********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மஹதீ'யை பின்பற்றத் தயாராகும் ததஜ....? - அப்துல் முஹைமின்

Monday, August 15, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; மஹதீ அவர்களை பின்பற்றத் தயார் என்று       ததஜ அறைகூவல்  விடுத்துள்ளதே?  
 
-அன்வர்தீன், ஈரோடு. 
 
பதில்; பாலக்கோட்டில் மஹ்தீ அவர்கள் வந்துவிட்டார் என்ற கொள்கையுடையவர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு விவாத அறைகூவல் விடுத்துள்ள அண்ணன் ஜமாஅத், ''நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த மஹதீ அவர்கள் இன்னும் வரவில்லை. மஹதீ என்பவர் உண்மையில் வந்துவிட்டார் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக இவர்கள் நிரூபித்து விடுவார்களேயானால் நாம் அனைவரும் அந்த மஹதீயை பின்பற்றத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளது. 
 
நாம் மஹதீ வந்துவிட்டாரா? இல்லையா? என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. அப்படியே மஹதீ வந்துவிட்டார் என்று ஒருவேளை மஹதி'யாக்கள் நிரூபித்து விட்டால் அந்த மஹதியை பின்பற்றத் தயார் என்று அண்ணன் ஜமாஅத் சொன்னது எந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்? எந்த ஹதீஸின் அடிப்படையில் என்று அண்ணன் ஜமாஅத் சொல்லத் தயாரா? மஹதி அவர்களை முஸ்லிம்கள் பின்பற்றலாம் என்பதற்கு  என்ன ஆதாரம்?
 
மேலும் இதே மஹதீ அவர்கள் குறித்து, அடுத்தவன் காசில் தனது பெயரில் நடத்தி வரும் இணையதளத்தில், ''மஹதீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று நபிமொழிகள் முன்னறிவிப்பு செய்கின்றன. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர் காலாத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ளவேண்டும். இதைத்தவிர மார்க்க ரீதியாக மஹதிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறியுள்ள அண்ணன்,
இப்போது மஹதி வந்ததை நிரூபித்து விட்டால் அவரை பின்பற்றத் தயார் என்கிறார். அப்படியானால்  முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய அளவுக்கு மஹதி முக்கியமானவர் என்றால், 'அவருக்கு மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை' என்று அண்ணன் சொன்னது பொய்யல்லவா?
 
இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். மஹ்தீ என்பவர்  வந்து விட்டார் என்று மஹதி'யாக்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் ஒரு பேச்சுக்கு அவரை பின்பற்றத் தயார் என்று சவால் விட்டோம் என்று அண்ணனின் தம்பிகள் ஜகா வாங்கக் கூடாது. ஏனெனில் மஹதீ அவர்கள் இன்றல்ல என்றாவது கண்டிப்பாக வரக் கூடியவரே! அப்படி வந்தால் அண்ணன் ஜமாஅத் அவரை பின்பற்றுவோம்  என்று சொல்வது எந்த ஆதாரத்தின்  அடிப்படையில் என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் மஹதீயை பின்பற்றலாம்   என்று நங்கள் சொன்னது அவர் மன்னர் என்ற உலக ரீதியான அடிப்படையில் என்றும் ஜகா வாங்கக் கூடாது. ஏனெனில் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் கட்டுப்பட சொல்லும் மார்க்கம். எந்த ஆட்சியாளரையும் பின்பற்றச் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010