********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு 'அம்மா' தூதர்கள் ஆஃபர்!

Sunday, August 14, 2011

''கட்சியை உடைத்தால் தப்பிக்கலாம்!''
ழுகார் சில கடிதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அட்ரஸ் பண்ணப்பட்ட கடிதங்கள்! அவரே சொல்ல ஆரம்பித்தார்...
 ''சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு உண்டாக்​குவதாகக் காரணம் சொல்லி, சென்னையைச் சேர்ந்த பிரபல
மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றை சீல் வைத்திருக்கிறது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், காரணம் அது மட்டுமே இல்லையாம்! 'தேர்த​லுக்கு முன்பு தேர்தல் நிதிக்காக அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு முக்கிய நிர்வாகி, அந்த மருந்து கம்பெனி அதிபரை தொடர்பு கொண்டாராம். கேட்டதை விட குறைச்சலான தொகை கொடுத்ததோடு, ஏதோ கமென்ட் அடித்ததாகவும் சொல்கிறார்கள். மருந்து கம்பெனி அதிபரோ இப்போது கோட்டைக்கு நடையாய் நடப்பதோடு, தோழி குடும்பத்தின் மூலமும் முயற்சி செய்து பார்த்து விட்டாராம். அதிகார மையத்​திலோ, 'இது விஷயமா என்கிட்ட யாரும் பேசாதீங்க’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டதாகக் கூறு​கிறார்கள்! என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டு இருக்​கிறார், மருந்து கம்பெனி அதிபர். நான் கொண்டு வந்​திருப்பது அந்த அதிபர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்​பிய கடித நகல்கள்​தான்!''
''காரணம் ரொம்ப சாதார​ணமாக இருக்கிறதே?''
''அப்படியா... இதையும் கேட்டுவிடும்... முதல்வர் சென்று தங்கக்கூடிய சிறுதாவூர் பங்களா இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கிறது இந்த கம்பெனி, போதுமா? சுற்றுச்​சூழல் மாசு எப்படி பாதிக்கும் என்று புரிகிறதா? மேலும், சில வருடங்களுக்கு முன்னால், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பாய்லர் ஒன்று வெடித்து, ஒருவர் இறந்து போனார். அந்த சம்பவம்கூட புதிய ஆட்சியாளர்களின் மனதில் பச்சென்று பதிந்து இருக்கக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். கம்பெனி உரிமையாளர், ஆந்திரத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவராம். அவர் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்​தையும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்!'' என்ற கழுகார், அந்தக் கடிதங்களை சற்றே தள்ளிவைத்துவிட்டு, தி.மு.க. பக்கம் தாவினார்.
''தி.மு.க-வுக்குள் ஸ்டாலின், அழகிரி இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியை அதிகமாகவே ரசிக்க ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. தரப்பு. இதில் குறுக்குச் சால் ஓட்டி ஏதாவது ஓர் அணிக்குத் தூபம் போடுவதற்கான வேலைகளைச் சில தூதர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு மதுரை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள், ஆர்வத்தை பெருக்கி வருகின்றன. மதுரையில் அழகிரியின் தளபதிகளாக இருந்த பலரும் கைதாக... காந்தி அழகிரி பெயரில் பதிவான ஒரு நிலத்தின் விவகாரமும் வில்லங்கம் ஆகியுள்ளது. 'உங்களை வளைப்பதற்கு போலீஸ் தயாராக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக ஏராளமான வழக்குகள், வாக்குமூலங்கள் உள்ளன. இந்தச் சுழல் சர்ச்சைகளில் இருந்து போலீஸ் உங்களை விடுவிக்க வேண்டுமானால் எங்களுக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். எப்படியானாலும் ஸ்டாலின்தான் தி.மு.க-வின் அடுத்த தலைவராக வரப் போகிறார். அதை எதிர்த்து இப்போதே கட்சிக்குள் புரட்சியைத் துவங்குங்கள். உங்கள் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு, 'நாங்களே உண்மையான தி.மு.க.’ என்று கோஷம் கிளப்புங்கள்’ என்று ஐடியாவும் அனுப்பி வைத்திருக்கிறார்களாம் இந்த சில்மிஷ தூதர்கள். இப்படியரு ஆஃபர் எந்தளவுக்கு அழகிரியிடம் எடுபடுமோ..?''
''அதையும் விசாரித்திருப்பீரே..?''
''அழகிரிக்கு நெருக்கமான மதுரை ஆட்களிடம் விசாரித்தேன். 'நீங்கள் சொல்வது மாதிரி சிலர் எங்கள் காதுபட பேசி, தூதுவிட நினைப்பது உண்மைதான். ஆனால், அண்ணன் இந்த உடன்பாட்டுக்கு தயாராகவே மாட்டார். எங்களைப் பொறுத்த வரையில், அவர்தான் எப்படியும் அடுத்த தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாலின் அந்த இடத்தில் வந்து உட்காருவது அதிகாரபூர்வமாக முடிவானால், நாங்களாகவே புரட்சி கீதம் இசைக்கத்தான் போகிறோம். மற்றபடி அ.தி.மு.க. ஆட்களை நம்பி நாங்கள் எதையும் செய்வதற்கில்லை. கட்சியில் சில விஷயங்கள் அழகிரிக்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தலைவரை அந்தளவுக்கு நோகடிக்கும் காரியத்தை அண்ணன் செய்யமாட்டார்!’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆனால் ஆளும் தரப்போ... 'அவரவர் வலி அவர்களுக்குத்தான் தெரியும். ஒருபுறம் சோதனை கொடுத்தபடியே, மறுபுறம் வரம் கொடுக்க தூது விடுவோம்' என்று தளராமல் சொல்லி வருகிறதாம்!''
''ஓ!''
''இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் எல்லாச் சிறைகளுக்கும் விசிட் அடித்து கோஷ்டிகளைக் கடந்து ஆறுதல் கூறுவதைப் பார்க்க வேண்டி உள்ளது. அழகிரிகூட பாளை சிறைக்குச் சென்று மதுரை ஆட்களை மட்டும் பார்த்தார். ஆனால் ஸ்டாலின், எல்லாச் சிறைகளையும் வலம் வந்து​விட்டார். பாளை சிறையில் இருந்த திருவாரூர் பூண்டி கலைவாணனை ஸ்டாலின் சந்தித்தபோது, 'பொட்டு’ சுரேஷ§ம் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் வைத்தாராம். 'உங்க மேல இன்னிக்கும் ஒரு கேஸ் போட்டிருக்காங்க போல’ என்று பரிவாக ஒரு வார்த்தை சொல்லி வைத்தாராம் ஸ்டாலின். அப்படியே திருச்சி சிறைக்கு வந்தவர், அங்கு 'அட்டாக்’ பாண்டியை சந்தித்தார். இதெல்லாம் மதுரை தி.மு.க-வினர் கவனத்தை ஸ்டாலினை நோக்கித் திருப்பி உள்ளதாம். திருச்சி பிரமுகர் காஜாமலை விஜய்யும் அந்தச் சிறையில்தான் இருந்தார். 'நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. வழக்குகளை எல்லாம் சட்டப்படி சந்திப்போம். உங்கள் பின்னால் கட்சி இருக்குது!’ என்று ஸ்டாலின் சொல்ல... 'நீங்க வந்து பார்த்ததே போதும் அண்ணே... நாங்க எதுக்கும் கலங்க மாட்​டோம்!’ என்று சிறையில் இருந்தவர்கள் உருகி விட்டார்களாம்...''
''ம்... தி.மு.க-வுக்கு இதுவும் ஒருவித 'மிசா' காலம்தான்!''
''ம்! முக்கியமாக நில மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைப் பார்த்து கருணாநிதிதான் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளாராம். 'இந்தக் கைதுகளுக்குத் தடை வாங்கும் வகையில் பேராசிரியர் அன்பழகனை வைத்து மொத்தமாக ஒரு வழக்குப் போடலாமே’ என்று யாரோ ஆலோசனை சொல்ல... அதில் அன்பழகனுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால், வழக்கறிஞர் அணித் தலைவர் ஆலந்தூர் பாரதியை வைத்து மனு ஒன்று ரெடி ஆகிறது!'' என்று சொன்ன கழுகார்,
''நடிகர் வடிவேலுவைச் சுற்றி வலை இறுகிக் கொண்டிருக்கிறது. உமது நிருபரை முடுக்கிவிடும்! '' என்று உத்தரவு போட்டுவிட்டு பறந்தார்.
படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
மூன்று உயிர்கள் தப்புமா?
'ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்’ என்ற தகவல் பரவியதை தொடர்ந்து தமிழின உணர்வாளர்கள் மத்தியில் ஒரே பதற்றம்.
''இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும் நிலையை தமிழக கட்சிகள் உருவாக்கிய நேரத்தில், 'ஹெட்லைன்ஸ் டுடே’ சேனல், போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை நேரடியாகச் சென்று, பேட்டி எடுத்து ஒளிபரப்பியதும், இலங்கை அரசின் போர்க் குற்றச்சாட்டு மேலும் வலுவாகி வருகிறது. இலங்கைக்கு இந்திய அரசு உதவிய நிலையில், அகில இந்திய அளவிலான ஈழ மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டிய நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டது. இந்த நிலையில்தான், மூவரின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!'' என்று தமிழின உணர்வாளர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ''ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலனாய்வுக் குழு, இன்னும் விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. உண்மைகளைக் கவனத்தில்கொள்ளாமல், கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கையில் இறங்குவோம்!'' என்று பழ.நெடுமாறன் அறிவித்து இருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணை வேண்டும் என வலுவாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மூவரின் உயிர் தப்புமா? என்பது பெரும் கேள்வியாக தொக்கி நிற்கிறது!
கர்நாடகாவில் ஒரு ஓ.பன்னீர் செல்வம்!
அப்பாடா... கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் ஓய்ந்து விட்டது.
'1600 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா’ என லோக் ஆயுக்தா அறிக்கை வெளி யான பிறகும், நாற்காலியை விட்டு இறங்காமல் அடம் பிடித்த எடியூரப்பாவை குண்டுக் கட்டாக இறக்கி விட்டது பி.ஜே.பி. மேலிடம்.
ஆனாலும், எடியூரப் பாவின் கட்டளைப்படி அவரது விசுவாசியான சதானந்த கவுடா முதல்வர் ஆக்கப்பட்டு உள்ளார். கர்நாடகாவில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் முதல்வர் ஆக முடியாது என்பது எழுதப்படாத சட்டம். எடியூரப்பா லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். சதானந்த கவுடா ஒக்கலிகர். கர்நாடகத்தில் பெரும்பதவிக்கு வருபவர்கள் மடாதிபதிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான மடாதிபதிகள் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. எனவே அவர்களின் பேராதரவைப் பெற்ற எடியூரப்பாவின் கைப்பாவையான சதானந்த கவுடாவை முதல்வர் ஆக்க ஒப்புதல் அளித்தனர். முதல்வர் பதவி ஏற்றவுடன் சதானந்த கவுடா, கீழே முதல் வரிசையில் 'உர்’ரென உட்கார்ந்து இருந்த எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பத்திரிகையாளர்களிடம் பேசிய போதும் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார். இதைப் பார்த்து, 'கர்நாடக ஓ.பன்னீர் செல்வம்’ என, சதானந்த கவுடாவைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் கமென்ட் அடித்தவுடன் குபீர் சிரிப்பு எழுந்தது.

நன்றி: ஜூவி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010