********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இயக்க வெறியர்களே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்

Monday, July 25, 2011

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்புசமீபகாலமாக, தமிழகத்தில் வெள்ளக்‌‌கோவில்தாராபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், நில அதிர்வுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை நகரில் அடிக்கடி நிகழும் சிறிய அளவிலான நில அதிர்வு, மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.கடந்த ஜூன் 3ம் தேதி பிற்பகலில், சென்னை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில், அடுக்குமாடி வீடுகளில் வசித்தவர்கள் உணரும் வகையில், நில அதிர்வு ஏற்பட்டது.

மீண்டும் ஜூலை 10ம் தேதி மாலை 4 மணியளவில் அசோக்நகர், கேகே.நகர், ஈக்காட்டுத்தாங்கலிலும், கடந்த 19ம் தேதி திருவல்லிக்கேணி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்து, டில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, உள்ளிட்ட 38 நகரங்கள் மிதமான நில அதிர்வு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கல்பாக்கம், ‌சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகியவை மிதமான நில அதிர்வு வருவதற்கான பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.நிலநடுக்கத்தை அதிக அபாயம், மிதமான அபாயம், குறைந்த அபாயம் என ரிக்டர் அளவின் அடிப்படையில், ஒன்று முதல் 12 பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஒன்று என்றால் உணரப்படாத அளவு. ரிக்டர் அளவு 12 என்றால், நிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும் அளவுக்குக் கடுமையானது.

இதில், சென்னை மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட 38 தென்னந்திய நகரங்கள் இந்தப் பிரிவில் உள்ளன. ஒருவேளை இங்கு நில அதிர்வு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான பேரிடர் மேலாண் தொழில் நுட்பம் நம்மிடையே எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியே.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிர்வியலாளர் கோபால் கூறியதாவது:அளவுக்கு அதிகமான ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானத்திற்காக வரம்பின்றி மணல் அள்ளுதல், நகரமயமாக்கலுக்காக ஏராளமான மரங்கள் வெட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் பூமி சமநிலைத் தன்மையை இழந்து விடுகிறது.மேலும், நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் உபரி நீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால், கடல் மட்டத்தை விட பூமி தாழ்நிலையை அடைகிறது. செயற்கையாலும், இயற்கையாலும் நிலநடுக்கம் மனித வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

எதிர்பாராத நேரங்களில், எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்க அளவுகளை எல்லா நாடுகளும் பதிவு செய்கின்றன. நில அதிர்வு அதிகபட்சமாக மூன்று மையங்களில் பதிவானால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வேலூர் சேலம், திரிசூலம் ஆகிய மலைப்பகுதிகளில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் அதிக வெடிச்சத்தம் வரும். அது நில அதிர்வு என கூற முடியாது. மிகவும் குறைவான அதிர்வு பதிவாகாது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன. வடக்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை நகர் ஆகியவை மிதமான நிலநடுக்கத்தின் மூன்றாவது மண்டலத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு கோபால் கூறினார்.

நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி, பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நிலநடுக்கம் நடந்த பின் தான், அது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால், நிலநடுக்கத்திற்கான சரியான காரணம் என்ன என்று, விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.அவர்களின் கூற்றுப்படி, கடலில் அதிகப்படியான பேரலைகள் எழுவது; நகரில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து; பூமிக்கடியில் பாறைகளுக்கிடையே ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். நில அதிர்வு என்பது நிலநடுக்கம் வருவதற்கான ஒரு அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ரிக்டர் என்றால் என்ன?நிலநடுக்க மானியால் (சீஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் நிலநடுக்க அதிர்வு அளக்கப்படுகிறது. இந்தக் கருவியை அமெரிக்க நில அதிர்வியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935ம் ஆண்டு கண்டுபிடித்தார். 2க்கு குறைவானவற்றை மனிதர்களால் உணரமுடியாது. ரிக்டர் அளவில் ஐந்து என்ற அளவு, நான்கைவிட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். 6க்குமேல் பதிவாகும் நிலநடுக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ரிக்டர் வந்த பின், அதிகபட்சமாக 8.9 வரை நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சஅளவைமத்ரா நிலநடுக்கமும்(2004), ஜப்பான் நிலநடுக்கமும்(2011) முறியடித்துள்ளன.

-ஜி.எத்திராஜுலு-

dinamalar.com
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010