********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

காந்தி அழகிரியை வளைக்கும் மார்ட்டின் வலை?

Saturday, July 30, 2011

மிஸ்டர் கழுகு: காந்தியை வளைக்கும் மார்ட்டின் வலை?

ழுகார் உள்ளே நுழைந்ததும் ஜாஃபர் சேட் மேட்டரைத்தான் முதலில் எடுத்தார்... மும்முரமாகப் படித்தார். அப்படியே, நஜ்முதீன் மேட்டரையும் வாங்கிப் பார்த்தார். 

''கோலோச்சியவர்கள், அடுத்தவர் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொட்டிக்கொண்ட​வர்கள் அத்தனை பேருமே வரிசையாகச் சிக்கி வருகிறார்கள். 'எந்த இடத்திலும் பழிவாங்கும் நடவடிக்கைகளாக இவை தெரியக் கூடாது. உண்மையான புகார்களின் அடிப்படையில், ஆதாரங்களுடன் நடவடிக்கைகள் இருக்கட்டும்’ என்பது முதல்வர் உத்தரவு. 'மீடியாக்களுக்கு ஸீன் காண்பிப்பதுபோன்ற சம்பவங்​களே இருக்கக் கூடாது’ என்பதில் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறார்!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''ஜாஃபர் அப்போது எங்கே இருந்தார்?'' என்றோம்.
''மண்டபம் முகாமில்தான் இருந்தார். ரெய்டு போலீஸார் வந்து போன பிறகு மதியம் எங்கோ அவசரமாகப் போய்த் திரும்பினார். போலீஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்று மறுநாள் சென்னைக்கு வந்துவிட்டார். ஜாஃபர் சேட் குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை ஒப்படைக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை கேட்டது. அவர், அவரது மனைவி, மகள்... மூவரின் பாஸ்போர்ட்களையும் ஒப்படைத்தார்.''
''அவர் மீதான நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?''
''இப்போது பதிவு செய்திருப்பது, 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தை விதி மீறிய வகையில் வாங்கியதாக’ அவரது மனைவி மீது வழக்கு. ஆனால், இந்தச்  சதிகளில் உடந்தை என்கிற சட்டப் பிரிவுகளில்தான் ஜாஃபர் சேட்டின் மீது குற்றச்சாட்டு பதிவாகும். அடுத்து அவர் மீது பாயப்போவது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தாரா என்கிற புகார். இதைச் சட்டப்பூர்வமாக நிரூபிக்கத் தேவையான ஆவணங்கள் இருந்தால், ரெய்டின்போது கைப்பற்றி வரச் சொன்னதாம், ஆட்சி மேலிடம். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள், ரெய்டுக்கு போன அதிகாரிகளிடம் 'வீட்டு வசதி வாரிய இடம் தொடர்பான புகாருக்குத் தேவையான ஆவணங்கள் இருந்தால், அதை மட்டும் கைப்பற்றி வாருங்கள். மற்றதைத் தொட வேண்டாம்’ என்று சொன்னதாக ஒரு பேச்சு. ஏன் இப்படி சொன்னார்கள் என்பதுதான் போலீஸ் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாகக் கிளம்பியது. 'இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ரெய்டு தகவலே ஜாஃபருக்கு முன்கூட்டித் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு’ என்கின்றனர்.''
''இந்த ரெய்டில் எதுவும் எடுக்கவில்லை என்பதற்காக விட்டுவிடுவார்களா என்ன?''
''ஜெயலலிதா முதல்வரானதும் குறிவைக்கப்பட்டது ஜாஃபருக்குத்தான். விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி-யான மகேந்திரனிடம்தான், ஜாஃபருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும்படி முடுக்கிவிட்டார்கள். ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைக்குப் பணம் கட்டியது யார் என்பதையும் எடுத்துவிட்டார்களாம். பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜேசிபி மெஷின் கம்பெனிக்கு இவருடன் என்ன மாதிரியான நட்பு என்றும் பார்க்கிறார்கள். மார்வாடி ஒருவரின் வீடு கட்டும் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலில், பிஸ்டலை வைத்து அவரை மிரட்டியது யார் என்றும் விசாரணை நடக்கிறதாம். நீலாங்கரை அருகே ஒரு நிலத்தைக் கைப்பற்ற நடந்த மோதலில் யாரையாவது காப்பாற்ற இவர் முயற்சித்தாரா என்றும் விசாரணை தொடங்கி உள்ளார்கள்.''
''குற்றப் பத்திரிகை ரொம்பப் பெரிதாக இருக்கிறதே?''
''கடந்த ஆட்சியின்போது, சேலம், கோவை போன்ற ஏரியாக்களில் ராஜபோகமாகஆட்சி நடத்திக்கொண்டு இருந்தார், அந்த டி.எஸ்.பி.  போலீஸின் டம்மியான பதவிகளில் உட்​கார்ந்து​கொண்டு, தனிப்பட்ட முறையில் பெட்ரோல் பங்க், போக்குவரத்து பிசினஸைக் கவனித்து வந்தாராம். இவரது பின்புலங்கள் விசாரிக்கப்படுகின்றன. கடற்கரைச் சாலையில் முன்னாள் நடிகை ஒருவருக்குச் சொந்தமான இடத்தைத் தட்டிப்பறித்ததன் பின்னணியும் விசாரிக்கப்படுகிறது. திருச்சி ஆயுதப் படை போலீஸ்காரர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோனதும், அவரது அப்பா அன்றைய முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியதும் தோண்டி எடுக்கப்படுகிறது. மொத்தத்தில் கைது, பதவி நீக்கம் என்ற எல்லைகளை ஜாஃபர் தொடக்கூடும்...'' என்ற கழுகார், அடுத்து 'அட்டாக்’ சப்ஜெக்ட்டை எடுத்தார்.
'' 'நீ முன்னாலே போனா... நான் பின்னாலே வாரேன்’ என்பதுபோல், மு.க.அழகிரியின் நிழல் பொட்டு சுரேஷைத் தொடர்ந்து இப்போது, 'அட்டாக்’ பாண்டியும் குண்டர் சட்டத்தில்! சொக்கிகுளத்தில் கல்பனா என்பவரின் ஒரு கோடி மதிப்பிலான வீட்டை 'அன்பாக’ப் பேசி(!) அபகரித்த வழக்கில், கடந்த 15-ம் தேதி அமுக்கப்பட்ட அட்டாக், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போதே, அவர் மீது இரண்டு வழக்குகள் பாய்ந்தன. வில்லாபுரத்தில் பிருதிவிராஜ் என்பவரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டை ஆயுதங்களோடு போய் மிரட்டிப் பறித்துக்கொண்டதாக ஒரு வழக்கும், கே.கே.நகரில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை அபகரித்ததாக இன்னொரு வழக்கும் பதிவாகின. இந்த வழக்குகள் தொடர்பாக 'அட்டாக்’ பாண்டியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நீதிமன்றங்களில் உள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சிலரே, சாதி ரீதியாக 'அட்டாக்’குடன் அண்டர்கிரவுண்ட் டீலீங் வைத்து செயல்பட்டதால், 'அட்டாக்’கை போலீஸ் கஸ்டடியில் எடுக்க முடியாமல் போனது. இப்படியே போனால்... 'அட்டாக்’குக்கு ஜாமீன் கொடுக்கவும் ரூட் போட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்று யோசித்த காவல் துறை, அவர் மீது உள்ள பழைய வழக்குகளை எல்லாம் தோண்டி எடுத்தது. ஏற்கெனவே, 2009-ல் தெப்பக்குளம் ஸ்டேஷனிலும் மாவட்ட குற்றப் பிரிவில் இரண்டு வழக்குகளும், கடந்த ஆண்டு அருப்புக்கோட்டையில் ஆள் கடத்தல் வழக்கு ஒன்றும் பதிவாகின. எல்லாம் சேர்த்தால், ஆறு வழக்குகள். இதுவே இப்போதைக்குப் போதும் என்று குண்டாஸைப் புகுத்திவிட்டது போலீஸ்.''
''அட்டாக் பாண்டியை அடுத்து, யாருக்கு அட்டாக்?''
''லாட்டரி அதிபர் மார்ட்டினை சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளது, போலீஸ். வியாழக்கிழமை மதியம் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் வாங்கிச் சென்றுள்ளார் மார்ட்டின். அவர் மூலமாக, அடுத்த அட்டாக்கை நிறைவேற்றும் போலீஸ்!''
''முதலில் இவர் சரண் அடைந்த சமாசாரத்தைச் சொல்லும்...''
''பல்லடத்தைச் சேர்ந்த கணேஷ்வர், மண்ணரை​யைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இருவரும் ரியல் எஸ்டேட் பார்ட்னர்கள். இந்த கிருஷ்ணமூர்த்தி, மார்ட்டினுக்கு வேண்டப்பட்டவராம். அந்த வகையில் மார்ட்டினின் பணம், இந்தத் தொழிலில் இறங்கி உள்ளது. 'மூன்று கோடியை கிருஷ்ணமூர்த்தியும் மார்ட்டினும் சேர்ந்து தனக்குத் தராமல் ஏமாற்றி​னார்கள்’ என்று திருப்பூர் சென்ட்ரல் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தார் கணேஷ்வர். கடந்த ஆட்சியில் மார்ட்டினை யாராவது கை வைப்பார்களா? அப்படியே விட்டுவிட்டார்கள்! இப்போது அது தூசி தட்டப்​பட்டது. உடனே உயர் நீதிமன்றம் போனார் மார்ட்டின். 'திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் வாங்கிக்கொள்ளலாம்’ என்று தீர்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்துதான் இந்தச் சரணாகதிப் படலம். இது மார்ட்டினை மொத்தமாக வளைப்பதற்கான முன்னோட்டம் என்கிறார்கள்.''
''இப்போது சொல்லும், அடுத்த அட்டாக் யாருக்கு?''
''மார்ட்டின் சம்பந்தப்பட்ட மதுரை விவகாரத்தை பல வாரங்களுக்கு முன் உமது மதுரை நிருபர் எழுதி இருந்தார் அல்லவா? அதுதான் அடுத்த விசாரணை வலையாக இருக்கும் என்கிறார்கள்.
மதுரையை ஒட்டிய உத்தங்குடியில் இருக்கிறது நாகர் ஆலயம். அதற்குச் சொந்தமான 17.24 ஏக்கர் நிலம்தான் இந்த சர்ச்சைக்குக் காரணம். இதில், 3.95 ஏக்கர் நிலம் அழகிரியின் மனைவி காந்தியின் பெயருக்குக் கைமாறியது. இந்த நிலத்தை, விற்கவோ, வாங்கவோ கூடாதாம். அதை மீறி, இந்தப் பரிமாற்றம் நடந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலங்களை மார்ட்டின் வாங்கியுள்ளார். அதில் 3.95 ஏக்கரை காந்தி பெயருக்கு மாற்றி உள்ளார். இந்த ஆலயத்தை உருவாக்கிய நாகேந்திர ஐயரின் பேரன்தான் இந்தப் பிரச்னை தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். மார்ட்டினை வளைக்கும் போலீஸ், அடுத்ததாக காந்தி அழகிரியைக் குறிவைத்துக் களத்தில் குதிக்கப்போகிறது. இரண்டொரு நாட்களில் இதற்கான முஸ்தீபுகள் ஆரம்பம் ஆகலாம். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் அழகிரி. நித்தமும் வக்கீல்களைப் பார்த்து ஆலோசிப்பதிலேயே அவரது நேரம் கழிகிறது. மதுரை முதல் டெல்லி வக்கீல்கள் வரை இந்த ஆலோசனையில் மூழ்கி உள்ளார்கள்!'' என்ற கழுகார், அடுத்த நொடியில் வானத்தில் வட்டமிட்டார்!
 
சீமான் புகைப்படம் காணோம்!
இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை​வேற்றிய முதல்வர் ஜெயல​லிதா​வுக்கு 'நாம் தமிழர்’ கட்சி சார்பில் நன்றி சொல்வதற்கு சீமான் சென்றார். அவருடன் இயக்குநர் மணி​வண்ணனும் சென்றார்.
''நீங்கள்தான் சைதாப்பேட்​டையில் பொதுக்கூட்டம் நடத்திப் பாராட்டி​விட்டீர்களே! அப்புறம் நேரிலும் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா?'' என்ற முதல்வர், ''என்னைச் சந்திக்க வந்த ஹிலாரியிடம் இலங்கைபற்றிதான் முக்கால் மணி நேரம் பேசினேன். அதைக் கேட்ட ஹிலாரி, 'நீங்களே இலங்கை அரசிடம் பேசலாமே?’ என்றார். 'இதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்’ என்று நான் சொன்னேன்!'' என்றாராம்.
''நாம் மத்திய அரசுடன் இது​பற்றிப் பேசினால், அவர்கள் சம்பிரதாயமாகத்தான் பேசுகிறார்கள். என்னைச் சந்திக்க வந்த இலங்கைத் தூதரிடம், 'இன்றைய நிலவரத்தை அறிய தூதுக் குழு அனுப்பினால், நீங்கள் சொல்லும் இடத்தைத்தான் பார்க்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அவர் மௌனமாக இருந்தார். என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்தான் மாறுதல் வேண்டும்!'' என்று நீண்ட நேரம் பேசினாராம் முதல்வர். ஆனால், முதல்வரும் சீமானும் சந்தித்த படத்தைப் பிரசுரிக்க வேண்டாம் என்று தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து நாளிதழ்களுக்கும் சொன்னதுதான் ஆச்சர்யமான சமாசாரம்.
''சீமான் சந்திப்புக்கு முன்னதாக டி.ஜி.பி. மற்றும் சென்னை கமிஷனர் ஆகிய இருவரும் முதல்வரை சந்தித்தார்கள். சீமான் சென்ற பிறகு மறுபடியும் இவர்கள் முதல்வரைச் சந்தித்தனர். சீமான் மீது புகார் கொடுத்த விஜயலட்சுமி பற்றி ஏதாவது சொன்னார்களா எனத் தெரியவில்லை. போட்டோ போடக்கூடாது என்று சொன்னதன் பின்னணி இதுவாகக்கூட இருக்கலாம்!''  என்கிறார்கள்.
என்ன ஆச்சு கருப்பசாமிக்கு?
கால்நடைத் துறை... பிறகு, விளையாட்டுத் துறை... இப்போது, இலாகா இல்லாத அமைச்சர் ஆக்கப்பட்டுவிட்டார் சொ.கருப்பசாமி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவர் வகித்த பொறுப்பு இப்போது சி.வி.சண்முகத்திடம். கடந்த வாரம் ஜெயலலிதா திடீரென்று அழைக்க, அவரைப் போய் பார்த்தார் கருப்பசாமி. விளையாட்டுத் துறை தொடர்பாக ஒரு விவரத்தை ஜெயலலிதா கேட்க... பதில் சொல்ல முடியாமல் நின்றாராம் கருப்பசாமி. ''என்ன ஆச்சு?'' என்று ஜெயலலிதா அக்கறையாகக் கேட்க... ''கொஞ்ச நாளா உடம்பு ஒரு மாதிரியா இருக்கும்மா? எதுவுமே செய்ய முடியலை!'' என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னார். உடனே ''உடம்பைப் பாருங்க!'' என்று சொல்ல... அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
'கருப்பசாமி எங்கே இருக்கிறார்?’ என்று விசாரித்தபோது, அரசு மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது. அப்போலோவில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று நினைத்த ஜெயலலிதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பொருளாதாரப் பிரச்னை என்பது புரிந்ததும், அவரை நந்தனம் அப்போலோ மருத்துவனையில் சேர்க்க உத்தரவிட்டார்!
********************************************************************************************

மிஸ்டர் கழுகு: காந்தியை வளைக்கும் மார்ட்டின் வலை?

ழுகார் உள்ளே நுழைந்ததும் ஜாஃபர் சேட் மேட்டரைத்தான் முதலில் எடுத்தார்... மும்முரமாகப் படித்தார். அப்படியே, நஜ்முதீன்
மேட்டரையும் வாங்கிப் பார்த்தார். 

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010