********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

காதல்... கலவரம்...மரணம்!

Tuesday, July 26, 2011

பெரம்பலூர் திகில்
'ரண்டு இதயங்களை இணைக்க வேண்டிய காதல், ஒரு மதக் கலவரத்துக்கு வழிவகுத்து உள்ளது. இந்தக் கலவரம் மேலும் பரவாமல் இருக்க உடனே உதவி செய்யுங்கள்!’ என்று பெரம் பலூர் மாவட்டம் விஸ்வகுடி கிராமத்தில் இருந்து ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) அவசரத் தகவல்
பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் 28-வது கிலோ
மீட்டரில் வேப்பந் தட்டையை அடுத்து இருக்கும் விஸ்வகுடி கிராமத் துக்குச் சென்றோம். வீதியெங்கும் மயான அமைதி. ஆண்கள் யாருமே இல்லை. வீடுகளில் பெண்கள் முடங்கிக் கிடக்க... வீதிகளில் காக்கிகளே தென்பட்டனர். அருண் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனும், மெஹர்பானு என்ற இஸ்லாமியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதுதான் பிரச்னைகளுக்கு ஆணி வேர்.
அதனால் முதலில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அருணை சந்திக்கச் சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அருண் இருக்க, அவரது தாய் தங்கமணி பேசினார். ''அருணும், மெஹர்பானுவும் அஞ்சு வருஷமா காதலிச்சிருக்காங்க. தொண்ட மாந்துறை முருகன் கோயில்ல ஆறு மாசத்துக்கு முன்னாடி கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்களாம். அந்தப் பொண்ணுக்கு இவன் செல்போன் வாங்கித்தந்து, ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கிட்டு இருந்திருக்காங்க. விஷயம் பொண்ணோட பெத்தவங்களுக்குத் தெரிஞ்சி, அடிச்சி உதைச் சிருக்காங்க. அவ, 'அருணோடதான் போவேன்னு தெளிவா சொல்லவும், கடுப்பாகிட்டாங்க. அதனால பொய் சொல்லி, அருணை பள்ளிவாசல் பக்கமா அழைச்சுட்டுப் போயிருக்காங்க. அங்கே சில இஸ்லாம் இளைஞர்கள், சாதி பேரைச் சொல்லித் திட்டி கிரிக்கெட் மட்டையை வெச்சி அடிச்சிருக்காங்க. உசுருக்குப் போராடிக்கிட்டு கிடந்த பிள்ளைய ஆம்புலன்ஸ்ல ஏத்திக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில சேர்த்து ஒரு வாரமாகுது...'' என்றார் கண்ணீருடன்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஊரே கலவரக் காடாக... போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சமயத்தில், பூட்டிய வீட்டுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லட்சுமியும் அவரதுகுழந்தைகள் விசாந்த், ஸ்ரீவித்யாவுடன் தூக்கில் தொங்கவே, இதுவும் இஸ் லாமியர்கள் சதி என்று மேலும் பரபரப்பு கிளம்பிவிட்டது.
இறந்துபோன லட்சுமியின் உறவினரான .தி.மு.. கிளைச் செயலாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். ''அருண் விவகாரத்துக்குப் பிறகு ஊரே பதற்றமா இருந்ததால, நிறைய போலீஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாங்க. போன செவ்வாய்க்கிழமை (19-ம் தேதி) அன்னிக்கு போலீஸ்காரங்க எல்லாம் சாப்பிடப் போன நேரத்துல, உரக்கடை இஸ்மாயில் மகன், வண்டியில போயிருக்கான். வழியில நின்ன எங்க பசங்களைப் பார்த்து, 'என்னடா... தெனாவட்டா நிக்குறீங்க?’ன்னு கிண்டலா கேட்டுட்டுப் போயிருக்கான்.
பதிலுக்கு எங்க பசங்க டென்ஷனாகி, அவன் வீட்டுக்கு போய் கேட்க நினைக்கும்போதே, அந்தப் பையனே பிளேடால உடம்புல கிழிச்சிக்கிட்டான். அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க. அதனால ஏரியா பதற்ற மாயிடுச்சு. ராத்திரி 10 மணிக்கு போலீஸ் வீடு வீடா புகுந்து ஆட்களை எல்லாம் பிடிச்சிட்டுப் போனாங்க. அந்த நேரத்தில் பூட்டிய வீட்டுக்குள் லட்சுமியும், ரெண்டு குழந்தைகளும் சேலையில தூக்குப்போட்ட நிலையில் இருந்திருக்காங்க. எதுவுமே விசாரணை செய்யாம,  'அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு போலீஸ்காரங்க பிரச்னையை திசைதிருப்புறாங்க. தரையைத் தொடுற மாதிரிதான் லட்சுமி உடம்பு இருந்துச்சு. அதனால், இது தற்கொலை இல்லை. அவங்க ஆட்கள்தான் கொலை செஞ்சிட்டாங்க...'' என்றார் ராஜேந்திரன்.
சம்பவம் குறித்து மெஹர்பானு தரப்பு இஸ்லாமியர்களிடம் பேச முயன்றோம். ஜமாத்தின் முன்னாள் தலைவர் முகமது அலி, ''அந்தப் பொண்ணை காதலிச்ச பையனை எங்க பசங்க அடிச்சது தப்புதான். இஸ்மாயில் பையனிடம் அந்த ஏரியா பசங்க ஏதோ சொல்ல... இவன் அசிங்கமா திட்டிக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டான். தொடர்ந்து வந்த நாப்பது அம்பது பசங்க அவன் வீட்டுக்குப் போயி அடிச்சி, பிளேடால கீறி இருக்காங்க. அவனை பெரம்பலூர் மருத்துவ மனையில் சேர்த்திருக்கோம்.
வண்டி வண்டியா போலீஸ் காரங்க இருக்கும்போது. நாங்க எப்படி கொலை செய்ய முடியும்? அந்த பொண்ணு லட்சுமிக்கு வீட்டுக்காரர்கூட சண்டை போல இருக்கு. அதான் குழந்தைகளோட தானும் தூக்குமாட்டி செத்து டுச்சு!'' என்றார்.
லட்சுமியின் மாமியார் அமராவதியிடம் விசாரித் தோம். ''என் பையன் கோயம்பேட்டுல இருக்கான். எனக்கும் மருமகளுக்கும் பேச்சு வார்த்தை இல்லை. ஆனா, மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை இல்லைங்க. அவ தூக்கு மாட்டிச் சாகுற அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைங்க...'' என்றார்.
பெரம்பலூர் எஸ்.பி-யான ரூபேஷ்குமாரிடம் நிலவரங்களைச் சொன்னோம். ''காதல் சம்பவத்துக்கும் லட்சுமியின் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை. விசாரணை நியாயமாக வெளிப்படையாக நடக்கிறது. ஊருக்குள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று சொன்னார்.
அறிவியல் உச்சத்துக்குச் சென்றுகொண்டே இருந் தாலும், சாதி, மதம் என்று மனிதர்கள் பின்னோக்கியே செல்கிறார்களே. காதல் ஜெயிக்கட்டும், ஊர் மக்களும் இணையட்டும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010