********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ரத்தம் தெறிக்கும் மதுரை!

Sunday, August 14, 2011

யாருக்காக கொல்லப்பட்டான் பாண்டியராஜன்?
நில மோசடி வழக்குகளில் சிக்கி, 'மிஸ்டர் குண்டாஸ்’ ஆகிவிட்ட பொட்டு சுரேஷ் மீது இப்போது கொ​லை வழக்கும் பாய்ந்து விட்டது! 'ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை பொட்டு சொல்லித்தான் போட்டுத் தள்ளினோம்’ என்று எஸ்ஸார் கோபி வாக்குமூலம் கொடுத்ததால், அந்த வழக்கில் பொட்டு சுரேஷை முதல் குற்றவாளியாக்கி, ரிமாண்ட் செய்திருக்கிறது போலீஸ்! 
பாண்டியராஜன் கொலை வழக்கில் கோபியை விசாரிக்க 10 நாள் காவலில் எடுக்க மனு போட்டது போலீஸ். ஒரு நாள் மட்டும் கஸ்டடிக்கு அனுமதித்தது நீதிமன்றம். ''அந்த ஒரு நாள்லயே கோபி ஏகப்பட்டதைச் சொல்லிட்டான்...'' என்கிறார்கள், விசாரணை டீமில் இருந்த போலீஸ் அதிகாரிகள் சிலர்.
''எஸ்ஸார் கோபியின் சின்னம்மா மகள் தயாளு​வைத்​தான் 'அட்டாக்’ பாண்டி கல்யாணம் கட்டியி​ருக்கார். தா.கி. கொலை வழக்கில் எஸ்ஸார் உள்ளே இருந்தப்ப, அழகிரி வீட்டில் பாதுகாப்பைக் கவனித்த  'அட்டாக்’ பாண்டி, எஸ்ஸார் தரப்பினருக்கு எதிரான விஷயங்களை அழகிரி குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்தார். இதுவும் இன்னும் சில விஷயங்களுமாகச் சேர்ந்து அட்டாக்குக்கும் எஸ்ஸாருக்கும் இடையில் பகை ஏற்பட்டது.
இந்த நிலையில், 'தினகரன்’ பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தனக்கு பதவி மற்றும் கான்ட்ராக்ட்கள் கேட்டு 'பொட்டு’விடமே முஷ்டி மடக்கினார் அட்டாக். மிரண்டு போன பொட்டு, எஸ்ஸார் கோபி மூலமாக 'அட்டாக்’கைத் தட்டி வைக்க நினைத்தார். இதைக் கேள்விப்பட்டு  கடுப்பான அட்டாக், தன் உறவினரான ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை அனுப்பி, பொட்டுவை மிரட்டியிருக்கார். பொட்டு வீட்ல பெட்ரோல் குண்டு வீசுனதும் பாண்டி​யராஜன்தான்னு சொல்றாங்க.
அப்ப பொட்டு சுரேஷ், அதிகாரம் பொருந்திய மனிதராகஇருந்ததால்  தனக்கு நெருக்கமான உளவு அதிகாரியின் மூலமாக பாண்டி​யராஜனை தூக்கிட்டுப்போய் புதூரில் ரெண்டு நாள் அடைத்து வைத்தார்கள். அடிக்கவும் செய்தார்கள். அப்படியும் விடாம, 'இவன் கதைய முடிச்சாத்தான் அட்டாக் பயப்படுவான்’ன்னு கோபிக்கு சிக்னல் குடுத்துருக்காங்க என்பதாக எங்கள் விசாரணை தகவல் சொல்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த கோபி கோஷ்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்தல் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்த விவகாரத்தை வெச்சு, பாண்டியராஜனை அடிச்சு ரோட்ல போட்டு, காரை ஏத்திக் கொன்னுருக்கு. விஷயம் தெரிஞ்சு, எல்லாரையும் அப்பவே மதுரை பெரிய இடத்துல சத்தம் போட்டிருக்காங்க. அப்ப, 'எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்’னு சொல்லி தைரியம் கொடுத்த பொட்டு, அந்தக் கொலையை விபத்தா முடிச்சிருக்கார். அவனியாபுரம் இன்ஸ்பெக்டரா இருந்தவரும்  இதுக்கு உடந்தை. விசாரணையில், கோபியே இதை எல்லாம் சொன்னான். பக்காவா வீடியோ எடுத்துருக்கோம்!'' என்று போலீஸ் தரப்பு சொல்லி அதிர்ச்சியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. அவர்களே தொடர்ந்து பேசினர்...
''கோபியிடம் அழகிரிக்கு எழுதுனதாக சொல்லப்​படும் லெட்டர் சம்பந்தமாவும் விசாரிச்சோம். பண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி, ஒரிஜினல் லெட்​டரையே எங்ககிட்ட கொடுத்துவிட்டார். 'இதை நான் சொல்லச் சொல்ல இன்னாரு எழுதுனாரு’ன்னு ஒருத்தர் பேரையும் சொன்​னார்.
'அழகிரிக்காகப் பல காரியங்களைச் செஞ்​சும், எங்களுக்கு அதுக்கான அங்கீகாரம் கிடைக்​கல. அழகிரிக்காக எதுவுமே செய்யாத பொட்டு மாதிரி ஆளுங்க கோடிகோடியா சம்பாதிச்சு, நெனச்சத சாதிக்கிறப்ப... நமக்குப் பதவி குடுக்கக்கூட அழகிரி யோசிக்கிறாரு’ங்கற வருத்தத்துலதான் அதை எழுதினேன். 'இந்த லெட்டரை வெச்சே அண்ணன்கிட்ட இல்லாததும் பொல்லாததுமா போட்டுக் குடுத்துருவான் பொட்டு’ன்னு எனக்கு நெருக்கமானவங்க சொல்லவே, லெட்டரை அழகிரிக்கு அனுப்பாம வச்சிருந்தேன். அதான் உங்க சோதனையின்போது கிடைச்சிருக்கு. அப்பவே இதைக் கிழிக்காம விட்டதுதான் தப்பாப் போச்சு’ன்னான்.
'பொட்டு சுரேஷை சாதாரணமா நெனச்சிடாதீங்க. அழகிரிகிட்ட இருந்து எங்க சொந்தக்காரங்கள எல்லாம் பிரிச்சதே அந்தாளுதான். 'என்னையும் பிரிச்சுட வேண்டாம்னு உங்க புள்ளைக்கிட்டசொல்லுங்கம்மா’ன்னு பொட்டுவோட அம்மா காலில் விழுந்ததாலதான் மன்னனை மட்டும் அழகிரி பக்கத்துலயே விட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க கத்தி எடுத்துட்டு சுத்துவோம். ஆனா, அதை எடுக்காமலே காரியங்களை செய்வான் பொட்டு. இல்லாட்டி, இதுவரைக்கும் பிரச்னையே வராம இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்ஸார் கோபி. பாண்டியராஜன் கொலைக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் எட்டு பேர் கை மாறி, திருச்சியில இருந்துச்சு. அதையும் கோபியோட கடிதத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சு இருக்கோம்...'' என்று முடித்தனர்.
பாண்டியராஜன் கொலை வழக்கில் கோபியின் அண்ணன் மருதுவும், திருப்பரங்குன்றம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கார்த்திகேயனும் தலைமறைவாக உள்ளனர். இதில் மருது, லீலாவதி கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று அண்ணா பிறந்தநாள் கோட்டாவில் விடுதலை ஆனவர். கொலை வழக்கில் சிக்கியிருப்பதால், அந்த நன்னடத்தை சான்றிதழை ரத்து செய்து மீண்டும் மருதுவை சிறையில் அடைப்பது குறித்தும் சட்ட ஆலோசனை நடத்தும் போலீஸ், கார்த்திகேயனைப் பற்றி இப்படிச் சொல்கிறது...
''எஸ்ஸார் பிரதர்ஸ் எது சொன்னாலும் செய்யக்கூடியவர் கார்த்திகேயன். திருமங்கலம் இடைத்​தேர்தலில் ஸீட் குடுக்கலைங்கிற ஆத்திரத்துல அழகிரிகிட்ட கடுமையா சண்டை போட்டுருக்கார் எஸ்ஸார். அதுல அப்செட் ஆன அழகிரி, 'நான்கூட சாதாரண கார்லதான் போறேன். கோபி  ஃவோக்ஸ்வேகன்ல  போறான்யா! பத்து வருஷம் முன்னாடி சாதாரண காளியம்மா மகனா இருந்தவனுக்கு இதெல்லாம் எப்படி வந்துச்சு? நெனச்சுப் பாக்காம என்னையவே மிரட்டுறான்யா’னுகார்த்திகேயன்கிட்ட வருத்தப்பட்ட அழகிரி, தன் விசுவாசிகளை 'கோபியோட சகவாசம் வெச்சுக்க வேணாம்’னு சொல்லிட்டு, கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சாரு.
இது கோபி தரப்புக்குப் பிடிக்கல. 'எங்களை மீறி நீ அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாது’ன்னு கட்டைய போட்ருக்காங்க. சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன், தன் பிள்ளைகளுக்குக் காதுகுத்து வெச்சப்ப, 'விழாவை அவனியாபுரத்துல வெச்சா, அவனுக (எஸ்ஸார் பிரதர்ஸ்) தங்களோட படங்களைப் போட்டு பெருசு பெருசா ஃபிளெக்ஸ் வெப்பாங்க. நான் வரமாட்டேன்’னு சொல்லிட்டாரு அழகிரி. அதனாலதான் தயா மகால்ல விழாவை வெச்சாரு. ஆனாலும், கோபி கூட்டத்தைப் பகைச்சிக்க முடியாம, அவங்க அண்ணன் தம்பிக நாலு பேரு படத்தையும் பத்திரிகையில போட... அதைப் பாத்துட்டு டென்ஷனான அழகிரி, அந்த ஃபங்க்ஷனுக்கே போகலையாம்!
இவ்வளவு பிரச்னைக்கு நடுவுலயும் திருப்பரங்​குன்றம் தொகுதியில நிக்கணும்கிறதுக்காக 2010-ல் கோபி அலைந்தார் . ஆனா, தொகுதியைத் திட்டம் போட்டு காங்கிரஸுக்கு ஒதுக்கிட்டாங்க. இதுக்கு கார்த்திகேயனும் பொட்டும்தான் காரணம்னு நெனச்ச கோபியோட ஆளுங்க, தேர்தல் சமயத்துல கார்த்திகேயன் வீட்ல பெட்ரோல் குண்டை வீசி டூவீலரை கொளுத்தினாங்க. 'இப்போதைக்கு ஒரு கம்ளெயின்ட் குடுத்து வெச்சிரு. அடுத்தும் நம்ம ஆட்சி தான்... அவனுகள வெச்சிக்​கிறேன்’னு அப்பவே கார்த்திகேயன்கிட்ட அழகிரி சொல்லியிருக்காரு.ஆனா, தேர்தல் முடிவுகள் ஏடாகூட​மானதால, எஸ்ஸார் கோஷ்டிதப்பிச்​சிருச்சு. இப்ப என்னடான்னா, 'கார்த்தி​கேயன்​தான் இன்ஸ்​பெக்டருக்கு  50 ஆயிரம் குடுத்து பாண்டி​யராஜன் கொலை வழக்கை சரிக்கட்​டுனாரு’ன்னு கோபி வாக்குமூலம் குடுத்துருக்கான்...'' என்றனர்.
விசாரணையின்போது, மதுரையை மையப்படுத்தி நடந்த கொலைகள், அடிதடிகள், கட்டப் பஞ்சாயத்துகள், பேரங்கள் உள்ளிட்டவை குறித்து ஒரு பெரிய பட்டியலே கொடுத்த கோபி, யாரைப் பிடித்தால் எதைக் கறக்கலாம் என்பதையும் போலீஸுக்கு ஸ்கெட்ச் போட்​டுக் கொடுத்தாராம். இதை வைத்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது போலீஸ்.
பொட்டு சுரேஷ் பாளை சிறையில் இருப்பதால், மோதலைத் தவிர்க்கத்தான் அட்டாக்​கையும் எஸ்ஸாரையும் திருச்சி ஜெயிலில் வைத்தார்களாம். இதில் வேடிக்​கை, பொட்டுவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முட்டிக்கொண்டு நின்ற எஸ்​ஸாரும் அட்டாக்கும் இப்போது  நேசமாகி விட்டார்களாம். போலீஸ் எதிர்பார்த்ததும் இதைத்தானாம்! இப்போது இருவருமே கோபத்தில் தகிப்பதால், ''உள்ளே இருப்பது​தான் பொட்டுக்கு பாதுகாப்பு'' என்று போலீஸ் தரப்பில் இருந்தே எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு இருக்கிறதாம்.
எஸ்ஸார் வாக்குமூலம் குறித்து மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கார்க்கிடம் கேட்டதற்கு, ''பொட்டு சுரேஷ் சொல்லித்தான் பாண்டியராஜனை கொன்றதாக கோபி வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதனால், பொட்டுவையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளோம். இதில் முக்கியமான மேலும் மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்காங்க. அவங்க யாருன்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. குற்றவாளிகளுக்கு ஆதரவா போலீஸார் யாராவது செயல்பட்டு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். பொட்டு பற்றி மேலும் பல அதிர்ச்சியான தகவல்களைக் கோபி சொல்லியதால், அது சம்பந்தமா விசாரிக்கிறதுக்காக கூடிய சீக்கிரமே பொட்டுவை கஸ்டடியில் எடுப்போம்!'' என்றார்.
''போலீஸார் தன்னிடம் மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக கோபி கோர்ட்டில் சொல்லி இருக்கிறாரே..?'' என்று கேட்டபோது, ''பின்னாடி தப்பிச்சிக்கலாம்கிற திட்டத்துல எல்லா குற்றவாளிகளும் சொல்றதுதான் இது! நாங்க அவனை மிரட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை!'' என்றார் எஸ்.பி.!

நன்றி:ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010