********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்! - முகவை அப்பாஸ்

Friday, August 19, 2011

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில்  விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே 'பரேலவி'யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;

1 .ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)  நூல் முஸ்­லிம் 1774

இறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த  விமர்சனம் பாரீர்;
"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். "மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ
இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் "கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். "பகீஃ" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.
அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் "ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)
நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து "பகீஃ" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)
"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்" என்று கேட்டேன்.
"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் "ஒன்றுமில்லை" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.
இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு  ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.
பீஜேயின் ஆதாரம் 2 ;
நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்
மேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்;
பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.
"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.
இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.
இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.
இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.
இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத் 1987 மே]
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான  பொது அனுமதியாக கருத  முடியாது என்று அன்று சொன்ன  பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார்.
கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­லி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.
ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள். 
என்று கூறி  பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
-முகவை அப்பாஸ்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010