட்டார் எஸ்.பி. எச்சரிச்சிட்டு விட்ருவாங்கன்னு பார்த்தா, அம்புட்டுப் பேரையும் ரிமாண்ட் பண்ணிட்டாங்க சார்...' என்றவர், 'அது எப்படிங்க 56 கல் தொலைவுல இருக்கிற மதுரையில இருந்து எஸ்.பி. காலையிலேயே எங்க ஊருக்கு வந்தார்?' என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்.
வி.ஏ.ஓ. கனகராஜிடம் புகார் வாங்கி, துணைத் தலைவர் செந்தில்குமார், போஸ்ட் மாஸ்டர் நாகராஜன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் விஜயன், பெரியவர் பால்ச்சாமித் தேவர், தவசி, பாலகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்துள்ள போலீஸார், ஊராட்சி எழுத்தர் தெய்வேந்திரன் உட்பட மேலும் 17 பேரைத் தேடி வருகிறார்கள்.
கடந்த தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவரான மாரியம்மாளிடம் ஏலம் பற்றி கேட்டபோது, 'ஊர்க் குள்ள சண்டை சச்சரவு இல்லாம ஒரு ஆளைத் தலைவராத் தேர்ந்தெடுத்தா நல்லதுதான...' என்றார் வெகுளியாக.
இதற்கிடையே, பள்ளபட்டியைச் சேர்ந்த தலித்துகள் தான் ஏல விஷயத்தை போலீஸுக்குப் போட்டுக் கொடுத்து இருப்பார்கள் என்று தாடையம்பட்டி கிராமத்தினர் கருதுவதால், பிரச்னையைத் தவிர்க்க தேர்தல் வரைக்கும் போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறதாம். 'பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏலம்விட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கலெக்டர் சகாயமும் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், உசிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் இந்த விஷயங்களைக் கண்காணிக்கவே தனிக் குழுவைப் போட்டுள்ளது, மாவட்ட நிர்வாகம்.
இதில் காமெடி என்னவென்றால், தாடையம்பட்டி யில் ஆறு பேர் கைதாகி, போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மறுநாள் காலையிலேயே பக்கத்துக் கிராமமான மேலத் திருமாணிக்கத்தில் துணிச்சலாக ஏலம் நடத்தப்பட்டுள்ளது. எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி அந்த ஊரைச் சேர்ந்த ஏழு பேரையும் கைது செய்து இருக்கிறார்கள். இந்த வேட்டை தொடரலாம் என்பதால், சில கிராமங்களில் நள்ளிரவில் ஏலம் நடத்தும் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்ப என்ன பண்ணுவீங்க?!

கருணாநிதியுடன் ஜெயலலிதா!

ள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை அறி​வித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்க உத்தர​விட்டு இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் மட்டும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்​கிறார் ஜெயலலிதா. அதிர்ச்சி அடை​யாதீர்கள்... நகர மன்றத் தலைவருக்குப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பெயரும் ஜெயலலிதாதான்!
சிதம்பரம் நகராட்சி, பெண்களுக்​காக ஒதுக்கப்பட்டது. சிதம்பரம் தி.மு.க. நகர இளைஞர் அணி துணை அமைப்​பாளராக இருக்கும் ராஜாவின் மனைவி இந்த ஜெய​லலிதா. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவருக்கும் ராஜாவுக்கும் திருமணமாகி ஏழு மாதங்கள்தான் ஆகிறதாம். தி.மு.க. வேட்பாளர் ஜெயல​லிதாவின் தாத்தா, இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாம். அதனால், தன் பேத்திக்கு ஜெயலலிதா என்று பெயர்வைத்து தினமும் அந்தப் பெயரைத் தாரக மந்திரமாக உச்சரித்து வந்தார். ஆனால், வேட்பாளர் ஜெயலலிதாவின் அப்பா அக்மார்க் தி.மு.க. அதனால், பேத்தியின் பெயர் குறித்து அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் அடிக்கடி சண்டை வர... 'லலிதா’ என்று மட்டுமே அப்பா கூப்பிடுவாராம். ஆயிரம் பெயர்களை செல்லமாக வைத்துக் கூப்பிட்டாலும் ரெக்கார்டில் உள்ளதுதானே சபைக்கு வரும். அப்படித்தான் தேர்தல் களத்தில் வந்திருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் ஜெயலலிதா!
இது மட்டுமா... ஜெயலலிதாவை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நிர்மலாவின் குடும்பத்துக்கும் (தோப்பு சுந்தர், சிதம்பரம் நகர அ.தி.மு.க. செயலாளர்), ராஜாவின் குடும்பத்துக்கும் உறவுமுறை உண்டு. சிதம்பரம் நகராட்சியைப் பொறுத்த வரை மைனாரிட்டி ஓட்டுகளை யார் வாங்குகிறார்களோ... அவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அந்த ஓட்டுகள் எப்போதும் முதல்வர் ஜெயலலிதா பக்கம்தான். அவற்றைத் தந்தி​ரமாக வாங்க தி.மு.க., வேட்பாளர் ஜெயலலிதா தரப்போ பொத்தாம் பொதுவாக, ''உங்கள் வேட்பாளர் ஜெயலலிதா...'' என்று சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். தலைவியின் பெயரைக் கேட்டவுடன் தன்னை அறியாமலே அங்கு அ.தி.மு.க. தொண்டர்கள் சட்டென்று திரள்கிறார்களாம். தி.மு.க-வுக்கு இதுவே பெரும் டானிக்.
இருந்தாலும், 'பெயரைப் பார்த்து ஏமாந்து​போகாமல் இரட்டை இலைக்கு வாக்களித்து, இந்தப் பொய்யான ஜெயலலிதாவை விரட்டியடிப்போம்!’ என்று அ.தி.மு.க. தரப்பு முண்டாசு கட்டுகிறது. தி.மு.க. தரப்போ, 'ஜெயலலிதாவையே தி.மு.க. தொண்டர்களுக்கு கும்பிடு போடும்படி செய்துவிட்டார்கள்’ என்று நக்கலடிக்கிறார்கள்.
காமெடிக்கு வரம்பு இருக்கிறதா என்ன!

திருப்பூர் பிரசாரத்துக்கு வருகிறாரா, அண்ணா ஹஜாரே?

களைகட்டுகிறது கள் இயக்கம்.
நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாத்தி கட்டி அடித்த 'கள் இயக்கம்’ நல்லுசாமி, உள்ளாட்சித் தேர்தலில் உருமி அடிக்காமல் விடுவாரா என்ன?! 'தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின்’ சார்பாக, திருப்பூர் மேயர் பதவிக்கு கதிரேசன் என்பவரை சுயேச்சையாக நிறுத்தி பிரசாரம் செய்யக் குதித்து விட்டார், கூட்டமைப்பின் செயலாளரான நல்லுசாமி.
அவரிடம் பேசினோம். ''1959-ல் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டபோது, முதல்வராக இருந்த காமராஜர், அந்த நிர்வாகிகளுக்கு வானளாவிய அதிகாரத்தைக் கொடுத்தார். ஆரம்பக் கல்வி, சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண் நிர்வாகம்னு பல முக்கிய விஷயங்களை அவங்க கையில் கொடுத்தார். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, 'மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’னு ஒரு தத்துவத்தைக் கொண்டுவந்தார். ஆனா, மாநிலங்களுக்கு முழு அதிகார சுதந்திரத்தைக் கொடுக்க மத்திய அரசு மறுத்ததும், மாநில அரசாங்கத்தோட அதிகாரத்தை அதிகப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்த அதிகாரங்களை படக்குன்னு பறிச்சு எடுத்துக்கிட்டார். இதனால், உள்ளாட்சி அமைப்புகள் இப்போது வரைக்கும் டம்மியாத்தான் இருக்கு. இதெல்லாம் மாறணும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பழையபடி முழு அதிகாரம் கிடைக்கணும்னுதான் நாங்க போராடுறோம்.
உண்மையில், உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரையில், அ.தி.மு.க., தி.மு.க-னு எந்தக் கட்சி சார்பாகவும் வேட்பாளர்கள் இறங்கக் கூடாது. சொல்லப்போனா கட்சிக்கான சின்னமே இல்லாம முழுக்க முழுக்க சுயேச்சைகளாகவே வேட்பாளர்கள் களம் இறங்கணும். இதற்கு ஒரு காரணமும்இருக்கு... மொத்தமே 400 பேர் இருக்கிற ஒரு வார்டில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட டிக்கெட் வாங்குறதுக்காக மாவட்ட நிர்வாகிக்கும், தலைமை நிர்வாகிக்கும் லட்சக்கணக்கில் செலவு பண்றாங்க. ஸீட் கிடைச்சுட்டா, தேர்தலில் ஜெயிக்க, வெளிப்படையாவும் உள்குத்தாவும் ஏகப்பட்ட செலவு பண்றாங்க. ஒருவழியா ஜெயிச்சு கவுன்சிலராகிட்டா, அதுவரை தான் பண்ணிய செலவுப் பணத்தைவிட பல மடங்கை அஞ்சு வருஷத்தில் சுருட்டுறாங்க. இதுல, ஊரோட வளர்ச்சிக்குன்னு எதுவும் செய்யுறது இல்லை. கவுன்சிலரே இப்படின்னா சேர்மன், மேயர் எல்லாம் எப்படி இருப்பாங்கன்னு பாருங்க... இதனால் தான், உள்ளாட்சித் தேர்தலில் அத்தனை பேரும் சுயேச்சையா இருக்கணும்னு, எங்க கதிரேசனை 'கொள்கை வேட்பாளர்’னு அறிவித்து இறக்கி இருக்கோம். திருப்பூர் மாநகராட்சி மேயரா வந்தால், சுரண்டல் இல்லாத நிர்வாகத்துக்கு உத்தரவாதம் தர்றதோட, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரத்தையும் மீட்டெடுப்போம்...'' என்று சொல்லி  சற்று நிறுத்தியவர், ''தேர்தல் நேரத்தில் ஏதோ டயலாக் அடிக்கிறோம்னு நினைக்காதீங்க... 1996-ம் வருஷம் சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில 1,350 வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தல் கமிஷனையே மிரள வெச்சவங்க நாங்க... அதனால்தான், கதிரேசனை ஆதரித்து திருப்பூரில் பிரசாரம் பண்ணணும்னு சொல்லி, அண்ணா ஹஜாரேவிடம் பேசிக்கொண்டு இருக்கோம். விவசாயிங்க நினைச்சா, உலகத்தைப் புரட்டிப் போடுவோம்ங்கிறதை நிரூபிக்காம விடமாட்டோம்...'' என்று முடித்தார்.
பின்னுங்க சாமி... பின்னுங்க!

மிஸ்டர் கழுகு: குடிக்கத் தண்ணீர்கூட தராத போயஸ் கார்டன்!

'கம்யூனிஸ்ட் கேப்டன்' கதை!
''நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு!
அதனாலே முழிக்குதே 'அம்மா’ பொண்ணு!'' - ராகம் போட்டுப் பாடியபடியே உள்ளே நுழைந்த கழுகார், ''அம்மாவுக்கு மறக் காமல் சிங்கிள் கோட் போடும்!'' என்றார்.
பாடலுக்கு பொழிப்புரை சொல்வார் என்று அவரைப் பார்த்தோம். டேபிளில் இருந்த நாளிதழ்களை மேய்ந்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.  '' 'கேட்ட தொகுதிகளைத் தரவில்லை', 'இதயத்தில் மட்டுமே இடம்’, 'யாரும் எங்க ளுக்குப் பிச்சை போட வேண்டாம்’ என்றெல்லாம் சொல்லி, கூட்டணியில் இருந்து விலகி, கட்சிகள் தனி யாக நிற்பது தேர்தல் காலத்தில் நடக்கும் அரசியல். உள்ளாட்சித் தேர்தலிலும் இது நடக்கிறது. ஆனால், தனியாக இல்லை. ஒரு தனி அணியாகவே புறப்பட்டு இருக்கிறார்கள் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள். வழக்கமாகத் தன் தலைமையில்தான் ஓர் அணியை ஜெய லலிதா அமைப்பார். இப்போது அவரே விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை அமைக்க மறைமுகமாக உதவி இருப்பதுதான் அரசியல் ஹைலைட்!''
''தொடரும்!''
''சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த தெம்பில் இருந்த அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலிலும் அறுவடையை நடத்துவதற்காக ஆஹோ ஓஹோ என்று ஜெயலலிதாவைப் புகழ்ந்து வந்தன. சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச் சூடு என்று அ.தி.மு.க. அரசின் சறுக்கல்களைக்கூட உள்ளாட்சித் தேர்தலுக்காக பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்தன. தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. விரும்பும் தொகுதிகளின் பட்டியலை உடனே ரெடி செய்து காத்திருந்த கட்சிகளுக்கு அ.தி.மு.க-வில் இருந்து அழைப்பே வர வில்லை. வந்தது அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்கள்தான். அதிர்ந்துபோன கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு ஓடினார்கள். சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளுக்குத்தான் அழைப்பு. தே.மு.தி.க. உட்பட மற்ற கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன. வேறு வழி இல்லாமல் தே.மு.தி.க. தனியாக போட்டியிடத் திட்டமிட்டது. வேட்பாளர் பட்டியலையும்  வெளியிட்டார் விஜயகாந்த். தனித்துவிடப்பட்ட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், விஜயகாந்த் தலைமையில் தனிக் கூட்டணியாக ஒன்று சேர தயாராகிறார்கள். இதில் முதலில் போய் சேர்ந்துள்ளது  மார்க்சிஸ்ட் கட்சி!'' என்று சொல்லி நிறுத்திய கழுகார் முன்  சுடச்சுட சுண்டலை வைத்தோம். ரசித்து ருசித்தபடி பேச ஆரம்பித்தார்.
''விஜயகாந்த், எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்ததையே ஜெயலலிதா ரசிக்கவில்லை என்கிறார்கள் சிலர். உள்ளாட்சியிலும் தே.மு.தி.க. கோலோச்சிவிடக் கூடாது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தினார். தானாக வெளியேற்றிவிட்ட மாதிரி தோற்றம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு எல்லாம் பேருக்குப் போட்டு தே.மு.தி.க-வை வெளியேற்றிவிட்டாராம். விஜயகாந்த்தை கழற்றி நட்டாற்றில்விட நினைத்தார் ஜெயலலிதா. அவர் போட்ட கணக்கு அவருக்கே எதிராக அமைந்து விட்டது.''
''ஓ...  பாட்டுக்கு அர்த்தம் இதுதானா?''
''ஆமாம்,  சட்டசபைத் தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகள் நடந்துகொண்ட விதத்தை ஜெயலலிதா இன்னும் மறக்கவில்லையாம். கூட்டணிக் கட்சிகள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது தே.மு.தி.க. அலுவலகத்துக்குப் படையெடுத்த கட்சிகள் அங்கே ஆலோசனைக் கூட்டம் போட் டார்கள். மூன்றாவது அணி என்று பத்திரி கைகளில் செய்தி வந்ததும், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தி... கறாராகக் கேட்ட தொகுதிகளை கட்சிகள் வாங்கிப் போனதும் ஜெயலலிதாவின் மனதில் வடுவாக இருக்கிறது. சட்டசபைத் தேர்தலைப்போலவே கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய காந்த்தை போய் இப்போது பார்த்திருப்பது ஜெயலலிதாவே எதிர்பார்க்காத ஒன்றுதான். 'அடிமாட்டு பேரத்தை நடத்தி அவர்களையும் கூட்டணிக் குள் வைத்திருப்பதை விடுத்து விஜயகாந்த்தை புதிய கூட்டணியின் தலைவராக மறு அவதாரம் எடுக்க வைத்துவிட்டார் அம்மா’ என்று ஆளும் கட்சியிலேயே சில வருத்தக் குரல்களைக் கேட்க முடிகிறது.''
''கம்யூனிஸ்ட்கள்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்களே! அவர்களுக்கு எரிச்சல் எப்படி வந்தது?''
'' அந்த சோகக் கதையைக் கேளும்!
பேச்சுவார்த்தைக்குப் போயஸ் கார்டனுக்குப் போன இடத்தில் அவர்களுக்கு பெருத்த அவமானம் நடந்துவிட்டதாம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக எம்.எல்.ஏ-க்கள் கே.பாலகிருஷ்ணன், தங்கவேல், செயற்குழு உறுப்பினர்கள் நூர்முகம்மது, சம்பத் ஆகியோர்தான் அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஐந்து கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் முதல் இரண்டு கட்டம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அதன் பிறகு போயஸ் கார்டனில்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆரம்பத்தில் பெரிய பட்டியல் கொண்டுபோய் கொடுத்தவர்கள்... நாளாக ஆக பட்டியலைச் சுருக்கிக்கொண்டார்கள். கடைசி யாக,  திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி நகராட்சிகளையாவது கேட்டு போராடினார்கள். அதில் ஒன்றைக்கூட தர முடியாது என்று கை விரித்து விட்டதாம் அ.தி.மு.க. தான்  கழித்துக் கட்டிவைத்திருந்த  ஒன்றிரண்டு நகராட்சிகளை அள்ளிப் போட  முடிவு செய்தது. ஆனால் அதை ஏற்க மார்க்சிஸ்ட் விரும்பவில்லை. பேச்சு வார்த்தைக்குப் போயஸ் கார்டன் போன குழுவுக்கு மரியாதைக்காவது குடிநீர்கூட வைக்கவில்லையாம். 'குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்க மாட்டீங்களா?’ என்று வருத்தம் கலந்து தோழர்கள் கேட்டார்களாம். கடைசி வரை வரவில்லை.  அடுத்தடுத்து பேச்சுவார்த்தைக்குப் போனபோதும் இதுதான் நிலையாம். கடந்த சட்டசபைத் தேர்தலில் பேச்சுவார்த்தைக்கு போயஸ் கார்டனுக்குப் போன குழுவினருக்கு சரவணபவனில் இருந்து வெங்காய, கார தோசைகள், சப்பாத்தி, இட்லி, ஆப்பம், இடியாப்பம், தேங்காய் பால் என்று விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து கவனித்தார்கள். இப்போது சிங்கிள் டீ கூட தரவில்லையாம். அப்போது இந்தக் குழுவினர் வந்த கார் டிரைவரையும் குளிர்வித்த கார்டன், இந்த முறை அவமானப்படுத்தியதை தலைமையிடம் சொல்லி வருத்தப்பட்டார்கள் குழுவினர். இதைத் தொடர்ந்துதான் விஜயகாந்த் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்ப ஆரம்பித்தார்கள் கம்யூனிஸ்ட்கள். 'கம்யூனிஸ்ட் கேப்டனாக’ அவர் ஆனது இப்படித்தான்!''
''கட்சிகளைப் புறக்கணிக்கும் மன நிலையில் இருக்கும் அ.தி.மு.க., ஏன் பேச்சு வார்த்தை நடத்தியது?''
''இதற்கு ஒரு  காரணமும் சொல்லப் படுகிறது. திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசி நாள் 26-ம் தேதி. அதுவரையில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவ தாக போக்கு காட்ட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கணக்கு. இல்லாவிட்டால், கோபித்துக்கொண்டு போய் இடைத் தேர்த லில் அவர்கள் தனியே நின்றுவிடக் கூடாது என்று நினைத்தாராம் ஜெயலலிதா. அதற்காகத்தான் பேச்சுவார்த்தை நடத்தி இழுத்தடித்தார்களாம்.''
''பாவம்...''
''இந்த அளவுக்கு அவ மரியாதை நடந்த பிறகு அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று காம்ரேட்கள் கொதிக்கவே, அவசர அவசரமாகப் பட்டியல்களை வெளியிட ஆரம்பித்தது மார்க்சிஸ்ட். அதோடு தே.மு.தி.க. தலைமையில் அணி அமைக்க முயன்றது. இனியும் பொறுக்க முடியாது என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை தே.மு.தி.க. அலுவலகத்துக்குப் போய் விஜயகாந்த்தைச் சந்தித்தார் சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆலோசனை நடத்தினார்கள். விஜயகாந்த்தோடு கூட்டணி அமைப்பதில் தா.பாண்டியனுக்கு விருப்பம் இல்லையாம். செவ்வாய்க் கிழமை முடிவு எடுப்பதாகச் சொன்னார். ஆனால், திங்கள் கிழமை தனது தீர்க்கமான முடிவை மார்க்சிஸ்ட் எடுத்து விட்டது. விஜயகாந்த் தலைமையில் ஒரு அணி உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதால் இந்தத் தேர்தலில் விஜயகாந்த் ஹீரோ ஆக்கப்பட்டு இருக் கிறார் என்றே சொல்கிறார்கள். இவை அ.தி.மு.க. தலைமைக்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடியைக் கொடுக்கும்!'' என்ற கழுகார் அடுத்த ஸ்பூன் சுண்டலை எடுத்துப் போட்டுக்கொண்டார்.
''அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் மீது தொண்டர்கள் குற்றச்சாட்டு, மாவட்டச் செயலாளர்கள் மீது அ.தி.மு.க. தலைமை அதிருப்தி என்று பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்தீரா? இந்த செய்தியை வரவழைத்ததே அ.தி.மு.க-தானாம். அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் கட்சிக்குள் பூகம்பத்தையே கிளப்பி இருக்கிறது. கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கும் சில மாதங்கள் முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ஸீட் கொடுத்து இருக்கிறார்கள் என்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் முற்றுகையிடும் சம்பவம் வாடிக்கை ஆகிவிட்டது. தீக்குளிப்பு முயற்சி வரை தொண்டர்கள் இறங்கிவிட்டார்கள். இதைச் சமாளிக்க முடியாமல் சில இடங்களில் வேட்பாளர்களை மாற்றிவிட்டார் ஜெயலலிதா. ஆனால், தொண்டர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியவில்லையாம். 'கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுபவர்களை மாவட்டச் செயலாளர்கள்தான் தேர்வு செய்து தலைமைக்கு அனுப்புகிறார்கள். அதில் இருந்தே பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கும் தலைமைக்கும் சம்பந்தம் இல்லை’ என்று நாளிதழ்களில் செய்தி வெளியாவது மாதிரி தலைமையே பார்த்துக் கொண்டதாம்.  தொண்டர்களைத் திருப்திப்படுத்த இப்படிச் செய்தி வெளியிட வைத்தனராம். மாவட்டச் செயலாளர்கள் செய்த தவறு என்று அ.தி.மு.க. மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் மாவட்டச் செயலாளர்களில் பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருப்பவர்களே தவறு செய்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அ.தி.மு.க..'' என்று ஜூட் விட்டார் கழுகார்!
அட்டை மற்றும் படங்கள்:
'ப்ரீத்தி’ கார்த்திக்
வெறுமையாய் நடந்த வெங்கடேஷ் பண்ணையார் நினைவுநாள்!
தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் வருடம் தோறும் 'மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள் நிகழ்ச்சி’ நடத்தப்பட்டு வருகிறது. அதில், சுற்றுவட்டார மக்கள் உட்பட,  பல்வேறு மாவட்டம், பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  பல்வேறு அமைப்பினரும் கலந்துகொள்வார்கள். ஆனால், கடந்த 26-ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 'நாடார் பாதுகாப்பு பேரவை’யைச் சேர்ந்தவர்கள் தவிர, மற்றவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. குறிப்பாக சமத்துவ மக்கள் கட்சியினர் முற்றிலுமாக புறக்கணித்தனர். 'பரமக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியை போலீஸார், நினைவுபடுத்தி அச்சமூட்டியது ஒரு காரணம்’ என்றும் 'ஜான் பாண்டியனை பரமக்குடி நிகழ்ச்சிக்கு போகவிடாமல் தடுத்துவைத்ததுபோல் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனித்து வந்த நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையாரையும் அம்மன்புரத்துக்கு போகவிடாமல் தடுத்தது மற்றொரு காரணம் என்கிறார்கள்.  'தேர்தலில் சரத்குமாருக்கு எதிராக சுபாஷ் பண்ணையார் செயல்பட்டார்’ என்ற வதந்தியும் முக்கியக் காரணம்’ என்றும் சிலர் சொல்கிறார்கள். அரசியல் வி.ஐ.பி-யாக ம.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் ஜோயல் கலந்து கொண்டார். உடல்நலம் இல்லாமல் படுத்திருக்கும் வெங்கடேஷ் பண்ணையாரின் தாயார் ரத்தினகாந்தியிடம் உடல்நலம் விசாரித்ததோடு, ராதிகாசெல்விக்கும்  அவர் ஆறுதல் கூறினார்!
ரோசய்யா உடனே திரும்பியது ஏன்?
அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக கவர்னர் ரோசய்யா தனது மனைவியுடன்   கடந்த வாரம் கோவை வந்தார்.  உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியானதால், அரசு விழாக்கள் ரத்தானது. இதையடுத்து தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, நீலகிரிக்கு கிளம்பிப்போனார். 'சில நாட்களாவது அங்கு தங்கக்கூடும்’ என்று தகவல் சொல்லப்பட்ட நிலையில் அவர் உடனடியாக சென்னை திரும்பியது பலருக்கும்  சந்தேகத்தைக் கிளப்பியது!
'பொட்டானிக்கல் கார்டனில் உள்ள ராஜ் பவனில் தான் கவர்னர் தங்கியிருக்கிறார். மாலை நேரத்தில், படகு இல்லத்துக்கு அதிகாரிகள் அழைத்துப்போக, ஜெர்கின் கூட அணியாமல் சாதாரணமாக சென்ற ரோசய்யாவையும், அவரது மனைவியையும் குளிர் வாட்டி எடுத்திருக்கிறது. அதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட ராஜ்பவன் திரும்பினார். அதையடுத்து,   நீலகிரி  சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு, மறுநாள் கோவைக்கு திரும்பிவிட்டார். அங்குள்ள விமான நிலையத்தில் அவரை டாக்டர்கள் பரிசோதித்து ஓகே சொன்ன பிறகு, சென்னைக்கு கிளம்பிவிட்டார்’ என்கிறார்கள்!
நேருவுக்கு கஸ்டடி!
கடலூர் சிறையில் இருக்கும் கே.என்.நேருவுக்கு அடுத்த டார்ச்சர் ஆரம்பமாகிவிட்டது. அவரை கஸ்டடி எடுத்து விசாரிக் கும் அனுமதியைப் போலீஸார் பெற்று விட்டார்கள். 'நேருவின் மனநிலையை குலைக்க நடக்கும் சதி’ என்று இதுபற்றி பதறிச் சொல்கிறது தி.மு.க.!
கடந்த 26-ம் தேதி கடலூர் சிறையில் இருந்து நேரு, பாளை சிறையில் இருந்து அவரது தம்பி ராமஜெயம், சேலம் சிறையில் இருந்து அன்பழகன் ஆகிய மூவரும் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
'மூவரையும் ஐந்து நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும்’ என்று கேட்ட போலீஸாரின் மனு, மாஜிஸ்திரேட் மகேஸ்வரி பானுரேகா முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. 'மூவரையும் 26-ம் தேதி மாலை ஆறு மணியில் இருந்து 27-ம் தேதி மாலை ஆறு மணி வரையில் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கலாம்’ என்று அவர் அனுமதி கொடுத்தார்.  'இடைத் தேர்தலில் போட்டியிடுவதைக் காரணம் காட்டி எப்படியும் ஜாமீனில் வெளியே வந்துவிடலாம்’ என்று திட்டமிட்டிருந்த நேருவுக்கு, இந்த உத்தரவைக் கேட்டு பலத்த அதிர்ச்சி..!

கழுகார் பதில்கள்

மு.பாண்டியன், ஒரத்தநாடு.
 ஐ.நா.சபையில் மன்மோகன் சிங் பேசிய பேச்சைப் படித்தீரா?
அதிர்ச்சியாக இருந்தது. எந்த உலகமயமாக்​கலை இந்தியாவுக்குள் மன்மோகன் சிங் எடுத்து வந்தாரோ... அதை அவரே விமர்சித்துள்ளார்.
'உலகமயமாக்கலும் சந்தைப் பொருளா​தாரமும் உலக மக்களின் மேம்பாட்டுக்கு வழிகோளும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நம்பிய உலகம், இப்போது அதன் எதிர்வினை விளைவுகளை எதிர்நோக்கத் தொடங்கி இருக்கிறது. உலகப் பொருளாதாரமே இப்போது தகரும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது’ என்றார் பிரதமர். இதில் இருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதற்கு அவரது பேச்சில் பதில் இல்லை. அட்லீஸ்ட்... ஒப்புக்​கொண்டாரே மனுஷன்!
 செ.முத்துக்கிருஷ்ணன், ஆரல்வாய்மொழி.
காங்கிரஸ் தனித்துப் போட்டி இடுவது அதன் தலைவர்களின் தைரியம்தானே?
அதோடு நிற்கக்கூடாது! சென்னை - கார்த்தி சிதம்பரம், சேலம் - தங்கபாலு, ஈரோடு - யுவராஜ் (அ) ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோவை - எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நெல்லை - பீட்டர் அல்​போன்ஸ் என மேயர் வேட்பாளர்களாக போட்டித் தலைவர்களை நிறுத்தி அவர்களது தைரியத்தையும் அளவிட வேண்டும்!
 சுந்தரலிங்கம், தேன்கனிக்கோட்டை.
பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டதாமே?
இந்திரா காலம் முதல் இன்றைய ராகுல் வரை இருப்பவர் அவர் எத்தனை காலம்தான் நம்பர் டூ- வாகவே இருப்பார்? அவருக்கு பிரதமர் ஆசை வருவதில் தவறு இல்லை!
ஆனால், அவரது மகன் அப்ஹிஜித் முகர்ஜியின் கதையைக் கேளுங்கள். 52 வயது வரை அரசியல் சுவடே தெரியாமல் மத்திய அரசுப் பணியில் இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நல்ஹாத்தி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார். 'மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் நான்தான்’ என்று அவர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். மகனோடு ஒப்பிடும்போது அப்பாவின் ஆசை காலம் கடந்ததுதானே!
 எஸ்.கிருஷ்ணன், நாகர்கோவில்.
இந்திராவின் நம்பிக்கைக்கு உரிய வசந்த் சாத்தே மறைந்து போனாரே?
அவருக்கு இரண்டு பெருமைகள் உண்டு. ரிச்சர்ட் அட்டன்பரோ தயாரித்த 'காந்தி’ படத்துக்கு எதிர்ப்பும் சிக்கலும் வந்தபோது தனது முழு ஆதரவும் கொடுத்துப் படம் வெளிவர உதவியவர் வசந்த்சாத்தே தான். இன்று இந்தியர்கள் அனைவரும் பார்த்து மகிழும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை, செய்தி-ஒலிபரப்பு அவர் அமைச்சராக இருந்தபோதுதான் கொண்டு வந்தார்!
 கணேசமூர்த்தி, சீர்காழி.
'தமிழகத்தில் சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து தி.மு.க., அ.தி.மு.க-வின் ஏகாதிபத்திய மேலாண்மைக்கு எதிரான கூட்டணி அமைக்க வேண்டும்’ என்கிறாரே திருமாவளவன்?
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் எதிராக மற்ற கட்சிகள் ஒன்று சேரவேண்டும் என்ற கொள்கை ஏற்கத்தக்கதுதான். கருணாநிதி, ஜெயலலிதாவின் வீட்டு வாசலில் கடைசி வரைக்கும் காவல் காத்துவிட்டு அவர்கள் மதிக்காமல் துரத்​திய பிறகு... அவர்களுக்கு எதிரான அணியை அமைப்பதுதான் கேலிக்கு உரியது. கருணாநிதியின் 'தன்னிச்சையான, ஏகாதிபத்திய, மேலாதிக்க மனோபாவம்’ செப்​டம்பர் 25-ம் தேதிதான் திருமாவுக்குத் தெரிய வந்திருப்பது ஆச்சர்யமானது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்கு உரியது!
 சிவபாலன், திருச்சி.
தேர்தலுக்குள் கே.என்.நேரு வெளியில் வந்துவிடுவாரா?
இயலாது என்றே நினைக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று வழக்குகள் போடப்போகிறார்களாம். தலா 15 நாட்கள் என்றாலும் ஒன்றரை மாதம் ஓடிவிடுமே!
 சாத்தப்பன், கோவில்பட்டி
வறுமைக்கோடு பற்றிய திட்ட கமிஷன் அறிக்கை ஏற்கத்தக்கதா?
  இல்லை. கிராமப்புறத்தில்  25-ம், நகர்ப்புறத்தில்  32-க்கும் கீழே வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்பதாக திட்ட கமிஷன் சொல்வது கேலிக்குரியது. பிச்சை எடுத்து வாழ்பவர்கள்கூட ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 60 ரூபாய் வரை வசூல் செய்தால்தான் மூன்று வேளையும் சாப்பிட முடியும் என்ற யதார்த்தம் இருக்கும்போது... திட்ட கமிஷனுக்கு எதுவுமே தெரியவில்லை எனத் தெரிகிறது. இந்தியாவின் அடித்தளமே தெரியாத சில அதிகாரிகளின் அபத்த வாக்குமூலம் இது!
 அ.முருகேஷ், திருச்சி.
அனைத்து வேட்பாளர் பட்டியலையும் ஜெயலலிதா அறிவித்த பிறகும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சந்தர்ப்​பவாதம் அல்லவா?
இல்லை... கொள்கைவாதம்தான்! 'போராடுவோம்... போராடுவோம். இறுதி வரை போராடுவோம்’ என்ற முழக்கத்தை நீங்கள் கேட்டது இல்லையா? அதன்படி நடந்துகொண்டது தப்பா என்ன?
 முருகேசன், திருவள்ளூர்.
ப.சிதம்பரம் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பிரதமர், 'எனது அமைச்சர்களை விட்டுத்தர மாட்டேன்’ என்கிறாரே?
ராசாவும் தயாநிதி மாறனும் அவரது அமைச்​சர்கள் இல்லையா? 'எனது’ என்பதற்கான அர்த்தம் 'காங்​கிரஸ்’ என்பது!
 சுவாமிநாதன், கும்பகோணம்.
மத்திய அரசைத் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருக்கிறாரே மணிசங்கர் அய்யர்?
அவருக்கும் மன்மோகன் சிங்குக்கும் ஏதோ பிரச்னை. அதனால்தான் புகார்களை வாசிக்கிறார். மேலும் பிரணாப் முகர்ஜியை புகழவும் செய்கிறார். பிரணாப், பிரதமர் ஆனால், அமைதி ஆகிவிடுவார் என்றும் சொல்லலாம்!

கேட்டு வாங்கிய நேரு...

திருச்சி இடைத்தேர்தல் சுறுசுறு
'திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவா அல்லது மு.க.ஸ்டாலினா?’ என்று தொகுதி மக்களே குழம்பிப்போகும் அளவுக்கு சுறுசுறுவெனக் களம் இறங்கிவிட்டார் மு.க.ஸ்டாலின்.
ஆரம்பத்தில், 'திருச்சி மேற்கில் போட்டியிடாமல் புறக்கணிப்பு முடிவை எடுக்கலாமா?’ என்ற ரீதியில் தான் தி.மு.க-வின் எண்ண ஓட்டம் இருந்தது. அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்சோதிக்கு எதிராக அவரது இரண்டாவது மனைவி என்று சொல்லிக்கொண்டு டாக்டர் ராணி குபீர் கிளப்பியதும், தி.மு.க-வுக்கு சற்று தெம்பு வந்தது. நில அபகரிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் நேருவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடியான தோடு, அவர் மீது அடுக்கடுக்காக நில அபகரிப்பு வழக்குகளும் போடப்பட்டதால், சிறையில் இருந்து ஜாமீனில்  வர வேண்டும் என்றால், திருச்சி மேற்குத்
தொகுதி வேட்பாளராக நிற்பதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தார். இதனை தலைமைக்கு உரிய முறையில் தெரியப்படுத்தவே, நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தே.மு.தி.க-வும் கம்யூனிஸ்ட் கட்சி களும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்துபோய்விட்டதால், தொகுதியை எப்படியும் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார் ஸ்டாலின்.
செப்டம்பர் 22-ம் தேதி இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ஸ்டாலின், திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். ''இந்த இடைத் தேர்தல்ல எப்படியும் ஜெயிச்சே தீரணும். இது மானப் பிரச்னை. கோஷ்டிகளை மறந்துட்டு தீவிரமா வேலை பாருங்க...'' என்று எல்லோரையும் உசுப்பிய ஸ்டாலின், அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ் சோதிக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் ராணி பற்றியும் விசாரித்து இருக்கிறார். நிர்வாகிகள் சொன்னதைக் கவனமுடன் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ''ராணி விஷயத்தைத் தேவையானபோது பயன்படுத்திக்கலாம். இப்போதைக்கு போன ஆட்சி யில் நாம செஞ்ச மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியே ஓட்டு கேளுங்க...'' என்று சொல்லி இருக்கிறார்.
மறுநாள் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நேரு சார்பில் மு.க.ஸ்டாலின் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்போவதாகத் தகவல் கசிந்தது. ஆனால், அந்த நேரத்தில் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கட்சி நிர்வாகிகளைப் பார்க்கச் சென்றுவிட்டார். 'வெள்ளிக் கிழமை அன்று 10.30 முதல் 12 மணி வரையில் ராகு காலம். எனவே, அது முடிந்த பின்னர்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்!’ என்று தகவல் கிடைத்தது.
சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல ஸ்டாலினுடன் நால்வரை மட் டுமே அனுமதித்தனர் சிறைக் காவலர்கள். நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. சௌந்திரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்டோரை ஸ்டாலின் சிறையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
'அண்ணன் நேரு தேர்தல்ல போட்டியிடுற நேரத்துல நாங்க தேர்தல் வேலை பார்க்க முடியாம ஜெயில்ல இருக்கோமே...’ என்று அவர்கள் ஏகத்துக்கும் உருக்கம் காட்டினார்களாம். அதோடு, 'எங்களை கட்சி வேட்டி கட்டக் கூடாதுன்னு தடுக்கு றாங்க. இன்னிக்கு நீங்க பார்க்க வர்றீங்கன்னு தெரிஞ்சு, கரை வேட்டி கட்ட அனுமதி கொடுத்திருக்காங்க’ என்றும் அவர்கள் முறையிட்டு இருக்கிறார்கள். 'இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் நியாயம் கேட்போம். மனித உரிமை கமிஷனிடமும் முறையிடுவோம்...’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார் ஸ்டாலின்.
அடுத்து சிந்தாமணியில் இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தவர், ''நேரு மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்வதன் மூலம் தி.மு.க-வின் வெற்றியைத் தடுத்துவிட முடியும் என ஜெய லலிதா நினைக்கிறார். நேரு மீது தொடர்ந்து வழக்குகள் போட்டு வருவதால், தேர்தலில் பாதிப்பு வராது. இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் ஒவ்வொரு தொண்டனும் வேட்பாளர் என்று நினைத்துக்கொண்டு கடுமையாகக் களப் பணி ஆற்ற வேண்டும்!'' என்று தொண்டர்களை உசுப்பி, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
அதன் பிறகு சரியாக 1.10-க்கு திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. சம்பத்திடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மூன்று வேட்பு மனுக்களிலும், அதனோடு இணைக் கப்பட்டு இருந்த ஆவணங்களிலும் கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் நேருவிடம் இருந்து கையெழுத்து பெற்று வந்திருந்தார் வழக்கறிஞர் பாஸ்கர். அவரிடம், 'எல்லாம் சரியா இருக்கா?’ என்று கேட்ட ஸ்டாலின், தானும் வாங்கிச் சரிபார்த்து, முழுத் திருப்தி ஏற்பட்ட பின்னரே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். திருவெறும்பூர் தொகுதி முன் னாள் எம்.எல்.ஏ-வான கே.என்.சேகரன், மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார்.
வெளியே வந்த ஸ்டாலின், ''எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், தி.மு.க-வினர் எதற்கும் தயார் என்பதை எடுத்துக்காட்டத்தான் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தேர்தலில் பிரசாரம் செய்ய தி.மு.க. தலைவர் கருணாநிதி நிச்சயம் திருச்சி வருவார்...'' என்று நிருபர்களிடம் சொல்லிவிட்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தி.மு.க-வினர் முகத்தில் உற்சாகம். இது நிலைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

வறுமைக் கோடு நிர்ணயம் சரிதானா?

மீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்​களுக்கான வருமானத்தை நிர்ணயம் செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அதன்படி, நகர்புறத்தில் இருப்பவர்​களுக்கு ஒரு நாள் வருமானம்  32 என்றும் கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு  25 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.
இது எத்தனை அப்பட்டமான கண் துடைப்பு? இந்தியாவில் ஏழைகள் குறைவாக இருப்பதாகக் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி நிர்ணயம் செய்து இருக்கிறார்களா? இவர்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால், இந்த வருமானத்தில் வாழ முடியுமா?  அரசு வழங்கும் இலவச அரிசி வாங்கி சாப்பிடுபவர்​களாக இருந்தாலும் எத்தனைதான் சிக்கனமாக செலவு செய்பவர்களாக இருந்தாலும் இந்தத் தொகைக்​குள் பால், காய்கறி, காஸ் அல்லது மண்ணெண்ணெய், மின்சாரம், கேபிள், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, மளிகை, படிப்பு, போக்குவரத்து போன்ற செலவுகளை எப்படி சமாளிக்க முடியும்?
எக்கச்சக்க சம்பளமும் நிறையவே அலவன்ஸ்களும் வாங்கும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களே தங்களுக்கு வருமானம் போத​வில்லை என்று போர்க்கொடி தூக்குகிறார்கள். அப்படி இருக்கும்​போது, இந்தத் தொகையை எப்படி வறுமைக் கோட்டுக்கு அளவுகோலாக நிர்ணயம் செய்தார்கள்? ஏழைகளாக இருப்பவர்களை வசதியானவர்கள் என்று சொல்லி அரசு வேண்டுமானால் பெருமைப்பட்டுக்கொள்ளலாம், ஆனால் உண்மை அதுவல்லவே. அரசு நியாயமான தொகையை நிர்ணயித்தால் மட்டும்தான் ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளையும் உரிமைகளையும் பெற முடியும். ஆவண செய்யட்டும் அரசு!
- க.சிவதாசன், சென்னை.

ப.சிதம்பரத்தை சிக்கவைத்ததா பிரதமர் அலுவலகம்?

''ஆ.ராசா மீது 2ஜி வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. ஆனால் ஆ.ராசா குற்றப் பத்திரிகையைப் பெறுவதற்கு முன்பே  ப.சிதம்பரம் மீது ஒரு அதிரடி குற்றப் பத்திரிகையை பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்துவிட்டது!'' என்றுதான் டெல்லிப்  பத்திரிகையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்!
''மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் இருந்து தூக்க ஒரு சதி வலை பின்னப்பட்டு உள்ளது. அது நடந்தால் பிரதமர் பதவியை ப.சிதம்பரம் அடையக் கூடும்.  அதனால் மன்மோகன் சிங்கும் பிரணாப் முகர்ஜியும் சேர்ந்து நடத்தும் நாடகம்தான் இது!''  என்றும் அவர்களே சொல்கிறார்கள். டெல்லியின் சதுரங்க ஆட்டத்தில் இப்போது அதிகமாகச் சுழலும் தலை ப.சிதம்பரம்தான்!
''2ஜி விவகாரத்தில் என்னவெல்லாம் நடந்தது?'' என்று பொதுக் கணக்கு குழு மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு பதில் அளிக்கும் விதமாக அனைத்துத் தகவல்களையும் பிரதமர் அலுவலகம் திரட்டி வருகிறது. அதன்படி அமைச்சரவைச் செயலக அதிகாரிகள், தொலைத் தொடர்பு மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து இந்த மூன்று துறைகளிலும் இருந்த அனைத்துக் கோப்புகளையும் பரிசீலனை செய்தார்கள்.  இதற்கு இறுதி வடிவம் கொடுத்தது நிதி அமைச் சகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவு. இந்தக் குறிப்புகளைத் தயாரித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலோடு, பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும்  மகாஜனுக்கு ஒரு குறிப்பு  அனுப்பப்பட்டது.
இப்படியரு குறிப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருப்பது பி.ஜே.பி. வழக்கறிஞரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி  அதிகமான தகவல்களைப் பெறுபவருமான விவேக் கார்க் என்பவருக்கு  எப்படியோ தெரியவந்தது. உடனே தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அவர் மனு செய்தார்.  கொஞ்சம்கூட யோசிக்காமல் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தஸ்தாவேஜ்களை அள்ளிக்கொடுத்து விட்டார்கள் அதிகாரிகள்.  இதில் இருந்த 13 ரகசிய பக்கங்கள் சுப்பிரமணியன் சுவாமி யின் கைக்குப் போனது. அவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 21-ம் தேதி இதை மனுவாகக் கொண்டு போனார். ப.சிதம்பரத்துக்கு சிக்கல் பிறந்துவிட்டது. பிரதமர் அலுவலகம் மூலம் வெளியாகியுள்ள இந்தக் குறிப்புகள் ப.சிதம்பரத்தின் மீது நீங்காத சந்தேகக் கறையைப் பதிவு செய்துவிட்டது!
''2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப் படும் காலத்தில் மத்திய நிதிஅமைச்சராக இருந்தார் சிதம்பரம். அவர் நினைத்திருந்தால் அந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும்!'' என்று நிதி அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கூறுகிறது. இதைத் தொடர்ந்து அவரைப் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், சிதம்பரத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் சொன்னார். நியூயார்க் நகரில் இருக்கும் பிரதமரை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசி இது தொடர்பாக விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் திங்கள் கிழமை மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சிதம்பரம் திடீரென சந்தித்தது மீடியாக்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியது. ''தனது தரப்பு நியாயங்களை ப.சிதம்பரம் சொன் னாரா அல்லது நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்றாரா என்பது தெரியவில்லை!'' என்கின்றன ஜன்பத் சாலை வட்டாரங்கள்
சுவாமி தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 27-ம்தேதி அன்று விசாரணைக்கு வரப் போகிறது. நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், பிரதமர் மற்றும் பிரணாப் ஆகிய இருவரின் டெல்லி வருகை, சோனியாவின் முடிவு இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மீதான அஸ்திரம் எது என்பது முடிவாகும்!
சரோஜ் கண்பத்
 ''ஜாமீனே கிடைக்காதா?''
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட மூன்று பேர் மீது புதிய வழக்கை சி.பி.ஐ. பாய்ச்சி உள்ளது.  இது தொடர்பாக கடந்த 26-ம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் லலித், ''முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா ஆகிய மூவரும் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்தார்கள்!'' என்று குற்றம் சாட்டினார். பிரிவு 409-ன் கீழ் பாய்ந்துள்ள இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். மேலும் இந்த வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காதாம்.  இந்த வழக்கில் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றச் சதி புரிந்ததற்கான 120பி பிரிவை சேர்க்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. கேட்டுள்ளது. இந்தக்  குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கும் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள்.
சி.பி.ஐ. பிடி இறுகுவதாகவே தெரிகிறது!

டிக்... திக்!

மயமலையின் அழகை ரசிப்பதற்​காகச் சென்றவர்கள் சிதைந்துபோன பரிதாபம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது. அந்த விபத்துக்கு எது காரணமாக இருந்தாலும் நடந்த சோகம் எத்தனை ஆறுதல்களாலும் அடக்கிவிட முடியாதது. இறந்துபோனவர்களில் எட்டு பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பவ இடத்துக்கே சென்று இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார் மாநிலங்கள் அவை தி.மு.க. உறுப்பினரான திருச்சி சிவா. காட்மண்ட் பகுதியில் இருந்து நமக்காக சிவா தரும் நேரடி ரிப்போர்ட்...
 செப்டம்பர் 26, மதியம்... கனத்த இதயத்துடன் நேபாளம் - காட்மண்ட் விமான நிலையத்தில் நிற்கிறேன். மேகம் எது, வானம் எது என்று தெரியவில்லை. எங்கும் மழை. பனிமூட்டம். டெல்லியில் இருந்து நான் வந்த விமானம்கூட மிகவும் கரடுமுரடாக இங்கே இறங்கியபோது, அடிவயிற்றில் சுரீரென்றது. எனக்கு முன்னதாக இங்கே தரை இறங்க முற்பட்ட பல விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வந்த வழியே திருப்பிவிடப்பட்டனவாம். மழையில் நனைந்தபடி, வானத்தை உற்றுப் பார்க்கிறேன்... நேற்று காலை இதே விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு ஓரிரு நிமிடங்கள் முன்பு 'புத்தா ஏர்' என்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதை நினைக்கும்போது மனம் கலங்குகிறது.
தோளைத் தட்டினார் நேபாளத்தின் புரோட்​டோகால் அதிகாரி ராய். திருச்சிக்காரர் சாமிநாதன் என்பவர் இங்கே ஹார்லிக்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவரும் விமான நிலையம் வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவரும் கண் கலங்கினார். காந்தகார் விமானக் கடத்தலுக்குப் பிறகு, இங்கு உள்ள விமான நிலையப் பாதுகாப்பை முன்னிட்டு இந்தியா சார்பில் முருகேசன் என்கிற தமிழ் அதிகாரியை நியமித்து இருக்கிறார்கள். அவரும் என்னைச் சந்தித்தார். ''இங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இறந்த உடல்களை அருகில் சென்று நான் பார்த்தேன். தலையில்தான் காயம். கை, கால்கள் உடைந்து இருக்கின்றன. தாழ்வான உயரத்தில் பறந்ததால், உடல்களில் அதிகப் பாதிப்பு இல்லை!'' என்றவரிடம்,  ''எப்படி விபத்து நடந்தது?'' என்று கேட்டேன்.
''புத்தா ஏர் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த 14 ஆண்டுகளில் எந்த விபத்திலும் சிக்கியதே இல்லை. நேற்று காலை, அந்த விமானம் தரை இறங்குவதற்கு ஓரிரு நிமிடங்கள் முன்பு, தாழ்வான உயரத்துக்கு வந்தபோது, ஒரு மரத்தில் மோதி விபத்தில் சிக்கிவிட்டது. மொத்தமாக அனைவரும் முடிந்துபோனார்கள். அதை ஓட்டிய விமானிக்கு 32 வயது. அன்று காலை, சொந்த காரில் விமான நிலையத்துக்கு வந்தவர், அங்கு இருந்தவர்களிடம், 'சீக்கிரமா திரும்பி வந்துடறேன்' என்று சிரித்தபடி போனாராம். போனவர், பிணமாகத்தான் வந்தார்!'' என்ற  அதிகாரியின் கண்கள் பனித்திருந்தன.
நேராக, இந்தியத் தூதுரக அலுவலகத்துக்கு சென்றேன். வழியில், நேற்றைய திருச்சி நிகழ்வுகளை அசைபோட்டேன்...
அதில் இறந்துபோன எட்டுப் பேரும் திருச்சியின் வி.ஐ.பி-க்கள். அகில இந்திய பில்டர்கள் சங்க மாநாட்டில் டெல்லியில் கலந்துகொண்டுவிட்டு, சுற்றிப்பார்க்க நேபாளம் போயிருக்கிறார்கள். அவர்களில் காட்டூர் மகாலிங்கமும் ஒருவர். தந்தை பெரியார் மீது மிகுந்த பற்றுகொண்டவர். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மூவர். இவர்களும் எனக்கு மிகவும் அறிமுகமானவர்கள். இந்த எட்டுப் பேர்களின் குடும்பத்தினரும் இவர்கள் திருச்சிக்கு எப்போது திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இமயமலையின் அழகைப் பறந்து ரசித்துவிட்டு, தரை இறங்கிக்கொண்டு இருந்தபோதுதான் விபத்து!
சற்று நேரத்தில் திருச்சியில் இருந்த எனக்கு தகவல் எட்டியது. காட்டூர் மகாலிங்கத்தின் மகன்ராம்குமார் கதறினார். உடனே, நான் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அலுவலகத்துடன் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார்கள். இறந்தவர்கள் யார் யார் என்று அப்போதுதான் உறுதியாகத் தெரியவந்தது. 'உடல்களை அடையாளம் காட்ட உறவினர்களை அனுப்பிவையுங்கள்' என்றனர். இந்தத் தகவலை நான் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் சொல்லியபோது, அவர்கள் கதறி அழுததைத் தாள முடியாது. தூதரக அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு, 'உறவினர்களுடன் நானும் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். இதற்கிடையில், தமிழக அரசுத் தரப்பில், இறந்தவர்களின் குடும்பத்தினரை காட்மண்ட் அழைத்துப்போக ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள். 'இதுவும் முறையானதுதானே’ என்று நினைத்தபடி, நான் மட்டும் முன்கூட்டியே கிளம்பி இங்கு வந்து சேர்ந்தேன்.
இங்கு தூதர் - ஜெயந்த் பிரசாத். பாஸ்போர்ட் அதிகாரியாக இருக்கும் ராஜு தமிழர். துணைத் தூதுவர் மஜூம்தார், ராய், ராகேஷ் சுத் என அனைவரும் பம்பரமாக சுழன்றுகொண்டு இருந்தனர். மருத்துவமனையில்  இருந்த டாக்டர்கள் போஸ்ட்மார்ட்டத்தைத் துரிதமாகச் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அதை முடித்ததும், அடுத்து உடல்களைப் பதப்படுத்தும் பணியில் ஈடுபடப்போவதாகச் சொன்னார்கள். உறவினர்கள் இன்னும் வந்து சேரவில்லை. அவர்களுக்காகக் காத்திருந்தோம். நமது தூதரகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தைக் கூட்டினேன். ''நாளை (27.9.11) நான்கு உடல்களை ஒரு விமானத்திலும் மற்ற நாலு உடல்களை வேறு விமானத்திலும் அனுப்ப முடியும்!'' என்றனர் அதிகாரிகள். நான் ஏற்காமல், ''ஒரே விமானத்தில் எட்டு உடல்களையும் ஏற்றிச் செல்லும்படியாக ஏற்பாடு செய்யுங்கள்!'’ என்று கோரிக்கை வைத்தேன். அதிகாரிகள் ஆலோசனையில் இறங்கினர்.
அப்போது அங்கே வந்த அதிகாரி ஒருவர்,
''உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு போகும் வரையில் ஆகும் செலவுகளை புத்தா ஏர் விமான நிறுவனத்திடம்  ஏற்றுக்கொள்ளும்படி தூதரகம் சார்பில் வேண்டுகோள் வைத்தோம். உடனே 'ஓகே’ சொல்லிவிட்டார்கள்!'' என்ற தகவலைச் சொன்னார்கள்.
தூதர் ஜெயந்த் பிரசாத் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது - ''விமானம் மிக உயரத்தில் பறக்கும்போது வானிலை சரியாக இல்லை என்றால், விபத்தில் சிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அந்த விமானம் காலை 7.34 மணிக்குத் தரை இறங்கியிருக்க வேண்டும். அதனால், தாழ்வாகத்தான் பறந்திருக்கும். 7.31 மணிக்கு கன்ட்ரோல் ரூமுடன் தகவல் தொடர்பு கட் ஆனது. ஓரிரு நிமிடங்களில் விபத்தில் சிக்கியிருக்க வேண்டும். அதில் இருந்த கறுப்புப் பெட்டி கிடைத்துள்ளது. விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விபத்தில் சிக்கியதா? அல்லது, வேறு ஏதாவது காரணமா என்பதெல்லாம் அந்தக் கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிறகு சொல்கிறேன்!'' என்றார்.
உங்களைப்போல் நானும் காத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்!''
- கவலை தோய்ந்த வார்த்தைகளுடன் முடித்தார் திருச்சி சிவா!
ஆர்.பி.
''மோதிய பிறகும் விமானத்தை எழுப்ப முயற்சித்த விமானி!''
சென்னை - நேபாளம் சுற்றுலா அழைத்துப் போகும் ஸ்ரீ டிராவல்ஸின் உரிமையாளர் இளந்திரையன், தற்போது காட்மண்டுவில் இருக்கிறார். அவருடன் தொடர்புகொண்டு பேசினோம்.
''இமயமலையின் ஏரியல் வியூ-வை தாழ்வான உயரத்​தில் பறந்தபடி ஒன்றரை மணி நேரம் பார்க்கும் வகையில் விமான சர்வீஸ் (ஒருவருக்கு சுமார்  5,500 வீதம்) காட்மண்டுவில் நடத்தப்படுகிறது.  அடிக்கடி மாறி வரும் வானிலையைக்கொண்டது நேபாளம். இங்கு உள்ள வானிலைப் பிரிவு அதிகாரிகள் மோசமான சூழ்நிலையைக் கவனித்து விமானங்களைப் பறக்கத் தடை போடலாம். இப்படியான சூழ்நிலையில் எப்படி அந்த விமானத்தை பறக்க அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை. இமயமலையைப் பார்த்துவிட்டு திரும்பும்போது காட்மண்டுவுக்குப் பக்கத்தில் தாழ்வான உயரத்தில் பறந்த விமானம் முதலில் மரத்தில் மோதி, அதற்கு அருகே இருந்த வீட்டின் கூரையில் மோதியதில் இறக்கை உடைந்துவிட்டது.  எப்படியாவது விமானத்தை மேலே கிளப்ப விமானி முயற்சித்திருக்கிறார். ஆனால், முடியவில்லை!'' என்று கலங்கினார்.

''தூக்குமேடையின் அடிப்பலகை விலகியதும்..''

தொடர் உண்ணாவிரதத்தில் துயர விளம்பரம்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, மரண தண்டனை எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு உண்ணாவிரதம் இருக்கும் வகையில், இரண்டு மாதங்கள் இந்த அறப் போராட்டம் தொடர்ந்து நடைபெற கூட்டமைப்பினர் திட்டம் இட்டுள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் முதல் நாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடங்கிவைக்க... மறுநாள் கொங்கு இளைஞர் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 25-ம் தேதி, வைகோ தலைமையில் ம.தி.மு.க. அந்த நிகழ்வில் பங்கேற்றது.
உண்ணாவிரதப் பகுதி முழுவதும் தூக்குத் தண்டனைக்கு எதிரான வாசகங்கள்... பேரறிவாளன், சாந்தன், முருகன் 21 வருடங்கள் அனுபவித்த சிறைக் கொடுமைகள்... என உணர்ச்சிமிகு காட்சிகளை வார்த்தைகளால் வடித்திருந்தனர்.
ஒரு பேனரில்... 'தூக்கு மேடையில் உள்ள அடிப் பலகை திடீரென்று விலகியதும் கயிற்றின் மற்றொரு முனையில் கைதி தொங்குவான். கழுத்து முறிக்கப்படாமல் இருக்குமானால், அந்தக் கைதி கழுத்து நெரிக்கப்பட்டு இறப்பான். அவனது கண்கள் தலையில் இருந்து வெளியே வரும் அளவுக்குப் பிதுங்கும். நாக்குத் தடித்து வீங்கி, வாயில் இருந்து வெளியே தொங்கும். தூக்குக் கயிறு பெருமளவுக்கு முகத்தில் இருந்து தோலையும், சதையையும் உரித்து எடுத்துவிடும். தூக்கில் இடப்பட்டவன் அந்த நேரத்தில் சிறுநீர் கழிப்பான். மலம் கழிப்பான். இதை சாட்சிகள் சிலர் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சிறிய ஏணி வழியாக ஒரு டாக்டர் ஏறி... ஸ்டெதோஸ்கோப் மூலம் அவனுக்கு இதயத் துடிப்பு இன்னும் இருக்கிறதா என்று பரிசோதிப்பார். இறந்துபோய்விட்டான் என்று அறிவிக்கும் வரை கைதி கயிற்றின் முனையில் 6 முதல் 14 நிமிடங்கள் வரை தொங்கிக்கொண்டு இருப்பான். சிறைக் காவலர் ஒருவர், கைதியின் பாதங்கள் அருகே நின்றுகொண்டு உடல் ஆடாமல் பார்த்துக்கொள்வார். ஏனெனில், முதல் சில நிமிடங்கள் மூச்சுவிட முயற்சித்தபடி, அந்த உடல் போராடிக்கொண்டே இருக்கும்’ - என ஒரு சிறைக் காவலரின் நேரடி அனுபவம் அந்த பேனரில் பொறித்திருந்தது. இதைப் பார்த்தவர்கள் பதைபதைத்துப் போய்விட்டனர்.
உண்ணாவிரத நிறைவு நேரத்தில் பேசிய வைகோ, ''உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால், வாக்கு வேட்டையாட ஒவ்வொரு குதிரையும் தனித்தனியாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. நானோ மூன்று தமிழர்களுக்காக இங்கு போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதேபோல, கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எல்லோரும் வாக்கு வேட்டையில் தீவிரமாக இருந்தபோது, நான் என்னை வருத்திக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னைக்காக அங்கு ஆய்வு நடத்திக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில், எங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் 'ஈழத்தில் நடந்த இனப் படுகொலையை தடுக்கத் தமிழகம் தவறிவிட்டது’ என்ற விரக்தியில் முத்துக்குமாரைப்போல தனக்குத்தானே தீவைத்து மாய்த்துக்கொண்டான். அந்த நெருக்கடியான தருணத்திலும் தீக்காயம்பட்ட அந்த இளைஞனின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்து என்னாலான உதவிகளைச் செய்தேன்.
இந்த மண்ணுக்கு நான் பிறந்த தமிழகத்துக்கு என்னால் இயன்ற சேவையை எப்போதும் செய்துகொண்டு இருப்பேன். இந்த அறப் போராட்டத்தின் நோக்கம் கண்டிப்பாக வெல்லும். மூன்று தமிழர்கள் உயிர் காக்கப்பட்டுவிடும். அந்த மரணக் கயிறு முற்றாக அறுத்து எறியப்படும். இந்த நாட்டில் இருந்தே மரண தண்டனை ஒழிக்கப்படும். இந்த அனலை அணையாமல் காத்து, போரட்டத்தில் வெல்வோம்!'' என்று நம்பிக்கையுடன் பேசினார்.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்தப் போராட்டம் நடக்கப்போகிறது!
*******************************************************************************
கமலாலயத்தை தாக்கியவர்களைக் கைது செய்!

பத்த வைக்கும் பி.ஜே.பி.... பதுங்கி ஓடும் தி.மு.க...!
'எங்கள் கட்சி அலுவலகத் தாக்கு​தலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்ரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று பி.ஜே.பி. வழக்கறிஞர் அணி, கடந்த 23-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க... 'மிச்சம் மீதியையும் தூக்கிடுவாங்கபோலிருக்கே’ என உடன்பிறப்புகள் மத்தியில் சல​சலக்கிறது உதறல் டாக்!
கடந்த 2007-ம் ஆண்டு, தி.நகர் வைத்தியநாதன் தெருவில் இருக்கும் பி.ஜே.பி. அலுவலகமான 'கமலாலயம்’ தி.மு.க. தொண்டர்கள் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டதாக புகார் கிளம்பியது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது அந்தப் பிரச்னையைக் கிளப்பியுள்ள பி.ஜே.பி., மீண்டும் சட்டரீதியாகப் போராடத் தயாராகி வருகிறது.
கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலரான வழக்கறிஞர் வானதி ஸ்ரீநிவாசனை சந்தித்து, 'ஏன் இந்த திடீர் ஆவேசம்?’ என்று கேட்டபோது, வெண்கலக் குரலில் வெடித்தார்...
''சேது சமுத்திரத் திட்டத்தை மறுபரி​சீலனை செய்ய வேண்டும் என கடந்த 2007 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஈரோட்​டில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ராமர் குறித்தும், அவரது தொழில்நுட்ப அறிவு குறித்தும் தரக்குறைவாகப் பேசினார். ஒட்டுமொத்த இந்துக்​களின் உணர்வையும் புண்படுத்தியது அந்த வார்த்தைகள். இதனால், வெகுண்ட ராம்விலாஸ் வேதாந்தி என்ற சாமியார், 'ராமரைப்பற்றி இழிவாகப் பேசுபவர்களின் தலையையும் நாக்கையும் துண்டிப்போருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்குவேன்!’ என்று கூறியதாகச் செய்தி வெளியானது. உடனடியாக ஆற்காடு வீராசாமி, 'வேதாந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடமாட முடியாது. பி.ஜே.பி. அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவோம்!’ என்று மிரட்டல் அறிக்கைவிடுத்தார். அடுத்த சில நாட்களிலேயே அந்த சம்பவம் அரங்கேறியது.
2007 செப்டம்பர் 23 அன்று, 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் பயங்கர ஆயுதங்களுடன் எங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். எங்கள் நிர்வாகிகளைக் கடுமையாகத் தாக்கியவர்கள், அலுவலகத்தையும் நொறுக்கினார்கள். இந்தக் கொலை வெறித் தாக்​குதல் நடந்தபோது, பரிதி இளம்வழுதி, மா.சுப்ரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோர் எங்கள் கட்சி அலுவலகம் உள்ள வைத்தியநாதன் தெரு முனையில் இருந்தபடி தி.மு.க. தொண்டர்களைத் தூண்டிவிட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்போது காவல் துறையில் புகார் கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் முன்பு கொடுத்த புகாரில் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, மா.சுப்ரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோர் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களுக்கு இதில் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தோம். ஆனால், குற்றப் பத்திரிகையில், 'தென் சென்னை மாவட்டச் செயலாளர் தலைமையில் 100 பேர் தாக்கினார்கள்’ என்று போலீஸார் பொத்தம் பொதுவாக எழுதி இருந்தனர். அப்போது, அவர்களை எந்த சக்தி தடுத்தது என்று தெரியவில்லை... நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அலுவலகத்தில் எந்த தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதோ, அதே தினத்தில் இப்போது மீண்டும் புகார் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தேசியக் கட்சியின் அலுவலகத்தை அரசியல் நாகரிகம் இல்லாமல் அடித்து நொறுக்கும் துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்தது யார்? தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தெரியாமல், அவர் கண் அசைவு காட்டாமல் நிச்சயமாக இந்தத் தாக்குதல் அரங்கேறி இருக்காது. எனவே, அவரிடமும் விசாரிக்க வேண்டும்!'' என்று சீறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனிடம் விளக்கம் கேட்டோம். ''இந்த விவகாரத்தில் எனக்கோ, எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது. தலைவர் கலைஞர் மீது லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மட்டற்ற பாசம் வைத்துள்ளனர். அவருக்கு எதிராக வன்முறைப் பேச்சு பேசிய அந்த சாது, ஒரு காலத்தில் பி.ஜே.பி. ஆதரவில் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் சிலர், அந்தக் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிவிட்டனர். மற்றபடி தொண்டர்களை நாங்கள் தூண்டிவிட்டதாகச் சொல்வதில் உண்மை இல்லை...'' என்று மறுத்தார்.
தலைநகரில் உள்ள தங்கள் படைத் தளபதிகளை, தேர்தல் நெருக்கத்தில் மொத்தமாக வளைக்க இந்தத் தாக்குதல் விவகாரத்தை அ.தி.மு.க பயன்படுத்திக்​கொள்ளுமோ என்ற நெருடல் காரணமாக, பதுங்கி வாழும்படி பாசக் கட்டளை போட்டுள்ளதாம் தி.மு.க. தலைமை!

சரண், உனக்கு வேற வழியே இல்லை!

சோனா சவால்...
சோனா - சரண் விவகா ரத்தின் அடுத்த கட்டமாக, சோனா வுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் மகளிர் இயக்கங்கள் களத்தில் குதித்து இருக்கின்றன. சோனா அளித்த சி.டி. ஆதாரத்தை அடிப்படையாக வைத்து இருவருக்கும் போலீஸ் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது.
சோனாவின் பாலியல் புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் சரண். சோனாவை சமாதானப்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட நண்பர்கள் பல முறை பேசியும் சோனா மசியவில்லை. அதைத் தொடர்ந்து அவரிடம் எஸ்.பி.பாலசுப்ரமணியமே பேசினார். சோனா, 'நோ’ என்று சொல்லிவிட்டார். இறுதியாக அவரிடம், மன்னிப்புக் கடிதம் ஒன்றை டைப் செய்து, கொடுத்தார்கள். அதிலும் சோனாவைப்பற்றி தவறான ரீதியில் குறிப்பிடப்பட்டு இருந்ததால், அதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் இதில் பல சங்கடங்கள் ஏற்பட்டதால், அவர் மட்டும் இன்றி பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில் இருந்து கழன்றுகொண்டனர்.
இந்த நிலையில், சோனாவிடம் பேசினோம். ''சரண் என்னைச் சீண்டுறது இது ஒண்ணும் ஃபர்ஸ்ட் டைம் இல்லை; அவர் ஸாரி கேட்கிறதும் ஃபர்ஸ்ட் டைம் இல்லை. இத்தனை நாளா சரண் என்னை ரொம்ப கேவலமாத்தான் நினைச்சிருக்கிறார். ஊர், உலகத்துல உள்ள எல்லா கெட்ட விஷயங்களையும் பழகி, என்னையும் மோசமானவ... கால் கேர்ள்னு நினைச்சிட்டார். எப்பவுமே பார்ட்டியில் அந்த ஆள் என்னை வேற நோக்கத்துலதான் கூப்பிடுவார்... பார்ப்பார். நான் கூனிக் குறுகிப்போயிடுவேன்.
ஆனா, அதுக்கு எல்லாம் சேர்த்து வெச்சு, இப்ப அந்த ஆள் மன்னிப்புக் கேட்கணும். அந்த பார்ட்டியில் அவர் மிஸ்பிகேவ் பண்ணுவார்னு தெரியும். இந்த முறை அப்படி நடந்தா விடக் கூடாதுன்னுதான் போனேன். அதே மாதிரி, எவிடென்ஸும் ரெடி. அதனால, சரண் உனக்கு வேற வழியே இல்லை. ஒண்ணு கம்பி எண்ணி, களி திங்கணும். இல்லை... என்கிட்ட பகிரங்கமா மன்னிப்புக் கேட்கணும். அதைப் பார்த்து சினிமா ஃபீல்டுல எவ்வளவு பெரிய ஜாம்பவானா இருந்தாலும் சரி... பொண்ணுங்க விஷயத்துல தப்பா நடந்துக்க யோசிக்கணும்.
பணத்துக்காக நான் ஸீன் போடுறேன்னு சிலர் சொல்றாங்க. ஒண்ணு சொல்றேங்க... என் எதிர்காலமே சினிமா துறையை நம்பித்தான் இருக்கு. இப்படி எல்லாம் பண்ணா ஃப்யூச்சர்ல யாரும் வாய்ப்புக் கொடுக்க மாட்டாங்க. எந்த டைரக்டரும் எனக்குப் படம் பண்ணித் தர மாட்டாங்க. 'அட, சோனாவா? அவ டார்ச்சர் ஆச்சே’னு ஒதுக்கிடுவாங்க. அதை எல்லாம் தாண்டித் தொடர்ந்து போராடுறேன்னா... காரணம், தன்மானம். என்னை மாதிரி நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு நடக்கக் கூடாது.
பத்திரிகைகாரங்க முன்னாடி நான் சரண்கிட்ட மூணு கேள்வி கேட்பேன். முதல் கேள்வி - 'நீ என்னை தொடக் கூடாத இடத்துல தொட வந்தது உண்மையா?’ இரண்டாவது கேள்வி - 'நீ என் தொடை மேலே கையை வெக்கவந்தது உண்மையா?’ மூணாவது கேள்வி - 'ஏய், உன் ரேட் என்னடி?’ன்னு கேட்டது உண்மையா?’ இந்த மூணு கேள்விக்கும் அந்த ஆள் உண்மையை ஒப்புக்கிட்டு பகிரங்கமா மன்னிப்புக் கேட்கணும். அது போதும் எனக்கு...'' என்றார்.
''அந்த சி.டி-யில் அப்படி என்னதான் ஆதாரம் இருக்கிறது?'' என்று கேட்டோம்.
''வேண்டாம்ங்க. என்னை இதுக்கு மேலே அசிங்கப்படுத்திக்க விரும்பலை... ப்ளீஸ்...'' என்றார்.
இந்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த 'ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு’ மற்றும் சில மனித உரிமை அமைப்புகள் சோனாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருக்கின்றன. கடந்த 26-ம் தேதி மதியம் சரண் வீட்டை சோனா மற்றும் ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட முடிவு செய்தார்கள். ஆனால், போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவி கல்பனா நம்மிடம், ''சோனா என்கிற தனிப்பட்ட பெண்ணுக்காக நாங்கள் போராடவில்லை. முதலில் சோனாவின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தோம். அதற்கான ஆதாரத்தை நாங்கள் அவரிடம் கேட்டோம். அவர் கொடுத்தார். அந்த சி.டி-யில், ''சினிமாவுல நடிக்கிறவதானடி... சினிமாவுல நடிக்குற அத்தனை '.......’ பொம்பளைங்களும் காசுக்குப் போறவங்கதானடி’னு தெளிவா ரெக்கார்டு ஆகி இருந்தது. அதனாலதான், களத்தில் இறங்கிட்டோம். சோனாவுக்கு வேணா சரணோட மன்னிப்பு மட்டுமே தேவையாக இருக்க லாம். எங்களைப் பொறுத்த வரை இது சினிமா துறையில் இருக்கிற அத்தனை உழைக்கும் பெண்களையும் கேவலப்படுத்துகிற விஷயம். சோனாவே சரணை மன்னிச்சிட்டாலும் சட்டப்படி சரண் மேல் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்க விட மாட்டோம்...'' என்றார் கொதிப்புடன்.
''சோனா சொன்னது மாதிரியான எந்த சம்பவமும் நடக்கவில்லை. பிசினஸ் தொடர்பாகத்தான் பேசினேன்...'' என்று அளவோடு பதில் சொல்லி நிறுத்திக்கொள்கிறார் சரண்.
பிரச்னை இதோடு முடியாதோ?!

தினகரன் எரிப்பு வழக்கும் 'பெஸ்ட் பேக்கரி' தீர்ப்பும்...

வழி திறந்ததால் வரிந்து கட்டுகிறது சி.பி.ஐ.!
ப்பாடா... மதுரை 'தினகரன்’ பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கை, தடைகளைக் கடந்து அப்பீலுக்கு எடுத்துக்கொண்டுவிட்டது மதுரை உயர் நீதிமன்றம். குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவாகி இருப்பதால், 'அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட அதிரடி தி.மு.க. புள்ளிகளுக்கு மீண்டும் அடிவயிற்றில் கிலி!
கடந்த 2007-ம் ஆண்டு மே 5-ம் தேதி தமிழகப் பத்திரிகை உலகச் சரித்திரத்தில் கறுப்பு நாள். 'தினகரன்’ நாளிதழில் கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அந்தப் பத்திரிக்கையின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டது. உச்சகட்டமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அதில் மூன்று ஊழியர்கள் பரிதாபமாகப் பலியானார்கள். அன்றைய தி.மு.க. அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. 'அட்டாக்’ பாண்டி உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது சி.பி.ஐ. அந்த வழக்கில்  போலீஸ் சாட்சிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள்.  கடந்த 09.12.09-ல் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.
ஏராளமான ஆதாரங்களும் சாட்சிகளும் அமைந்துவிட்ட இந்த வழக்கில், தோல்விப் பட்டத்தை சுமக்க விரும்பாத சி.பி.ஐ., உடனடியாக அப்பீலுக்குப் போக ரெடியானது. ஆனாலும் கிணற்றில் போட்ட கல் ஆகத்தான் அது இருந்தது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 208 நாட்கள் கழித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அனுமதி கோரியது சி.பி.ஐ. ஆனால், 'காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்டு உள்ளது’ என்பது உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரியது எதிர்த் தரப்பு. 'டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் அனுமதி பெறவேண்டி இருந்ததால், கால தாமதம். இதற்காக, நீதிமன்றம் மன்னிப்பு வழங்க வேண்டும்’  என்றொரு துணை மனுவையும் 'அப்பீலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்’ என துணை மனுவையும் தாக்கல் செய்தது சி.பி.ஐ. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து கடந்த ஜூன் 29-ம் தேதி, நீதிபதிகள் ராஜேஸ்வரன், அக்பர் அலி அடங்கிய டிவிஷன் பென்ஞ், அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்​கொள்வதற்குப் போதிய முகாந்திரம் இருப்பதாகத் தீர்ப்பு அளித்தது.
இதை அடுத்த ஸ்டெப் கடந்த வாரம் நடந்​துள்ளது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த பிரதான அப்பீல் மனுவை செப்டம்பர் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, அருணா ஜெகதீசன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,
'அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இனி இந்த வழக்கு எப்படிப் போகும்? சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம்.
''இந்த வழக்கில் போட்டோ, வீடியோ உள்ளிட்ட வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். 'அவை எல்லாம் டேம்பர் பண்ணப்பட்டவை’ எனக் குற்றவாளிகள் தரப்பில் வாதம் செய்தார்கள். அவை அனைத்தும் திருத்தப்படாத உண்மையான ஆவணங்கள்தான் என்பதற்கான தடய அறிவியல் அறிக்கையையும் தாக்கல் செய்தோம். ஆனாலும், முக்கிய சாட்சிகள் உள்ளிட்ட அத்தனை பேருமே பிறழ் சாட்சியம் அளித்ததை எதிரிகளுக்கு சாதகமாக்கி, அத்தனை பேரையும் விடுதலை செய்துவிட்டது மாவட்ட நீதிமன்றம்.
இந்த வழக்கின் சூத்ரதாரியை கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற இலக்கை குறிவைத்துத்தான் நாங்கள் ஆரம்ப கட்ட விசாரணையில் இறங்கினோம். அதற்காக 'அட்டாக்’ பாண்டியிடம் தனியாக விசாரிக்க நினைத்தோம். அதற்கு 24 மணி நேர அவகாசம் போதவில்லை என்பதால், கஸ்டடி கேட்டு மனு போட்டோம். நீதிமன்றம் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை. அப்போதிருந்த சூழ்நிலையில், எங்களுடைய அதிகாரிகள் சிலரும் மேல்முறையீடு செய்து 'அட்டாக்’ பாண்டியை கஸ்டடியில் எடுக்க முயற்சிக்கவில்லை. அதனால், முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிட்டது. ஆனால், இப்போது சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன.  நாங்கள் திரட்டி இருக்கும் ஆதாரங்கள் பக்காவாக இருக்கின்றன. சாட்சியங்கள் பொய் சொல்லலாம்; ஆனால், சூழ்நிலைகள் ஒருபோதும் பொய்யாகாது. பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்ட முக்கியமான சில வழக்குகளில், 'பிறழ் சாட்சியங்களை நம்ப வேண்டியது இல்லை. போலீஸ் சாட்சியமும் ஆவணங்களுமே போதுமானவை’ என உச்ச நீதிமன்றமே தீர்ப்புச் சொல்லி இருக்கிறது.
இதுபோன்ற வாதங்களை எடுத்துவைத்து வழக்கை ஜெயிக்க எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரம், ஏற்கெனவே இன்னும் பல அப்பீல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் எதிரிகள் தரப்பில் ஏதாவது காரணங்களைச் சொல்லி வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கலாம். இதில் மாநில அரசின் கையில் எதுவும் இல்லை என்றாலும், தேவையற்ற தடைகளைப் போக்கி வழக்கை விரைந்து முடிக்க அவர்கள் நினைத்தால் முடியும். அதற்கான முயற்சிகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்...'' என்கிறார்கள்.
சி.பி.ஐ. சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் திருத்தி எழுதலாம். அல்லது ஆரம்பத்தில் இருந்தே மறு விசாரணைக்கு உத்தரவிடலாம். இரண்டில் எது நடந்தாலும் திகில் திருப்பங்கள் நிச்சயம்!

''முக்கூடலில் அடித்து முட்புதரில் வீசினோம்!''

கே.பி.பி.சாமிக்கு எதிராக போலீஸ் சாட்சி!
செப்டம்பர் 23... போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இருந்து திருவொற்​றியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறது ஒரு தபால். 'இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கற்பகமணி, கமலக்கண்ணன், ராஜ​ராஜன், போலீஸ்காரர்கள் முருகன், செந்தில் ஆகிய அனைவரும் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்கள்!’ இந்த உத்தரவைக் கண்டு சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ந்துவிட்டனர்!
அடுத்த நாள் திருவொற்றியூர் மீனவர் பகுதிக்குள் போலீஸ் புகுந்தது. முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமியைக் கைது செய்தது. இரண்டு மீனவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் காணாமல் போனது சம்பந்தமான வழக்கில்தான் சாமியைக் கைது செய்ததாக போலீஸ் சொல்கிறது. இந்த சர்ச்சை குறித்து கடந்த 31.08.2011 தேதியிட்ட ஜூ.வி. இதழில் நாம் எழுதி உள்ளோம்.
சாமி மீது வழக்குப் போட்டு போராடி வரும் அ.தி.மு.க. பிரமுகர் அஞ்சப்பனிடம் பேசினோம். ''கே.பி.பி.சாமி அமைச்சர் ஆவதற்கு முன்பு திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் மீனவக் கிராமத்தின் ஊர்த் தலைவராக இருந்தார். அவர் தம்பி சங்கர், மீனவர் கூட்டுறவு சொசைட்டியின் தலைவராக இருந்தார். அரசோ... தனியாரோ யார் நிதி கொடுத்தாலும் அது ஊர்ப் பஞ்சாயத்து மூலம்தான் வழங்கப்படும். அப்போது எங்கள் கிராமத்துக்கு சுனாமி நிதி வழங்கப்பட்டது. அதில், சுமார்  76 லட்சத்துக்கு சாமி கணக்குக் காட்டவில்லை. அதோடு, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நிறையத் தொழிற்சாலைகளில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அங்கு உள்ளவர்களை ஏமாற்றினார். இதுபற்றி ஊர் மக்கள் கேள்வி கேட்டு சாமியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். இதனால், 30.10.05-ல் திடீரென்று சாமியின் தம்பி சங்கர் அடியாட்களோடு வந்து 16 வீடுகளை அடித்து நொறுக்கினர். நாங்கள் போராட்டம் நடத்திய பிறகே போலீஸ் இரண்டு பேரைக் கைது செய்தது. 2006-ல் சாமி அமைச்சர் ஆகிவிட்டார். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஓட்டு போடவில்லை. ஆகவே, அவரை எதிர்த்தவர்களைப் பழிதீர்க்க, மீனவக் கிராமத்தைவிட்டே விரட்டி அடித்தார்கள். நூற்றுக்கணக்கான குடும்பத்​தினர் வீட்டைக் காலி செய்து ராயபுரம், காசி​மேடு பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தேன்.இதுபற்றி விசாரிக்க உயர் நீதிமன்றக் கண்காணிப்புப் பிரிவு பதிவாளர் ஆர்.மாலா தலைமையில் கமிஷனை நியமித்தது நீதிமன்றம். இதில் மீனவர் செல்லத்துரை என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டார். அவரும் வேலு என்பவரும் 2006-ல் அடுத்தடுத்து காணாமல் போனார்கள். இதுபற்றி போலீஸில் அவர்களது குடும்பத்தினர் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் சாமியின் ஆட்களால் கொல்லப்பட்டு இருப்பார்களோ என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்தது. அப்போது தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டு இருந்ததால், போலீஸ் மொத்தமாக இதை மூடி மறைத்துவிட்டது. அவர்களின் உடல்களைக்​கூடக் குடும்பத்தினருக்குப் போலீஸ் காட்டவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் நடந்த பிறகே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். செல்லத்துரை, வேலு சாவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!'' என்றார் அஞ்சப்பன்.
'2006-ல் காணாமல் போன என் வீட்டுக்காரரை கே.பி.பி-சாமியின் தூண்டுதலால் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்’ என்று செல்லத்துரையின் மனைவி பிரேமாவதி, வேலுவின் மனைவி வள்ளி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி, கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தனர். உடனே, தனிப் படை அமைத்து விசாரித்தது போலீஸ். கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த சுந்தரத்திடம் விசாரித்தபோது, 'சுனாமி நிதி பிரிப்பது தொடர்பாக செல்லத்துரை தகராறு செய்ததால், அவரைக் கடத்திச் சென்று புதுச்சேரிக்கு அருகில் முக்கூடல் என்ற இடத்துக்குக் கொண்டுபோய் அடித்து முட்புதரில் வீசினோம்...’ என்று சொல்லிவிட்டாராம்.
அதையடுத்து, கே.பி.பி.சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். குமார், வைத்தியலிங்கம், டெல்லி உள்ளிட்ட எட்டு பேருடன் சாமியையும் கைது செய்தது போலீஸ். கைது இடைவெளிக்குள் சாமியிடம் பேசினோம். ''என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டதை அறிந்ததுமே அதிர்ச்சியில் என் மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வினையை விதைத்திருக்கிறார்கள். நிச்சயம் திருப்பி வினையை அறுப்பார்கள். இது போலீஸால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு. அதை சட்டப்படி சந்தித்து குற்றவாளி இல்லை என்று நிரூபித்து வெளியே வருவேன்...'' என்றார்.
சாமியின் வழக்கறிஞர் சங்கரிடம் பேசினோம். ''சாமி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போதே, 'கொலை செய்த​தற்கான எந்த ஆதாரத்தையும் போலீஸ் காட்டவில்லை!’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செல்லத்துரையை புதரில் போட்டோம் என்கிறார்கள். அந்த இடத்தில் இருந்து உருட்டுக்கட்டை போன்ற எந்தத் தடயமும் போலீஸ் சமர்ப்பிக்கவில்லை. இது ஒரு பொய் வழக்கு. டைசன் என்கிற சிறுவனைத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கி சாமியைக் கைது செய்து இருக்கிறார்கள். 2006-ல் கே.வி.கே.குப்பத்தில் மோதல் நடந்தபோது விசாரிக்க நியமிக்கப்பட்ட மாலா கமிஷன் முன்பு செல்லத்துரை சாட்சியாக இருந்தார். அதனால்தான், அவர் கொல்லப்பட்டார் என்று போலீஸ் சொல்கிறது. அந்த கமிஷனில் செல்லத்துரை சாட்சியாக சேர்க்கப்படவில்லை. தங்கள் கணவன் காணாமல் போனதுபற்றி மாலா கமிஷனிடம் செல்லத்துரை, வேலு ஆகியோரின் மனைவிகள் எதுவும் சொல்லவில்லை. காணாமல் போனதாகச் சொல்லப்படும் தேதியில் அவர்கள் எங்களுடன்தான் இருந்தார்கள் என்று கமிஷன் முன்பு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த வழக்கில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. அதற்காகவே சி.பி.ஐ. விசாரணை கேட்கப் போகிறோம்...'' என்றார் சங்கர்.
எதுதான் உண்மை... நீதிமன்ற விசாரணையிலாவது தெரிய வேண்டும்!

''என்ன பாவம் செய்தார் எங்கள் சிம்மக் குரலோன்?''

மணிமண்டப ஏக்கத்தில் சிவாஜி ரசிகர்கள்
'பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டம் எழுப்பப்படவில்லை. அவரைப் பற்றி எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை’ என்று கொதிக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அக்டோபர் 1-ம் தேதி சிவாஜியின் பிறந்தநாள். அதை ஒட்டி இந்தக் கோரிக்கை மீண்டும் பரபரப்பாக எழுந்துள்ளது!
விவகாரத்துக்குள் போகும் முன் சின்ன ஃபிளாஷ்பேக்..!
2001-ல் சிவாஜி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் 'சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தாருங்கள்...’ என்று கோரிக்கை வைத்தது நடிகர் சங்கம். சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சுமார் 12 கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கத்துக்கு 2002-ல் ஒதுக்கி அரசாணை போட்டார் ஜெயலலிதா. 'அரசு இலவசமாக ஒதுக்கிய இடத்தில் நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தது நடிகர் சங்கம். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பேச்சு மூச்சே இல்லை. இந்த சமயத்தில் 'மணிமண்டபம் எழுப்புவதில் ஏன் தாமதம்?’ என்று அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த நடிகர்நெப்போலியன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். 'மணிமண்டபம் கட்டும் இடத்துக்குக் குறுக்கே செல்லும் சாலைக்கு மாற்று சாலை அமைப்பதற்கு  4.20 லட்சம் செலவாகிறது. அதில்  2 லட்சத்தை மட்டுமே நடிகர் சங்கம் செலுத்தியிருக்கிறது. அதனால்தான் தாமதம்’ என்று சொன்னது அரசு. உடனே மீதித் தொகையை நடிகர் சங்கம் செலுத்தியது. அதோடு 22.4.2005-ல் மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டார்கள். அதன் பிறகும் கிணற்றில் விழுந்த கல்லாகவே இருக்கிறது இந்தப் பிரச்னை.
மணிமண்டபத்துக்காகத் தொடர்ந்து போராடி வரும் 'சிவாஜி சமூகநலப் பேரவை’ தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ''ஜெயலலிதா இடம் கொடுத்தும் அதை நடிகர் சங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. பூமிபூஜை போட்டதோடு சரி. அந்த ஏரியாப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை நடிகர் சங்கம். இதற்காக நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை. அதன் பிறகு தலைவரான சரத்குமாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்து 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 'சிவாஜிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது. நெருங்கிய நண்பரான சிவாஜிக்கு கடற்கரையில் சிலை எழுப்பித் திறந்து வைத்தார் கலைஞர். சிவாஜிக்கு சிலை வைத்த கலைஞரே நிச்சயம் மணிமண்டபத்தையும் கட்டித் தருவார் என்று காத்திருந்தோம். 2008-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை சந்தித்து மணிமண்டபம் தொடர்பாகக் கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவால்தான் மணிமண்டபம் அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். ஜீவா, சிங்காரவேலர் போன்றவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டபையில் கடந்த வாரம்தான் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதனால் சிவாஜிக்கும் நிச்சயம் மணிமண்டபம் எழுப்புவார். இதுதொடர்பாக அவரை சந்தித்து மனு கொடுப்போம்...'' என்றார் சந்திரசேகரன்.
நடிகர் சங்கத்துக்கு அரசு கொடுத்த நிலம் என்ன ஆனது என்பது பற்றி விசாரித்தோம். இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சந்திரசேகரன் அரசிடம் கேட்டபோது 'அந்த நிலம் நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. பொதுப்பணித்துறையிடமே உள்ளது’ என்று சொல்லப்பட்டது. நடிகர் சங்கம் பூமி பூஜை போட்டபோது ''மணிமண்டபம் கட்ட வரைபடம் தயாரிக்க நிதி திரட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம். இதற்காக இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம்...'' என்று அப்போது விஜயகாந்த் சொன்னார். ஆனால், அதன் பிறகு அதை நடிகர் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் கேட்டபோது, ''சாலை அமைப்பதற்காக மட்டும் நடிகர் சங்கம்  2 லட்சம் அரசுக்கு கொடுத்தது. அந்தப் பணத்தையும் திரும்ப வாங்க முயற்சி செய்து வருகிறோம். சிவாஜிக்கு கடந்த ஆட்சியில் சிலை வைத்துவிட்டதால் மணிமண்டபம் தேவையில்லை என்று அரசு நினைத்திருக்கலாம். மணிமண்டம் கட்டுவதாக நடிகர் சங்கம் சொல்லவே இல்லை...'' என்றார். ''பூமி பூஜை போட்டது ஏன்?'' என்றோம். ''நிலம் தருவதாக அரசு சொன்னதால் பூஜை போட்டோம். இப்போது நிலம் அரசிடமே இருப்பதால் கட்டவில்லை!'' என்றார்.
அரசு என்ன சொல்கிறது? செய்தித் துறை அமைச்சர் செந்தமிழனிடம் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இப்போது எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும் இதுபற்றி அம்மாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்போம்!'' என்றார்.
சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை இந்த முறையாவது ஜெயலலிதா நிறைவேற்றுவாரா?

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010