********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

''தங்கபாலு தப்பிக்க முடியாது!''

Sunday, August 14, 2011

காங்கிரஸில் காமெடி கலாட்டா!
ரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லாமல் எப்போதும் போல், 'டெரர் லைட்’டிலேயே இருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர்(?) தங்கபாலு. சத்தியமூர்த்தி பவனில் தள்ளுமுள்ளு, சட்டை கிழிப்பு என்று தினம் தினம் தீபாவளி வெடிக்கிறது. காரணம் இதுதான்... 
தேர்தல் நேரத்தில் தங்கபாலுவின் நடவடிக்கைக​ளைக் கண்டு பொங்கி எழுந்த காங்கிரஸின் நிர்வாகிகள் சிலர், 'காங்கிரஸ் சீரமைப்புக் குழு’ ஒன்றை ஏற்படுத்தினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளர் இதயத்துல்லா, அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் ஜி.ஏ. வடிவேலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில அமைப்புச் செயலாளர் கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோர் இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினர்கள். கடந்த 9-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் இவர்கள் தங்கபாலுவுக்கு எதிராகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முயன்ற நேரத்தில், சில பேர் திடீரெனப் புகுந்து இவர்களை விரட்டி அடித்துப் பெரும் களேபரமானது.
இதுகுறித்து இதயத்துல்லாவிடம் கேட்டோம். ''கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இருந்தே தங்கபாலுவின் எண்ணம், செயல் எல்லாமே பொய், பித்தலாட்டம் நிறைந்து இருந்தது. தகுதி இல்லாத வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் இருந்து லாபம் பார்த்தார். வேட்பாளர் தேர்வில் அனைத்து வகுப்பினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் தரவில்லை. தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவை, தன் நண்பர் என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டவருக்கு ஸீட் கொடுத்தார். இதை எல்லாம் கண்டித்து அப்போதே நாங்கள் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தோம். தங்கபாலுவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அறிவுரைகள் சொன்னோம். ஆனால், அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. அதனால் தேர்தலில் கட்சிக்குப் படுதோல்வி கிடைத்தது. உடனே நாங்கள் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான மோதிலால் வோரா, பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரை சந்தித்து தங்கபாலு மீது புகார் கொடுத்தோம். அதையடுத்து தங்கபாலு தானே ராஜினாமா செய்வதாக நாடகம் ஆடினார்.

உடனே அடுத்த தலைவரை அறிவிப்பதில் நடைமுறை சிக்கல் இருந்ததால், தற்காலிகமாக இவரே இருக்கட்டும் என்று முடிவு செய்தது தலைமை. தற்காலிகத் தலைவராக இருப்பவர், கட்சியின் அன்றாடப் பணிகளைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர வேறு அதிகாரங்கள் இல்லை. ஆனால், எங்களைப் போன்று கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களை நீக்கினார். எங்களை நீக்குவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. கட்சித் தலைமைக்குதான் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. அதுவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இப்படி எங்களை நீக்கியதன் மூலம் கட்சியின் விதிமுறைகளை மீறிவிட்டார் தங்கபாலு...'' என்றார் ஆவேசமாக!
மூத்த நிர்வாகியான வடிவேலு, ''சமீபத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே நில அபகரிப்புப் புகார் கொடுப்பார்கள்!’ என்றார். அது உண்மைதான். சேலம் மாவட்டத்தில் இருக்கும் கருமந்துறை அருகே கல்வராயன் மலையில் 1,000 ஏக்கருக்கு மேல் மலைவாழ் மக்களுக்கான நிலத்தை தங்கபாலு சொந்தம் கொண்டாடுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் செல்வராஜ் என்பவர் ஆதாரங்களைத் திரட்டி வருகிறார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் தங்கபாலு மீது நில அபகரிப்புப் புகாரை போலீஸில் கொடுக்க இருக்கிறோம்.
இது தவிர, சென்னை பழைய மகாபலி​புரம் ரோட்டில் உள்ள கல்லூரிக்கு சலுகை​யை எதிர்பார்த்​தும் தன் தவறுகளை மறைப்பதற்​காகவும்தான் கடந்த ஆட்சியில் கருணாநிதிக்குத் துதி பாடினார். அதையாவது கூட்டணி தர்மம் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்போது..? எதிர் கூட்டணியில் இருக்கும் முதல்வர் ஜெயல​லிதாவின் பட்ஜெட்டை, ஆஹா... ஓஹோ என்று புகழ்கிறார். நில அபகரிப்புப் புகாரில் தன் மீது எந்த நடவடிக்கையும் வந்துவிடக் கூடாது என்று பயந்துதான் இப்படிப் புகழ்கிறார். ஆனால், ஜெயலலிதா இந்தப் புகழ்ச்சிக்கு எல்லாம் மயங்குபவர் அல்ல. அதனால் விரைவில் தங்கபாலு மீது நடவடிக்கை இருக்கும். அவர் தப்பிக்க முடியாது!'' என்றார்.
அடுத்துப் பேசிய கவிஞர் ஜோதிராமலிங்கம், ''தங்கபாலுவின் அச்சமற்ற கொட்டத்துக்குக் காரணம், மேலிடப் பார்வையாளர் குலாம்நபி ஆசாத் அவர் பக்கம் இருப்பதுதான். குலாம்நபிக்கு தமிழக காங்கிரஸ் மீது சிறிதும் அக்கறை கிடையாது. அவர் பொறுப்பு வகிக்கும் தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு பயங்கர சறுக்கல். ஆந்திராவில் காங்கிரஸ் இரண்டாகிவிட்டது. கர்நாடகா, பாண்டிச்சேரியில் ஆட்சியேஊத்திக் கொண்டது. தமிழகத்தில் சொல்லவே தேவை இல்லை. கேரளாவுக்கு அகமது படேல் பொறுப்​பாளராக இருக்க... அந்த மாநிலம் தப்பித்தது. தங்கபாலுவுக்கு குலாம் கொடுக்கும் சலுகைகளுக்கு காரணம் என்ன என்பதை கட்சிக்குள் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்!'' என்றார் ஆவேசமாக.

நன்றி: ஜுவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010