********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

''லாட்டரியில் ஜெயிலும் கிடைக்குமா?'' மாட்டிக் கொண்ட மார்ட்டின்! மாட்டிக் கொண்ட மார்ட்டின்!

Wednesday, August 17, 2011

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருப்பூரில் தொடரப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றிருந்த லாட்டரி அதிபர் மார்ட்டினை, சேலத்தைச் சேர்ந்தவர் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில் கைது செய்தது போலீஸ்!
லாட்டரிச் சீட்டுத் தொழில் மூலமாக தன்னை வளர்த்துக்கொண்ட மார்ட்டின்,
கடந்த தி.மு.க. ஆட்சியில் தவிர்க்க முடி​யாத சக்தியாக உருவெ​டுத்தார். சேனல், சினிமா தயாரிப்பு நிறுவனம், கல்வி நிறுவனங்கள்
, துணிக் கடை, ரியல் எஸ்டேட் என இன்று மார்ட்டினுக்கு இல்லாத தொழில்​களே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்தார்.
சேலத்தில் அவருக்கு என்ன பிரச்னை?
புகார் கொடுத்த பாலாஜியை சந்தித்தோம். ''92-ம் ஆண்டில் இருந்து 2003-ம் ஆண்டு வரை சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் 'வீரண்ணா பாலாஜி லக்கி சென்டர்’ என்ற லாட்டரிச் சீட்டுக் கடையை நடத்​தி​னேன். அப்போ, மார்ட்டின்கிட்டேதான் பிசினஸ் பண்ணுவோம். லாட்டரிச் சீட்டு மொத்தமா வாங்கும்போது அட்வான்ஸ் கொடுக்கணும். பணம் இல்லாதவங்க, அவங்களோட வீட்டையோ நிலத்தையோ மார்ட்டின் பேருக்கு பவர் எழுதிக் கொடுக்கணும். எனக்கு அப்போ பணம் கட்ட வசதி இல்லாததால், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், வினாயகா மிஷன் மருத்து​வமனைக்குப் பக்கத்தில் இருக்கும் என்னோட 2,850 சதுர அடி நிலத்தை மார்ட்டின் பேருக்கு பவர் எழுதிக் கொடுத்தேன்.
லாட்டரியைத் தடை செய்தபோது, அவருக்குச் சேர வேண்டிய மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணிட்டேன். ஆனால், நான் பவர் எழுதிக் கொடுத்த நிலத்தை, எனக்கே தெரியாம வேற ஒருத்தருக்கு மார்ட்டின் வித்துட்டார். இது தொடர்பாக, தி.மு.க. ஆட்சி இருந்தபோதே நான் போலீஸில் புகார் செய்தேன். ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம், மார்ட்டின் நெருக்கமாக இருந்ததால், போலீஸார் நடவடிக்கை எடுக்கலை. அதுக்குப் பிறகு, மார்ட்டினைச் சேர்ந்த ஆளுங்க என்னுடைய செல்போன் கடையை அடிச்சு சேதப்படுத்தினாங்க.
என்னோட சொத்தை விற்கிறதுக்கு மார்ட்டின்​கூட உதவியாக இருந்தது பெஞ்சமின், மாணிக்கம், மலர்செல்வி, விசித்த மோகனசுந்தரி, பாபு, வெங்கடேஷ் ஆகியோர்தான். இவங்க மீது போ​லீஸ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என  நீதிமன்றத்துக்குப் போனேன். எனது மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அதுக்குப் பிறகுதான், மார்ட்டின் மற்றும் அவரோடு தொடர்புடைய ஆறு பேர் மீதும் போலீஸ் வழக்குப் பதிவு செய்தாங்க...'' என்றார்.
மார்ட்டினுடன் கைதாகி இருக்கும் மற்றவர்களைப்பற்றி விசாரித்தால், தலை சுற்றுகிறது. ''முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உதவியாளராக இருந்த கோபாலின் மனைவிதான் மலர்செல்வி. அமைச்சரின் பி.ஏ-வாக தன் கணவர் இருப்பதைவைத்து, இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்தார். கைதாகி இருக்கும் வெங்கடேஷ், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் 'காதம்பரி பிரஸ்’ என்ற அச்சகம் நடத்தினார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது, அதிகாரத்தில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகர் மூலமாக, பள்ளித் தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சிடும் ஆர்டர் எடுத்தார். அப்படியே ஆட்களைப் பிடித்து, பாடப் புத்தகம் அச்சிடும் அளவுக்கு உயர்ந்தார். தி.மு.க. ஆட்சி மாறியதும், அங்கே போய் ஒட்டிக்கிட்டார். தி.மு.க. ஆட்சியிலும் பாட நூல்களை அச்சிடும் ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது. மலர்செல்விக்கும் மார்ட்டினுக்கும் வியாபார ரீதியான தொடர்புகள் இருந்ததால், மார்ட்டினுக்கு சேலத்தில் பிரச்னை என்றதும், அதை வெங்கடேஷ் மூலமாக டீல் செய்யச் சொல்லி இருக்கிறார் மலர்செல்வி.
இதில் இன்னொரு கொடுமை தெரியுமா? இப்போது அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் சமச்சீர்க் கல்விப் புத்தகத்தில் நீக்கப்பட்ட பாடத்தின் மீது ஒட்டப்படுவதற்கு ஒரு ஸ்டிக்கர் தயாரித்தார்களே... அதற்கான ஆர்டரும் வெங்கடேஷ§க்குத்தான் கொடுக்கப்பட்டது. இந்த விஷயம் தாமதமாக முதல்வரின் கவனத்துக்குப் போக, வெங்கடேஷ§க்கு ஆர்டர் கொடுக்கக் காரணமாக இருந்தவர்களைப் பிடித்துக் காய்ச்சி எடுத்து விட்டாராம். வெங்கடேஷ் பற்றிய பின்னணி விவகாரங்கள் அத்தனையும் விசாரிக்க உளவுத் துறைக்கும் உத்தரவிட்டு இருக்கிறாராம்...'' என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
வழக்கை விசாரிக்கும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் பேசினோம், ''பாலாஜி கொடுத்த புகாரை விசாரணை செய்ததில் உண்மை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகே, மார்ட்டின் உட்பட ஏழு பேரைக் கைது செய்து ரிமாண்ட் பண்ணிட்டோம். கூடிய சீக்கிரமே அவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்தும் விசாரிப்போம்...'' என்றார்.
வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மார்ட்டின், ஜெயில் அலுவலர்களிடம், 'செம் மொழி மாநாட்டில் தங்கும் இட ஏற்பாட் டுக்குழுவில் என்னைப் போட்டு இருந்தாங்க. மாநாட்டுக்கு வந்த அத்தனை வி.ஐ.பி-களையும் வரவேற்று உபசரித்த என்னை இன்னிக்கு சிறைக் குள் கண்டுக்கக்கூட ஆள் இல்லை. இது தான் காலத்தின் கோலமோ!’ என்று புலம்பினாராம்.

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010