********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மூன்று முறை தூக்குக் கயிறைத் தொட்டும் தப்பிய குருசாமி! ஒரு ஃப்ளாஷ்பேக் கதை!

Wednesday, August 17, 2011

ராஜீவ் கொலை வழக்கு மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டன. 'அடுத்து என்ன ஆகுமோ?’ என ஒரு பக்கம் அதிர்ச்சியில் உறைய... மூன்று முறை கருணை மனு நிராகரிக்கப்பட்ட தமிழகக் கைதி ஒருவர், உயிர் மீண்டதை நம்பிக்கை​யாகச் சொல்கிறார்கள்,
மனித உரிமை ஆர்வலர்கள். வெள்ளையர்களால் தூக்கில் இடப்பட்ட கட்டபொம்​மனின் வாரிசான குருசாமி
என்பவர்தான், இப்படித் தப்பித்து வந்தவர்!
மாமனாரைக் கொலை செய்த வழக்கில், நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால், குருசாமிக்கு 1974-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்து, '1977 ஜூன் 15-ம் தேதி குருசாமிக்குத் தூக்கு’ எனத் தேதியும் குறிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அவர் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில், மிசா சட்டம் அமலில் இருந்தது. நாடு முழுவதும் தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். இப்படிக் கைதான வைகோவும் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
குருசாமியின் சிலம்பாட்டம், தேவராட்டம் மற்றும் அவர் ஜக்கம்மா பாடல்கள் பாடியது ஆகிய​வை, வைகோவை ஈர்த்தன. அவரைப்பற்றி விசாரித்தபோது, ''குடும்ப சொத்து விவகாரத்தில் என்னை என் மாமனார் ஆயுதத்துடன் தாக்க வந்தார். தற்காப்புக்காக நான் திருப்பித் தாக்கியதில், அவர் இறந்தார். அதற்காகத்தான் எனக்கு இந்த தண்டனை.'' என்று குருசாமி சொன்னார். அதைக் கேட்டதும், 'சட்டப்படி அவரை விடுதலை செய்ய முடியுமா?’ என வைகோ சிந்தித்தார்.
சிறைவாசம் முடிந்து வெளியே வந் ததும், குருசாமியைக் காப்பாற்றும் வேலையில் இறங்கினார் வைகோ. ஏற்கெனவே, குருசாமியின் கருணை மனு நிராகரிக்கப்​பட்ட நிலையில், 38 எம்.பி-க்களின் கையெழுத்துப் பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர்
சஞ்சீவரெட்டியிடம், மனு கொடுத்தார்.  இடைக்காலத் தடை கிடைத்தாலும், இறுதியில் குருசாமியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 'அரசாங்கம் சொல்வதை என்னால் மீற முடியவில்லை.’ என்று சஞ்சீவிரெட்டி கையை விரித்துவிட்டார்.
எனவே, இரண்டாவது முறையாக, குருசாமியைத் தூக்கிலிட நாள் (1981 செப்டம்பர் 15-ம் தேதி) குறிக்கப்​பட்டது. உடனே, 50 எம்.பி-க்களின் கையெழுத்தோடு, மீண்டும் குடியரசுத் தலைவரிடம் செப்டம்பர் 8-ல் மனு கொடுத்தார் வைகோ. மறுபடியும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்​ளுபடி செய்யப்படவில்லை.
இதற்கிடையில், 'கட்ட பொம்​மனின் வாரிசுதானா குருசாமி?’ என்பதை அறிந்து சொல்லும்படி, தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது. அந்தப் பணி முடிய ஒரு வருடம் ஆனது. இந்நிலையில்,
சஞ்சீவரெட்டியை அடுத்து குடியரசுத் தலைவர் ஆன ஜெயில் சிங், குருசாமியின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மூன்றாவது முறையாக, குருசாமியைத் தூக்கிலிட நாள் (1984 ஜூன் 14-ம் தேதி) குறிக்கப்பட்டது. தகவல் அறிந்த வைகோ, மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையின் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார். அதன்படி, சிறையில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றப் பதிவாளருக்கும் குருசாமி சார்பில் தந்திகளை அனுப்பினார். குருசாமியின் தூக்குத் தண்டனையைத் தடுக்க இரண்டு நாட்கள்தான் அவகாசம்... ஆகவே, அவரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டார், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தூர்கர் அப்போதுதான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை​யில் தங்கி இருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை ஆகிவிட்டது, எப்படியாவது குருசாமியின் தந்தியை மனுவாக ஏற்று, வழக்கை விசாரிக்க அனுமதி பெற்றாக வேண்டும். ஒருவழியாக நீதிபதியைச் சந்தித்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், வழக்கைப்பற்றி விவரித்தார். முழுமையாகக் கேட்ட நீதிபதி சந்தூர்கர், வழக்கை எடுக்க அனுமதிதந்தார்.
குருசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், மறுநாள் மாலை 4.30-க்குள் சிறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தால்தான், தண்டனையை நிறுத்த முடியும் என்பதால், சம்பந்தப்​பட்டவர்​களுக்கு பதற்றம். மறுநாள் மதியம் 2.30 மணிக்கு, நீதிபதிகள் ராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. கட்டணம் வாங்​காமலே, குரு​சாமிக்காக வா​தாடி​னார், என்.டி.​வான​​மாமலை. அவ​ருடன் ஐ.சுப்பிரமணியமும் ஆஜர் ஆனார். விசாரணைக்குப் பிறகு, குருசாமியின் தண்ட​னைக்கு இடைக்​காலத் தடை விதிக்கப்​பட்டது. அது மட்டும் இல்லாமல், 'தடை உத்தரவை சிறைக்குத் தெரிவிக்க வேண்டும்; அரசின் கருத்தையும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தர​விட்டனர். அதன்படி, தண்டனை நிறுத்தப்பட்டது.
27 ஆண்டுகளுக்கு முன்பு, செல்​போன், ஃபேக்ஸ் எல்லாம் பரவலாகாத காலத்தில், 24 மணி நேரத்தில், குருசாமியின் மரண தண்டனையை நிறுத்தப்​பட்ட முயற்சியை, இன்று நினைத்துப் பார்த்தால் பெரும் மலைப்​பாகத்​தான் இருக்கிறது.
தொடர்ந்து, குருசாமியின் மரண தண்டனையை ஆயுள் தண்ட​னையாகக் குறைக்கும் முயற்சி மேற்​கொள்ளப்பட்டது. அவரது நன்னடத்​தைபற்றிய சான்றிதழ்​களுடன் உயர் நீதிமன்​றத்தில் மனு தாக்கல் செய்யப்​பட்டது. 'இந்த வழக்கில் என்ன நடக்கும்?’ என தமிழகம் முழுவதும் கடும் பரபரப்பு... ஆனால் குரு​​சாமியோ, எந்த உணர்ச்சியையும் காட்டிக்​​கொள்ளாமல், 'ஒருவேளை, தான் தூக்கிலிடப்​பட்டால், தன் உடலை வைகோவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
தீர்ப்பு நாள் வந்தது. ''குருசாமியின் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது'' என நீதிபதிகள் ராமசாமி, டேவிட் அன்னுசாமி பெஞ்ச் தீர்ப்பளித்தது. 'மரண தண்டனையை நிறைவேற்று​வதில் தாமதம் ஏற்பட்டால், அதுவே மரண தண்டனையைக் குறைக்கப் போதுமான காரணமாக இருக்கும்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில்தான், இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
தூக்குக் கொட்டடியில் இருந்து தப்பிய குருசாமி, ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டு, 10 வருடங்களுக்கு முன்பு விடுதலை ஆனார். நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் குடும்பத்தினருடன் வசித்து, இயற்கை மரணம் அடைந்தார். அவருக்குக் கிடைத்த நீதி, 'அநியாயமாகக் குற்றம்சாட்டப்பட்​டார்கள்’ என பலமாக வாதிடப்படும் ராஜீவ் கொலை வழக்கு தண்டனைக் கைதிகளுக்கும் பொருந்தாதா?

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010