********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சிதம்பரத்தில் 'ரத்த' மோதல்!

Saturday, July 30, 2011

தி.மு.க. செயற்குழு திகில்

டலூர் மாவட்ட  தி.மு.க.  செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், பண்ருட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சபா.ராஜேந்திரனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்!
 கட்சிக்காரர்கள் மத்தியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 'நானே ராஜா, நானே மந்திரி’ என்பதுபோல செயல்படுவதும், அதை சபா.ராஜேந்திரன் கேள்வி கேட்பது மாக, இருவருக்கும் இடையில் பிரச்னைகள்
ஏராளம். அந்தத் தகராறு இப்போது வெளிப்படையாகவே வீதிக்கு வந்துவிட்டது.
'சமச்சீர் கல்வியை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் வரும் 29 மற்றும் 1-ம் தேதி தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் செய்ய வேண் டும்’ என்று கட்சி மேலிடம்உத்தரவு போட்டது. அதையட்டி சிதம்பரத்தில், 26-ம் தேதி மாலை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் களேபரமும் அடிதடியுமாகஅதகளமானது. பலருக்கு மண்டைகள் உடைபட்டு, ரத்தம் வழியத் தொண் டர்கள் சிதறி ஓட... அந்த இடமே ரண களம் ஆனது!
கூட்டத்தில் கலந்துகொண்ட சபா.ராஜேந்திரனிடம் பேசினோம். ''எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் அக்கா மகன் செந்தில்தான், சிதம்பரம் நகரச் செயலாளர். அவர்தான் திட்டம் போட்டு, தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினார். பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் பேசிய எல்லோர் மீதும் கூலிப் படையை ஏவி, கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளார். 20-க்கும் மேற்பட்ட அடியாட்கள் வெளியே நின்றுகொண்டு, 'நீ யாரு ஆளு?’ எனக் கேட்டுப் பலரையும் அடித்து விரட்டினார்கள். இந்தத் தாக்குதலில் நான்கு பேருக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கார்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்கள். இந்தக் கலவரத்தைப்பற்றி, புகார் தரும்படி காவல் துறையினர் கேட்டார்கள். இது உட்கட்சிப் பிரச்னை என்பதால், நான் புகார் கொடுக்கவில்லை. ஆனால், இந்தப் பிரச்னையைக் கட்சி மேலிடத்துக்குக் கொண்டுசென்று, நிச்சயம் நியாயம் கேட்பேன்!'' என்றார் காட்டமாக.
மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமோ,  நகர தி.மு.க. செயலாளர் செந்திலோ, விளக்கம் அளிக்கத் தயா ராக இல்லை. இருவருமே பேச மறுத்துவிட்டனர். அவர்கள் தரப்பைச் சேர்ந்த ஜேம்ஸிடம் பேசியபோது, ''அங்கே நீங்கள் சொல்கிற மாதிரி எந்தக் கலவரமும் நடக்கவில்லை. ஏதோ டிரைவர்களுக்குள் தகராறு என்றுதான் கேள்விப்பட்டேன். அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் கட்சிக்காரர்கள்தான். சபா.ராஜேந்திரனின் தம்பி பாலமுருகன்தான் வெளியாட்களைக் கொண்டுவந்தார்...'' என்றார்.
''தி.மு.க-வுக்கு ஏற்கெனவே இருக்கும் கெட்ட பெயர் போதாது என்று, இவர்கள் இப்படி மல்லுக்கட்டுகிறார்களே!'' என்று உடன்பிறப்புகள் கதறுவது, கட்சித் தலைமைக்குக் கேட்கிறதா?

நன்றி: ஜுவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010