********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

வெற்று பரபரப்புக்குத் தான் போராட்ட அறிவிப்புகளா? - அப்துல் முஹைமின்

Sunday, September 18, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

சென்னையில் தமுமுக தலைமையகத்தின் இரண்டாம் தளத்தில் தமுமுகவுக்கு சொந்தமான உணர்வு வார இதழின் அலுவலகம் சில ஆண்டுகள் இயங்கி வந்தது. உணர்வை ஆக்கிரமித்த அண்ணன் ஜமாஅத், பின்பு உணர்வு செயல்பாடுகளை அரணமனைக் காரன் தெருவில் உள்ள அண்ணன் ஜமாஅத் தலைமையகத்திற்கு மாற்றிவிட்டு, ஏற்கனவே இருந்த வடமரைக்காயர் தெரு இரண்டாம் தளத்தை வெறும் முகவரிக்காக மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், தமுமுக அந்த இரண்டாம் தளத்தை ஆக்கிரமித்து விட்டது என்று அலறிக்கொண்டு உணர்வு அலுவலகம் மீட்பு என்ற பெயரில் சில போராட்டங்களை  அறிவித்தார்கள். இதற்கிடையில் அந்த தளத்தின் சாவி ஆர்டிஒ வசம் ஒப்படைக்கப்பட்டவுடன்,

''சாவியை அதிகாரிகள் கைப்பற்றி ஆர்.டி.ஒ. விடம் ஒப்படைத்து விட்டார்கள். இந்த அலுவலகத்தை  இன்னொரு எஸ்.பி. பட்டினமாக்க  பார்க்கிறார்கள் என்று குமுறிய அண்ணன்  சட்டமன்றம் கூடும் முதல் நாள் முற்றுகை போராட்டம் என்றார்.

பிறகு திடீரென்று,
1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .
என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். சொன்னது மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தாமல் சென்னையில்  மட்டும் ஒரு போராட்டம் நடத்தியவர்கள் அது பிசுபிசுத்த காரணத்தால்  தமுமுகவின் ஆக்கிரமிப்புக்கு ஜெயலலிதாவோ அவரது அதிகாரிகளோ  காரணம் இல்லை. எனவே அனைத்து போராட்டம் ரத்து என்று அன்று முடங்கியவர்கள் இன்று வரை மூச்சைக் காணோம். இது பழைய கதை.
 
இப்போது உணர்வு வார இதழில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அண்ணன்,
 
''வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விசயங்களில் மனிதர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப்  பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்கு கட்டுப்படுவதில் எந்த தவறுமில்லை.
 
பள்ளிவாசல், அடக்கஸ்தலம் போன்ற பிரச்சினைகளில் ஆர்டிஒ விசாரணை மூலம் தீர்வு காண்பதும் இந்த அடிப்படையில் தான். லஞ்சம்- ஒருபக்கக் சார்பு காரணமாக சில தீர்ப்புகள் அநியாயமாக அளிக்கப்படலாம்.அதைக் கண்டித்து போராடமுடியுமே தவிர அந்த தீர்ப்புக்கு எதிராக அந்த சொத்தை நாம் கைவசப் படுத்த  இயலாது'''. [உணர்வு 16 ;03 ]
 
அண்ணன் சொல்லியுள்ளதை கவனித்தீர்களா? ஒரு சொத்துப் பிரச்சினையில் ஆர்டிஒ ஒரு தீர்ப்பை வழங்கி விட்டால், அதை எதிர்த்து போராடலாமே  தவிர அந்த சொத்தை கைப்பற்ற முடியாது என்கிறார். இப்போது நன்றாக கவனியுங்கள். ஆர்டிஒ பாதகமான தீர்ப்பளித்த பின்னால் கூட [நீதிமன்றம் மூலமேயன்றி] சம்மந்தப்பட்ட  அந்த சொத்தை கைப்பற்றமுடியாது என்றால், உணர்வு அலுவலகத்தின் சாவி ஆர்டிஒ கைக்கு போன உடனே, எதோ உணர்வு அலுவலத்தை கைப்பற்ற கிளம்பி விட்டோம் என்ற தோரணையில் கர்ஜித்துக் கொண்டு,
 
 நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது.என்று அறிவித்தது வெற்றுக் கூச்சலுக்கும் 
பரபரப்புக்கும் தான் என்பதை அண்ணனின் பதிலின் மூலமும், இந்த 
பிரச்சினையிலும் சரி, 
எஸ்.பி.  பட்டினம் பிரச்சினையிலும் சரி தண்ணீரில் நனைந்த கோழிக்குஞ்சாய் மூர்ச்சையுற்று கிடக்கும் அண்ணன் ஜமாஅத்தின் நடவடிக்கையும் காட்டுகிறது. ஆனாலும் அல்தாபி போன்றவர்களின் 'உணர்வு அலுவலகத்தை  கைப்பற்றுவோம்; எஸ்.பி. பட்டினம் மஸ்ஜிதை  கைப்பற்றுவோம்; மஸ்ஜிதுல் முபாரக்கை கைப்பற்றுவோம்; வெள்ளை மாளிகையை கைப்பற்றுவோம் என்ற வெற்றுக் கூச்சலுக்கு மட்டும் குறைவில்லை.
 
என்னத்த எழுதினாலும் அண்ணனை பின்பற்றுபவர்கள் அல்லாஹ் நாடினாலன்றி திருந்தப் போவதில்லை.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010