இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் பேசுவது... ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையைத்தான்! இந்த நிமிடத்தில், 24 காரட்
கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 26,000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அது
27,000-க்கு மேல் அதிகரிக்கும்என்பது நிபுணர்களின் கணிப்பு. 'ஏன் இந்த உயர்வு?’ என அறிந்து
கொள்ள, சென்னை யில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் பாபி எஸ்.ஸ்ரீனிவாசனை சந்தித்தோம். ''தங்கம் விலை உயர்வுக்குப் பல காரணங் கள் இருக்கின்றன. இருந்தாலும், சிலவற் றைச் சொல்கிறேன்...'' என்று ஆரம்பித் தார்.
கையிருப்பு குறைவு!

உலகம் முழுக்கத் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 3,550 டன்னாக இருக்கிறது. ஆனால், நமக்குக் கிடைப்பது 2,450 டன்தான். அதாவது, பற்றாக்குறை சுமார் 1,100 டன். மேலும், உலக அளவில் பூமிக்கு அடியில் வெறும் 22,000 டன் தங்கம்தான் மொத்தமே இருப்பதாகக் கணக் கிடப்பட்டு உள்ளது. தங்கத்தை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், தங்கத்தை எடுப்பதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதன் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது.
மற்ற முதலீடுகளில் லாபம் இல்லை!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல வங்கிகள் அண்மை ஆண்டுகளில் மஞ்சள் கடுதாசி (திவால்) கொடுத்து வருகின் றன. இதனால், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தவர்கள் கதி அதோ கதிதான். விளைவு, அசலுக்கு மோசமில்லாமல் பாதுகாப்புக் கருதி ஃபிக்ஸட் டெபாசிட்களில் செய்வதை தவிர்த்துவிட்டு, தங் கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தங்கமாக மாற்றுகின்றன.
டாலர் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்கா டாலரின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது, அமெரிக்க டாலராக வைத்திருப்பதற்கு பதில் தங்கமாக வாங்கி வைத்துவிட்டால், அதன் விலை எப்படியும் உயரும். தேவை ஏற்படும்போது தங்கத்தை விற்று செலவு செய்துகொள்ளலாம் என்கிற மனநிலை அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பரவிவிட்டது. இது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
முதலீட்டுக் கோணம்..!
ஒரு காலத்தில் அணிந்து அழகு பார்க்க மட்டுமே தங்கத்தை மக்கள் பயன் படுத்தினார்கள். இப்போது அதை லாபகரமான முதலீ டாகப் பார்க்கிறார்கள். சாதாரண மக்கள் பவுன் கணக்கில் வாங்கினால், கோடீஸ்வரர்கள் கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். நாடுகளோ டன் கணக்கில் வாங்கிக் குவிக்கின்றன. அண்மையில்கூட, தென் கொரியாவின் மத்திய வங்கி (நம் ஊர் ரிசர்வ் பேங்க் போல்) 25,000 கிலோ தங்கத்தை வாங்கி இருக் கிறது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடுசெய்வது அதிகரித்துள்ளது.
தொழில் துறை பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் தொழில் துறை குறிப்பாக செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருத்துவத் துறையில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த உபயோகம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், விலை தொடர்ந்து அதிகரித்து அதிக லாபகரமான முதலீட்டு வாய்ப்பாக இருக்கும். சில ஆயிரம் ரூபாய் இருந்தால்கூட தங்கம் வாங்க முடியும் என்பதால், அதனை மக்கள் பெரிதும் விரும்பத் தொடங்கி விட்டனர். மேலும், இதனை அவசரத்துக்கு அடமானம் வைத்து கடன் பெறுவதும் சுலபம். விற்றுப் பணமாக்குவதும் சுலபம் என்பதும் அதனை வாங்குவதற்கான முக்கியக் காரணம்!'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.
நன்றி: ஜூவி
0 comments:
Post a Comment