********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்! - முகவை அப்பாஸ்

Friday, August 26, 2011بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.
பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க;http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது.
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
********************************************************************************************

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010